For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோபி அத்தான் (எ) திருமுருகன் பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

கோபி அத்தான் (எ) திருமுருகன் பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

|

மெட்டி ஒலி என்றாலே முதலில் நினைவிற்கு வருவது அந்த நாடகத்தின் அம்மி மிதித்து பாடலும், அதற்கு அடுத்து கோபி கதாப்பாத்திரமும் தான். ஐந்து சகோதரிகளின் கணவர்களுக்கும் ஒவ்வொரு குணம் கொண்டிருப்பார்கள். அதில், மிகவும் ஒழுக்கமான, மனைவி சொல்லை கேட்டு நடக்கும், மனைவியை அக்கறையாக பார்த்துக் கொள்ளும் காதல் கணவராக நடித்திருப்பார் கோபி என்கிற திருமுருகன்.

இயக்குனர்கள் நடிகராவது இயல்பு. இதற்கு திருமுருகனும் விதிவிலக்கு அல்ல. மேலும், திருமுருகன் நடிப்பும் மோசம் என்று சொல்ல முடியாது. நன்கு நடிக்கும் திறமை கொண்டவர். இவர் இயக்கி நடித்த நாதஸ்வரம் நாடகத்திற்காக 2012ம் ஆண்டிற்கான சன் குடும்ப விருதுகளில் சிறந்த நடிகர் விருதும் வென்றார் கோபி.

ஆனால், தற்சமயம் இவர் இயக்கி நடித்து வரும் கல்யாண வீடு நாடகத்தின் சமீபத்திய எபிசோடுகளில் இவர் காண்பித்து வரும் ட்ரான்ஸ்பர்மேஷன் காட்சிகள் மற்றும் அதிரிபுதிரி நடிப்பு மீம்ஸ் கிரியேட்டர்கள் வாய்க்கு அவல் போட்டது போல ஆகிவிட்டது. தற்சமயம் மீம்ஸ்களில் ட்ரெண்ட்டிங் டெம்ப்ளேட் கோபி அத்தான் என்கிற இயக்குனர் திருமுருகன் தான்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூர்வீகம்!

பூர்வீகம்!

கோபி என்று இன்றளவும் அனைவராலும் அழைப்பட்டு வரும் இயக்குனர் நடிகர் திருமுருகனின் பூர்வீகம் சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி ஆகும். இவரது தந்தையின் பெயர் முனியாண்டி. திருமுருகன் இளங்கலை அறிவியலில் விலங்கியல் பட்டம் படித்தவர் ஆவார்.

படிப்பு!

படிப்பு!

இயக்குனர் திருமுருகன் காரைக்குடி நகராட்சியில் இருக்கும் அழகப்பா மாடல் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, அழகப்பா கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை அறிவியல் விலங்கியல் படித்து முடித்தார்.

இயக்கம்!

இயக்கம்!

சினிமா மற்றும் இயக்கத்தில் ஆர்வம் கொண்ட திருமுருகன் இளங்கலை பட்டம் முடித்த பிறகு சென்னை, எம்.ஜி.ஆர் அரசு பிலிம் & டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் தமிழ்நாடு டைரக்ஷனில் இயக்கம் படித்து முடித்தார்.

MOST READ: சாயங்காலம் வீட்ல ஊதுபத்தி ஏத்துறீங்களா? இத படிங்க அப்புறம் ஊதுபத்தி வாங்கவே மாட்டீங்க...

தூர்தர்ஷன்!

தூர்தர்ஷன்!

பலரும் இயக்குனர் திருமுருகன் இயக்கிய முதல் நாடகம் சன்டிவியில் ஒளிப்பரப்பான மெகாஹிட் நாடகம் மெட்டி ஒலி என்றே கருதி வருகின்றனர். ஆனால், மெட்டி ஒலி தொடருக்கு முன்பே தூர்தர்ஷனில் திருமுருகன் கோகுலம் காலனி என்ற டெலி சீரியலை இயக்கி இருக்கிறார்.

மெட்டி ஒலி!

மெட்டி ஒலி!

சின்னத்திரை வரலாற்றில் மெட்டி ஒலி ஒரு மைல் கல் என்றே கூற வேண்டும். ஐந்து மகள்களை பெற்ற தந்தை மற்றும் அவரது வாழ்க்கையை சுற்றி இயங்கிய இந்த நாடகம் 811 எபிசோடுகள் ஒளிபரப்பாக அந்த காலக்கட்டத்தில் அதிக நாட்கள் ஓடிய நாடகமாக இருந்தது.

வாழ்க்கை!

வாழ்க்கை!

திரைப்பட நடிகர் வெங்கட்டிற்கு மெட்டி ஒலி சீரியல் ஒரு ஏணியாக. இந்த நாடகத்திற்கு பிறகு அனைவரும் வெங்கட் நடித்த கதாப்பதிரமான போஸ் என்றே அழைக்க துவங்கினர். அவர் பின்னாட்களில் படங்களில் நடித்த போதும், கிரெடிட் கார்டில் போஸ் வெங்கட் என்றே பெயர் இடம் பெற்றது.

வைரமுத்து!

வைரமுத்து!

மெட்டி ஒலி என்றாலே, அனைவருக்கும் தன்னைப்போல மனதில் ஓடும் பாடல், அந்த தொடரின் டைட்டில் சாங். அம்மி, அம்மி, அம்மி மிதித்து என்ற பாடல் அனைவருக்கும் பிடித்தமான பாடலாக இருந்ததற்கு காரணம் அந்த பாடலின் வரிகள். இந்த பாடலை எழுதியவர் கவி பேரரசு வைரமுத்து. இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் இசை அமைப்பாளர் தினா. இந்த பாடலை பாடகி நித்யாஸ்ரீ மகாதேவன் பாடி இருந்தார்.

புதுமைகள்!

புதுமைகள்!

பெரும்பாலும் சீரியல்கள் வீட்டுக்குள் நடப்பதாக இருக்கும். ஆனால், இந்த சீரியலில் சில புதுமைகள் கையாண்டார் இயக்குனர் திருமுருகன். பெரும்பகுதி அழகன் குளம் என்ற கிராமத்தில் ஷூட் செய்தாலும், சில எபிசோடுகளை சிங்கபூர், மலேசியா, நியூயார்க்கிலும் படம் பிடித்திருந்தார் திருமுருகன்.

மேலும், ஐந்தாவது தங்கையாக நடித்த பவானி கதாப்பாத்திரத்தின் திருமண நிகழ்வை ஒரே ஷாட்டில் ஷூட் செய்து ஒளிபரப்பியாதும் அந்தகாலக்கட்டத்தில் சீரியல் பார்த்த மக்களுக்கு புதுமையான உணர்வை அளித்தது.

MOST READ: மார்கழி மாதத்தில் சிவபெருமானை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

எம் மகன்!

எம் மகன்!

மெட்டி ஒலி சீரியல் கொடுத்த வெற்றியை தொடர்ந்து திரைப்படம் இயக்கம் வாய்ப்பு திருமுருகன் அவர்களுக்கு கிடைத்தது. நாசர், பாரத், வடிவேலுவை வைத்து இவர் இயக்கிய அப்பா - மகன் உறவை எடுத்துரைத்த எம்டன் மகன் என்கிற எம் மகன் திரைப்படமும் நல்ல வெற்றியை பெற்றது.

தோல்வி!

தோல்வி!

மீண்டும் பரத்துடன் கூட்டணி சேர்ந்து முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற திரைப்படத்தை இயக்கினார். ஆனால், அந்த படம் தோல்வி படமாக முடிந்தது. இந்த திரைப்படத்தின் பெயருக்கும் இயக்குனர் திருமுருகனுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. ஆம்! முனியாண்டி என்பது இயக்குனர் திருமுருகனின் தந்தையின் பெயர். விலங்கியல் இவர் படித்த இளங்கலை பாடப்பிரிவு ஆகும்.

சீரியல்கள்!

சீரியல்கள்!

மெட்டி ஒலியை தொடர்ந்து இயக்குனர் திருமுருகன், தேன் நிலவு, நாதஸ்வரம், குல தெய்வம் மற்றும் கல்யாண வீடு போன்ற நாடகங்களை இயக்கியுள்ளார். இதில் கல்யாண வீடு நாடகத்தில் தான் அந்நியன் விக்ரம் போல வேறுபட்ட நடிப்பை காட்டி, ட்ரான்ஸ்பர்மேஷன் சீன்கள் எல்லாம் வைத்து ரசிகர்களை கலங்கடித்தார் இயக்குனர் & நடிகர் திருமுருகன்.

கோபி செண்டிமெண்ட்!

கோபி செண்டிமெண்ட்!

இயக்குனர் திருமுருகனுக்கு கோபி என்கிற கோபி கிருஷ்ணா என்கிற பெயரில் ஏதோ பெரிய செண்டிமெண்ட் இருக்கிறது போல. மெட்டி ஒலி தொடரில் இவர் நடித்த பாத்திரத்தின் பெயர் கோபி. நாதஸ்வரம் நாடகத்திலும் இவர் ஏற்ற பாத்திரத்தின் பெயர் கோபி. மற்றும் கல்யாண வீடு தொடரில் இவர் நடித்து வரும் கதாப்பாத்திரத்தின் பெயரும் கோபி என்கிற கோபி கிருஷ்ணா தான்.

காரணம்!

காரணம்!

இதில் ஆச்சரியம் என்ன வென்றால் இவர் நடித்த நான்கு நாடகங்களில் மூன்றில் இவர் கோபி என்ற பெயரில் தான் நடித்திருக்கிறார். மெட்டி ஒலி, குல தெய்வம், நாதஸ்வரம் ஆகிய தொடர்கள் 811, 897,1356 எபிசோடுகள் ஒளிபரப்பாகி இருந்தன. ஆனால், இவர் கல்யாணம் என்ற பெயரில் நடித்த தேனிலவு நாடகம் மட்டும் 90 எபிசோடுகளில் முடிந்துவிட்டது. ஒருவேளை இதை செண்டிமெண்டாக வைத்து தான் கோபி என்ற பெயரை தன் கதாப்பாத்திரத்திற்கு வைத்துக் கொள்கிறாரோ திருமுருகன்.

MOST READ: கனவில் இந்த பொருட்களைப் பார்த்தால் நோய் வருமாம்...

கின்னஸ் சாதனை!

கின்னஸ் சாதனை!

திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் நாடகத்தின் 1000வது எபிசோடு கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் நாள் லைவாக ஒளிப்பரப்பு ஆனது. நடிகர்கள் அனைவரும் லைவாக நடித்தனர். இந்த எபிசோடு லைவாக சன்டிவியில் ஒளிப்பரப்பாகி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இந்த எபிசோடு ஒரே ஷாட்டில் 23 நிமிடம் 25 நொடிகள் லைவாக டெலிகாஸ்ட் ஆனது.

இனி, கோபி என்கிற திருமுருகன் ட்ரெண்ட்கிங் மீம்ஸ் சிலவன...

மீம் #1

மீம் #1

பாபி உடன் மட்டுமில்ல, நீயா நானா கோபி, பரிதாபங்கள் கோபி என பல வெர்ஷன்களில் இந்த மீன் உலாவி கொண்டிருக்கிறது...

மீம் #2

மீம் #2

இதுவரை ட்ரான்ஸ்பர்மேஷன் சீன்களில் நடித்த நடிகர்களுக்கு எல்லாம் கோபியின் ட்ரான்ஸ் பர்மேஷன் சீன் பார்த்து கொஞ்சம் அல்லு விட்டுருக்கும் தான்...

மீம் #3

மீம் #3

வெளிநாட்டு போலீஸ்காரங்களே ஷாக் ஆகி இருக்காங்கன்னா பார்த்துக்குங்க... கோபி வேற லெவல் பர்பார்மான்ஸ்...

மீம் #4

மீம் #4

முந்தைய காலத்துல தல, தளபதிக்கு டஃபு கொடுக்க நெனச்ச பலர் காணாம போயிருக்காங்க... ஆனா, தல, தளபதியே டஃப நினைக்கிற ஆளு... வேற யாரு...

மீம் #5

மீம் #5

கொஞ்ச நஞ்ச அடியா விழுகுது... ட்ரான்ஸ்பர்மேஷன் காமிச்சா ஒரே காரணத்துக்காக அட்மிட் பண்ணி அடிக்கிறாங்க இந்த மீம் கிரியேட்டர்ஸ்...

MOST READ: பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி?

மீம் #6

மீம் #6

ட்ரான்ஸ்பர்மேஷன் காமிச்சது ஒரு குத்தமா.. சிவனேன்னு இருந்தவன.. இப்படி இழுத்துப் போட்டு செய்யிறாங்க.. என்ன இருந்தாலும் மெட்டி ஒலி, எம் மகனுக்காகவாவது பாரபட்சம் காமிச்சிருக்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Facts About Actor and Director Gopi Aka Thirumurugan

Here we have listed some interesting and lesser known facts about Metti Oli Fame Director and Actor Gopi Aka Thirumurugan.
Desktop Bottom Promotion