For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பண்டையக் காலத்து ரோமபுரி பெண்கள் குறித்த அசர வைக்கும் உண்மைகள்!

பண்டையக் காலத்து ரோமபுரி பெண்கள் குறித்த அசர வைக்கும் உண்மைகள்!

By Staff
|

பண்டையக் காலத்து ரோமர்கள் வீரம், அழகு, கலை என்று அனைத்து வகையிலும் சிறந்து காணப்பட்டனர். இன்று வரையும் அவர்களது பண்டையக் காலத்து கட்டிடக் கலை உலகம் மெச்சும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க கம்பீரத்துடன் திகழ்ந்து வருகிறது.

ஆனால், இவர்கள் தங்கள் மகள், மனைவியரை எப்படி நடத்தி வந்தனர் என்பது பெரிதும் யாரும் அறியாத ஒன்று. பண்டையக் காலத்து ரோமாபுரி பெண்கள் மிகவும் அழகாக இருந்தனர், வசதியுடன் இருந்தனர் என்றெல்லாம் வரலாற்று குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது. ஆனால், அவர்களும் கூண்டுக் கிளிகளாக தான் தங்கள் வாழ்நாளை கழித்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடற்பயிற்சி!

உடற்பயிற்சி!

பண்டையக் காலத்து ரோமாபுரி பெண்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது மார்பக பகுதியில் பிளாஸ்திரி போன்ற ஒன்றை சுற்றிக் கொள்வார்கள். அக்காலத்தில் பிரா கண்டுபிடிக்கவில்லை என்ற காரணத்தால் இப்படி ஒரு முறையை அவர்கள் கடைபிடித்து வந்ததாக அறியப்படுகிறது.

Image Source:immaturewriter

தாய்பால்!

தாய்பால்!

பண்டையக் காலத்து ரோமபுரியில் வாழ்ந்து வந்த பணக்காரப் பெண்கள் தங்கள் சொந்த குழந்தைகளுக்கே தாய்ப்பால் கொடுக்க மாட்டார்கள். அதற்கு மாறாக வெட் நர்ஸ் எனப்படும் பாலூட்டும் தாதிப் பெண்ணிடம் கொடுத்துவிடுவார்கள். அல்லது இதற்காகவே பணியமர்த்தப்பட்ட பெண்கள் அல்லது தங்களிடம் அடிமையாக இருக்கும் பெண்களை தாய்ப்பால் ஊட்ட வைத்துள்ளனர்.

இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த எழுத்தாளர் சோரானசு (Soranus) குழந்தை பிறந்த மறுநாளில் இருந்தே தாதிப் பெண்களிடம் கொடுத்துவிடுவார்கள் என்று தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வடிவு சீர்குலைந்திடுமோ?

வடிவு சீர்குலைந்திடுமோ?

ரோமனில் இருந்த மருத்துவர்கள் அப்போதே, தாய் பாலின் ஆரோக்கியம் குறித்தும், அதன் படி குழந்தையிடம் காணப்படும் அறநெறி குறித்தும் கூறியுள்ளனர். வேறு பெண்கள் தாய் பால் ஊட்டுவதால், அந்த குழந்தையிடம் அறநெறி பண்புகளில் மாற்றம் தென்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் அந்த காலத்தில் ரோம பணக்காரப் பெண்கள் தாய் பாலூட்ட முன்வராமல் இருந்ததற்கான காரணம், அழகு கெட்டுவிடும் என்பதற்காக தான். இதற்கு ஆண்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.

குழந்தை திருமணம்!

குழந்தை திருமணம்!

ரோம பெண்களின் குழந்தை பருவம் மிக விரைவாக முடிந்துவிடும். இவர்களுக்கு 12 வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடுவார்கள். பெரும்பாலும் வயதுக்கு வந்த உடனே திருமணம் செய்து வைக்கும் பழக்கமும் இருந்துள்ளது.

அந்த நேரத்தில் இளம் வயதில் திருமணம் செய்து கருவுற்ற காரணத்தால் பிறந்த சில நாட்களில் இறந்த குழந்தைகள் / இறந்தே பிறந்த சிசுக்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.

பொம்மைகளுடன்...

பொம்மைகளுடன்...

திருமணமான நாளுடன் பெண்கள் (12 வயது சிறுமிகள்) தங்கள் பொம்மைகளை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு, குழந்தைத்தனத்தை தள்ளிவைத்துவிட்டு பெரிய பெண் போல நடந்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை, திருமணம் செய்துக் கொள்ளாமல் அந்த பெண் இறந்துவிட்டால், அவருடன் சேர்ந்து அவரது பொம்மைகளையும் புதைத்துவிடுவார்கள்.

பார்பி!

பார்பி!

2ம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோம பெண்களின் வாழ்க்கை இப்படியாக தான் இருந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு பெண்ணும் தனது சொந்த வெர்ஷனில் பார்பி பொம்மை போல ஒன்றை வைத்திருந்துள்ளனர் என்றும் ஆய்வில் கண்டு கூறியுள்ளனர். மேலும், ரோம பெண்களின் சாதனைகளுக்கு நல்ல மதிப்பும் அளித்துள்ளனர்.

விவாகரத்துக்கு பின்னர்...

விவாகரத்துக்கு பின்னர்...

பொதுவாக கணவர் - மனைவி விவாகரத்துப் பெற்றால் குழந்தை அம்மாவிடம் தான் வளர வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், பண்டையக் காலத்து ரோமனில் இதற்கு நேர்மாறாக விவாகரத்துக்கு பிறகு அப்பாவின் அரவணைப்பில் தான் குழந்தைகள் வளர வேண்டும் என்ற சட்டம் இருந்துள்ளது.

டவுரி!

டவுரி!

மேலும், விவாகரத்து பெற்ற பிறகு கணவன் குடும்பத்திற்கு திருமணத்தின் போது கொடுத்த டவுரி நகை, பணம், நிலங்களை பெண் வீட்டார் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்ற முறையும் பின்பற்றப்பட்டு வந்தது. இங்கேயும், ஒரு சில சட்டங்களை தங்களுக்கு ஏற்றார் போல ரோம ஆண்கள் வைத்திருந்துள்ளனர்.

சட்ட ஓட்டைகள்!

சட்ட ஓட்டைகள்!

அதாவது விவாகரத்துக்கு காரணம் அந்த பெண்ணின் குணாதிசயங்கள் சரியில்லை என்றால், அவர் மோசமானவர் என்றால் அந்த டவுரியை ஆண்களே வைத்துக் கொள்ளலாம் என்று சட்டம் கூறியுள்ளது.

அன்றைய சட்டப்படி விவாகரத்துக்கு பிறகு தங்கள் குழந்தை மீது பெண்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என்று கூறி இருக்கிறார்கள். இதனால், உறவுகளில் பிரிவு ஏற்படாமல் முடிந்த வரை பார்த்து வந்துள்ளனர் அக்காலத்து ரோமாபுரி பெண்கள்.

அழகியல்!

அழகியல்!

பண்டையக் காலத்து ரோமாபுரி பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்துள்ளது. அலங்காரப்படுத்திக் கொள்வது, தலைக்கு டை அடித்துக் கொள்வது, வீட்டிலேயே இயற்கை அலங்கார பொருட்கள் தயார் செய்வது என பெண்களுக்கு நிறைய வேலைகள் இருந்துள்ளது.

காஸ்மெட்டிக் துறை!

காஸ்மெட்டிக் துறை!

இதனாலேயே பண்டையக் கால ரோமாபுரியில் அலங்காரப் பொருள் துறை மேலோங்கிக் காணப்பட்டு வந்திருக்கிறது. அழகை பேணிக்காக்க தனி உணவுகள் சமைத்து உண்பது என்றெல்லாம் தங்கள் வாழ்க்கையை கடந்து வந்துள்ளனர் அக்காலத்து ரோமாபுரி பெண்கள்.

விலங்குகளின் கொழுப்பு, புழுக்கள் எண்ணெய் என்று ஏதேதோ பொருட்களின் கலப்பில் எல்லாம் அழகு மேம்படுத்தும் க்ரீம்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

கல்வி!

கல்வி!

அந்த காலத்தில் பெண்களுக்கு கல்வி அவசியம் என்று கருதியுள்ளனர். மேலும், அவர்கள் நிச்சயம் எழுத, படிக்க கற்றிருக்க வேண்டும் என்றும், அதற்காக மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க மக்கள் ஆசிரியர்களை நியமனம் செய்து வீட்டில் வைத்தே பாடம் கற்பித்துள்ளனர்.

மகிழ்விக்க மட்டுமே

மகிழ்விக்க மட்டுமே

என்ன தான் படித்தாலும், வீட்டு வேலைகள், குழந்தைகளை வளர்த்தல், கணவனை மகிழ்வித்தல் தான் அவர்களது முழுநேர கடமையாக இருந்துள்ளது. ஆயினும் போர் காலங்களில் கணவனுடன் தொடர்பில் இருக்க, செய்திகள் அனுப்ப கல்வி அவசியம் என்று கருதியுள்ளனர். குழந்தைகளை சரியான பாதையில் வழிநடத்த கல்வி முக்கியம் என்பதால், பெண் கல்வி அக்காலத்தில் ஊக்கவிக்கப்பட்டுள்ளது.

தடை

தடை

ஆயினும், பெண்களுக்கு அடிப்படை கல்வி மட்டுமே பெரிதும் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்படியாக பெண்கள் கற்றால் பகட்டாக மாறிவிடுவார்கள் என்றும், தங்களை மீறி நடப்பார்கள், செக்சுவல் வாழ்க்கை சரியாக அமையாது என்றும் பண்டையக் காலத்து ரோமாபுரி ஆண்கள் எண்ணி பெண்கள் அடிப்படை கல்விக்கு மேல் பயில அனுமதிக்கவில்லை.

அரசியல்!

அரசியல்!

பெண்கள் அரசியல் அல்லது அரசு பொறுப்பில் இருக்க முடியாது எனினும், அரசியல் காலத்தில், தனது கணவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்துள்ளனர். தன் கணவர் எப்படிப்பட்டவர், அவரது சிறந்த குணாதிசயங்கள் என்னென்ன என்று எடுத்துக் கூற மனைவியரை பயன்படுத்தி வந்துள்ளனர் ரோமாபுரி ஆண்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts About Ancient Roman Women!

Facts About Ancient Roman Women!
Desktop Bottom Promotion