Latest Updates
-
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
நம்பர் 13 க்குள் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன? ஏன் உலகம் முழுக்க அதை துரதிஷ்டம் என்கிறார்கள்?
எண் 13 பற்றிய நம்பவே முடியாத உண்மைகள் பற்றியும் அதில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் பற்றியும் இங்கே பார்க்கலாம்.
குறிப்பாக இது பெற்றிருக்கும் மத முக்கியத்துவம் காரணமாக உலகில் பெரும்பாலான எண்ணிக்கையில் பேசப்படுகிற எண் 13. கிறித்துவ மதம் "எண் 13" மற்றும் அதன் முக்கியத்துவத்தை பல விதங்களில் பேசுகிறது.

ஆக 13 ஆம் இலக்கத்தின் முக்கியத்துவம் என்ன? அது மதத்தின் முன்னோக்கிலிருந்து மட்டும் குறிப்பிடத்தக்கதா? அல்லது மற்ற முக்கியத்துவத்தையும் அது கொண்டுள்ளதா? இந்தக் கட்டுரை, எண் 13 ன் மத மற்றும் மத சார்பற்ற முக்கியத்துவத்தை நோக்குகிறது. எண் 13 ஏன் நம் வாழ்வில் மிகவும் முக்கியத்துவத்தை ஈர்த்தது என்பதையும், அதன் காரணமாக குழந்தைகளுக்கு வைக்க 13 எழுத்துப் பெயரைக் கூட கருத்தில் கொள்வதில்லை என்று புரிந்து கொள்வோம். அறிந்து கொள்ள மேலும் படியுங்கள்.

எண் 13
கீழ்வரும் உண்மைகள் 13 -ம் எண் மனிதர்களின் ஆழ்மனதில் கூட எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உங்களுக்கு புரியச் செய்யும். இவை அனைத்தும் மனிதர்கள் தங்கள் வாழ்வில் இந்த 13-ம் இலக்கத்தால் சந்தித்த மற்றும் அவர்களைப் பாதித்த நிகழ்வுகளின் தொகுப்பேயாகும், இங்கே சில மனதை உறைய வைக்கும் உண்மைகள் உங்களுக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

எண் 13
1. NO: 13 என்பது மரணம், சாத்தானியவாதம் மற்றும் அமானுஷ்யம் போன்றவற்றை அடையாளப்படுத்துகிறது. இது மாந்திரீகத்தின் மையமாகக் கூட உள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க மர்மமான சக்தியைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.

எண் 13
2. இரகசிய சக்தி மற்றும் இரகசிய அறிவுக்கு பயப்படுபவர்களுக்கு இந்த எண் 13 துரதிர்ஷ்டம் வழங்கும் என நம்பப்படுகிறது . 13 ஆம் எண்ணின் பயம் என்பது டிரிசைகேட்காபியா எனக் குறிப்பிடப்படுகிறது.

எண் 13
3. எல்லா குழந்தைகளும் உலகின் பெரும்பாலான பகுதிகளில் 13 ஆண்டுகள் பள்ளிக்குச் செல்கின்றனர். ஆரம்பத்தில் 12 ஆக இருந்த இது பின்னர் மழலையர் பள்ளியுடன் சேர்த்து 13 ஆனது. 13 வயதில் பள்ளி செல்லும் குழந்தைகள் பெரும்பாலும் கலகம் செய்கின்றனர்.

எண் 13
4. அமெரிக்க டாலர் பில் ஒன்றைக் கவனியுங்கள். அதில் 13 கோடுகள், 13 இலைகள், 13 ஆலிவ்ஸ், 13 பிரமிடுகள் மற்றும் 13 நட்சத்திரங்கள் உள்ளன.

எண் 13
5. 18 -ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் 13 மாநிலங்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக கலகம் செய்தன. அது ஏன் 13க்கு பதிலாக 12 அல்லது 14 ஆக இருக்கவில்லை என்பது யாருக்கும் தெரியாது.

எண் 13
6. அமெரிக்கன் ஸ்டண்ட் மேஸ்ட்ரோ, சாம் பேட்ச் 1829 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ம் தேதி நீண்ட தாண்டுதல் சாதனைக்குத் தன்னை தயார்படுத்திக் கொண்டார். அதுவே அவரது கடைசி ஜம்ப்.

எண் 13
7. ஒரு விளையாட்டு சீட்டு டெக்கில் 52 அட்டைகள் உள்ளன. ஏன்? சரி, யாருக்கும் தெரியாது இல்லையா?. கார்ட்ஸ் விளையாடுபவர்களுக்கு ஒரு ஆளுக்கு 13 சீட்டுக்கள் இருக்கும்.

எண் 13
8. உலக சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் அமைப்பான "United Nations" 13 எழுத்துக்களைக் கொண்டுள்ளது.

எண் 13
9. கிறிஸ்து அவர்களின் வரலாற்றில் கடைசி இரவு உணவுக்கு 13 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவர், கிறிஸ்துவை வெளிப்படுத்தி, அவரைக் காட்டிக்கொடுப்பார் என அவர் அறிந்திருந்தார்.

எண் 13
10. பெர்சியர்களே முதலில் 12 நட்சத்திர மண்டலங்களை ஒதுக்கியவர்கள் . அவர்கள் 13 - ஐ துரதிர்ஷ்ட எண்ணாகக் கருதுகின்றனர். பாரசீக நாள்காட்டியின் பதின்மூன்றாம் நாள், மக்கள் அந்த எண்ணின் துரதிருஷ்டம் தவிர்க்க வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.



Click it and Unblock the Notifications