Latest Updates
-
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
பாகுபலி போல கட்டுமஸ்தான உடலில் பட்டையைக் கிளப்பும் ஸ்ரீசாந்த் - புகைப்படம் மற்றும் வீடியோ!
பாகுபலி போல கட்டுமஸ்தான உடலில் பட்டையைக் கிளப்பும் ஸ்ரீசாந்த் - புகைப்படம் மற்றும் வீடியோ!
இந்தியாவில் ஸ்ரீசாந்த் போன்ற ஒரு ஆக்ரோஷ பந்துவீச்சாளரை அதற்கு முன் யாரும் கண்டதில்லை. வெங்கடேஷ் பிரசாத், ஜவகல் ஸ்ரீநாத் என யாரை எடுத்து பார்த்தாலும் அவர்கள் ஸ்ரீசாந்த் அளவிற்கு ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியது இல்லை.
குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பல போட்டிகளில் ஸ்ரீசாந்த் தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். விக்கெட் எடுத்தாலும், சிக்ஸர் அடித்தாலும் தனக்கே உரிய பாணியில் நடனம் ஆடுவது போன்றவரை ஸ்ரீசாந்த்திடம் பலருக்கு பிடித்த விசயம். சிலர் இதே காரணம் கொண்டு இவர் மீது எதிர்மறை கருத்துக்கள் வைத்ததும் உண்டு.

இந்திய அணியில் ஒரு நிலையான இடம் பிடித்திருந்த போதுதான் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தனது இடத்தை இழந்தார் ஸ்ரீசாந்த். இது ஸ்ரீ சாந்த் சார்ந்து எழுந்த முதல் சர்ச்சை அல்ல. ஒருமுறை மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிக் கொண்ட போது ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்த் கண்ணத்தில் அறைய, அவர் சிறு பிள்ளை போல கண்ணீர் விட்டு அழுதார்.
ஆனால், இப்போது ஸ்ரீசாந்தை அதே போல அடிக்க துளி அளவு கூட யோசிக்க மாட்டார் ஹர்பஜன் சிங். சூதாட்ட சர்ச்சைக்கு பிறகு இந்திய அணியில் இருந்து வெளியேறிய ஸ்ரீசாந்த் இப்போது பார்பதற்கு ஒரு மஸ்குலர் ஹல்க் போல தோற்றமளிக்கிறார்.
புதிய படம்!
சமீபத்தில் ட்ரெயினர் போன்ற ஒரு நபருடன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து முடித்தது போன்ற படத்தை வெளியிட்டிருக்கிறார் ஸ்ரீசாந்த். இந்த படம் சமூக தளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்த படத்தை பார்ப்பவர்கள் எல்லாம், ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை பார்த்தால் அவரை அடித்ததற்கு வருத்தப்படுவார் என்றும், அல்லது இனிமேல் அவரை அடிக்க நினைத்தால் சற்றும் யோசிக்காமல் பின்வாங்கிவிடுவார் என்றும் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.
ஃபிட்னஸ்!
இப்போது ஸ்ரீசாந்த் ஒரு முழுக்க முழுக்க ஃபிட்னஸ் ஃப்ரீக் போல மாறிவிட்டார். ஜிம்மே கதி என இருப்பார் போல. தனது இன்ஸ்டாகிராம் முகவரியில் பல உடற்பயிற்சி படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார் ஸ்ரீசாந்த். கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டு உடற்கட்டை கட்டுமஸ்தாக ஏற்றி இருக்கிறார் ஸ்ரீசாந்த்.
ரியாஸ் கான்!
ஸ்ரீசாந்த் வெளியிட்டிருந்த ஒரு ஃபிட்னஸ் வீடியோ பதிவில் தென்னிந்திய சினிமா நடிகரும் மற்றுமொரு ஃபிட்னஸ் ஃப்ரீக் பிரபலமான ரியாஸ் காணும் உடன் இருக்கிறார். இருவரும் ஒரே ஜிம்மில் தான் உடற்பயிற்சி மேற்கொள்கிறார்கள் போல. ரியாஸ் கான் பல தமிழ் நடிகர்களுக்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொல்வதற்கு ஒரு முன்னுதாரணமான நடிகர். இவர் சிலருக்கு பயிற்சியில் உதவியும் செய்கிறார்.
நடிப்பு!
ஸ்ரீ சாந்த் கிரிக்கெட் விட்டு வெளியேறிய பிறகு என்ன ஆவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சொல்லப் போனால் ஸ்ரீ சாந்த் பற்றி யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை. ஆனால், அவரோ ஃபிட்னஸ், நடிப்பு என்று பிஸியாகிவிட்டார். இவர் ஒரு தொலைக்காட்சி நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் தோன்றினார். பிறகு அக்சர் 2 (இந்தி) மற்றும் டீம் 5 (மலையாளம்) போன்ற படங்களில் நடித்தும் இருக்கிறார்.
பொது நிகழ்சிகள்!
ஃபிட்னஸ், நடிப்பு போன்றவைக்கு இடையே பல கடைகளை சிறப்பு விருந்தினராக சென்று திறந்து வைத்தும் வருகிறார் ஸ்ரீசாந்த். ஒரு வேலை கிரிக்கெட்டில் இருந்திருந்தாலும் கூட, ஒவ்வொரு போட்டியாக ஓய்வு அறிவித்து கடைசியில் கமெண்டேட்டர் வேலை பார்த்துக் கொண்டு தான் இருந்திருப்பார்.
ஆனால், இப்போதே அரசியலிலும் களம் கண்டுள்ளார் ஸ்ரீசாந்த். பாரத ஜனதா கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு 11 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இவர் மொத்தம் 35 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
