Latest Updates
-
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி பச்சடி ரெசிபி - இப்படி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
சன்டே ஸ்பெஷல் திருவனந்தபுரம் சிக்கன் ப்ரை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026-ன் கடைசி சூரிய கிரகணத்தால் தீராத கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Perukku 2026: ஆடிப்பெருக்கு எப்போது? அந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
பூமியின் அழிவு எப்போது வரப்போகிறது தெரியுமா? அதுவும் இப்படித்தான் நடக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க -
நாளை உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
இந்த 4 ராசிக்காரங்க அவங்கள பிடிச்சவங்களுக்காக உயிரையும் கொடுப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் சின்ன வெங்காய குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் கூட்டு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
World Lung Cancer Day 2026: அலட்சியம் செய்யக்கூடாத நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை பகிர்ந்த டாக்டர்!
8.4 கோடி ஏலம் போன மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்திக்கும் நடிகர் விஜய்க்கும் என்ன தொடர்பு?
8.4 கோடி ஏலம் போன மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்திக்கும் நடிகர் விஜய்க்கும் என்ன தொடர்பு?
வாழ்க்கை ஒரு வட்டம்.. இங்க ஜெயிக்கிறான் தோப்பான், தோக்குறவன் ஜெயிப்பான்... மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்திக்கும் விஜய்க்குமான தொடர்பு இந்த வசனம் மட்டுமல்ல... வேற ஒன்றும் இருக்கிறது....

திருமலை படத்தில் நடிகர் விஜய் பேசிய இந்த வசனம் நேற்றைய ஐபிஎல் 2019 வீரர்கள் ஏலத்தில் 8.4 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்ட மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்திக்கு மிகவும் பொருந்தும். நிறைய ரிஜக்ஷன், தோல்விகளை தாண்டி இந்த நிலைக்கு வந்திருக்கிறார் வருண்.
கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வத்தால் வருண் அடைந்த காயங்கள் மற்றும் இழப்பு மிகவும் அதிகம்...

ரிஜக்ஷன்!
13 வயதில் கிரிக்கெட் விளையாட துவங்கினார் வருண் சக்கரவர்த்தி. 17 வயது வரையிலும் வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். வயதுக்குட்பட்ட பிரிவுகளில் தொடர்ந்து ரிஜக்ட் செய்யப்பட்டு வந்த காரணத்தால் கிரிக்கெட்டை விட்டு விலகி படிப்பில் நாட்டம் செலுத்த துவங்கினார் வருண்.

ஆர்கிடெக்ட்!
சென்னையின் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் ஐந்து வருட கோர்ஸ் ஆர்கிடெக்ட் பயின்றார் வருண் சக்கரவர்த்தி. படித்து முடித்த பிறகு ப்ரீ லான்சராக பணியாற்றியும் வந்தார். என்னதான் ரிஜக்ட் ஆனாலும், படிப்பில் கவனம் செலுத்தினாலும் டென்னிஸ் பால் கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடி வந்தார் வருண். அந்த டென்னிஸ் பால் கிரிக்கெட் அவரை மீண்டும் கிரிக்கெட்டுக்குள் இழுத்து வந்தது.

கிளப்!
க்ரோம் பெஸ்ட் கிரிக்கெட் கிளப்பில் வேகப்பந்துவீச்சாளர் ஆல் ரவுண்டராக களம் இறங்கினார் வருண் சக்கரவர்த்தி. ஆனால், காலம் மீண்டும் அவருக்கு துரதிர்ஷ்டவசமான ரிசல்ட்டை கொடுத்தது. காலில் ஏற்பட்ட ஒரு காயத்தால் இரண்டாம் போட்டியிலேயே அவர் விலக வேண்டி நேர்ந்தது.

மிஸ்ட்ரி ஸ்பின்னர்!
18 யார்டு டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களை தனது திறமையால் அவுட்டாக்கி பவுலியனுக்கு திருப்பி அனுப்பும் திறமை கொண்டிருந்த வருண் சக்கரவர்த்தி, கால் காயத்தால் வேகப்பந்துவீச்சாளராக தானே இருக்க முடியாது. சுழற்பந்து வீச முடியுமே என்று கருதினார். அப்போது தான் மிஸ்ட்ரி ஸ்பின்னராக உருவெடுத்தார்வருண்.

புதிய கிளப்!
காயத்தில் இருந்து மீண்டு வந்த வருண் சக்கரவர்த்தி ஜூப்ளி கிரிக்கெட் கிளப்பில் இணைந்தார். ரோபஸ்ட் சென்னை லீகில் விளையாடி வந்த போது பல வேரியேஷன்களை வெளிபடுத்தினார் வருண். 2017-18ம் ஆண்டு 31 விக்கெட்டுகளை வீழ்த்தினார் வருண். இவரது விக்கெட் சராசரி 8.26. மற்றும் எகானமி 3.06 என்ற கணக்கில் வைத்து பட்டையைக் கிளப்பினார் வருண்.

என்ன வேரியேஷன்?
பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்கள் ஓரிரு வேரியேஷன்கள் கொண்டிருப்பார்கள். ஆனால் வருண் சக்கரவர்த்தியால் பல வேரியேஷன்களில் பந்து வீச இயலும்.
- ஆப் ப்ரேக்
- லெக் ப்ரேக்
- கூக்ளி
- கேரம் பால்
- ஃபிளிப்பர்
- டாப் ஸ்பின்னர் மற்றும் பேட்ஸ்மேன்களின் காலுக்கு குறி வைக்கும் ஸ்லைடர் எனப்படும் ஸ்பின் யார்க்கர் பந்து வீசுவதிலும் வல்லவர் வருண்.

தமிழ்நாடு பிரீமியர் லீக்!
இந்த ஆண்டு நடந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் வருண் சக்கரவர்த்தியின் கரியரில் மறக்க முடியாதது.மதுரை பாந்தர் அணிக்காக பந்து வீசிய வருண் மதுரை அணியை முதல் கோப்பை வெல்ல காரணமாக அமைந்தார்.
இந்த தொடரில் பத்து போட்டிகளில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தினார் வருண். இவரது எகானமி 4.7 ஆக இருந்தது. தான் வீசிய பந்துகளில் 52.08% டாட் பால் வீசி இருந்தார் வருண். இவரது விக்கெட் சராசரி 20.89 ஆகும்.

சென்னை சூப்பர் கிங்ஸ்!
மேலும், 2018 ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியின் நெட் பிராக்டீஸ் செஷனில் பந்து வீசும் வாய்ப்பும் பெற்றார் வருண். அதே தொடரில் தினேஷ் கார்த்தியின் அழைப்பை ஏற்று கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்கும் நெட் பிராக்டீஸ் செஷனில் பந்து வீசனார் வருண்.

ஹர்பஜன் பாராட்டு!
நேற்று வருண் சக்கரவர்த்தி 8.4 கோடிகளுக்கு ஏலம் போனதை அறிந்த ஹர்பஜன் சிங். கடந்த ஐ.பி.எல் போட்டிகளில் நெட் ப்ராக்டீஸ்ன் போது நான் வருணை உன்னித்து கவனித்தேன். இவர் இந்திய அணிக்கு விளையாடுவதற்கான திறமை கொண்டவர். செலக்டர்ஸ் இவர் மீது ஒரு கண்ணை வைத்துக் கொள்ளுங்கள். வேகமாகவும், ஆக்ரோஷமாகவும் சுழற்பந்து வீச கூடியவர் வருண். இவர் மற்றுமொரு மிஸ்ட்ரி ஸ்பின்னர் என்று புகழ்ந்து ட்வீட் செய்திருந்தார்.

விஜய் ரசிகர்!
மேலும், வருண் சக்கரவர்த்தி குறித்து சுவாரஸ்யமான தகவல் கூற வேண்டும் என்றால், வருணுக்கு ஸ்நிக்கர்ஸ் சாக்லேட் என்றால் பிடிக்கும். அதைவிட நடிகர் விஜய் என்றால் மிகவும் பிடிக்கும். ஆம்! மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி தளபதி விஜய் ரசிகர் ஆவார்.



Click it and Unblock the Notifications