For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2019'யாவது நடக்குமா? பிரபலங்கள் என்னெவெல்லாம் எதிர்பார்ப்பாங்க - சிறிய கற்பனை!

|

ஒவ்வொரு வருஷமும் நம்ம எல்லாருமே ஒரு ரெசல்யூஷன் எடுப்போம்... முக்கியமா அது ஜிம்முக்கு போறது, வெயிட்ட குறைக்கிறதுன்னு இருக்கும். ஆனா, ரெசல்யூஷன்னு இல்லாம... இந்த வருஷமாவது இது நம்ம வாழ்க்கையில நடந்திடாதான்னு நமக்குள்ள ஒரு ஏக்கம் இருக்கும் இல்லையா... ரொம்ப வருஷமா.. இதோ இப்ப நடந்திடும், அடுத்து நடந்திடும்.. இனி, இந்த கஷ்டமே / பிரச்சனையே இருக்காதுன்னு நாம எதிர்பார்த்து காத்துட்டு இருப்போம்.

உதாரணமா சொல்லனும்னா.... 90s கிட்ஸ் கல்யாணம் ஆயிடும்னு நம்புற மாதிரியும், இந்த வருஷமாவது கமிட்டட் ஆயிடமாட்டோமான் ஏங்குற மாதிரியான தொடர்கதையான ஏக்கம்னு வெச்சுக்குங்களே...

இப்படியான ஏக்கங்கள் நம்ம ஊரு பிரபலங்களுக்கு இருந்தா... அது என்னவா இருக்கும்.... ஒரு சின்ன கற்பனை... இது யார் மனதையும் புண்படுத்தவல்ல....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரஜினி ரசிகர்கள்!

ரஜினி ரசிகர்கள்!

தலைவர் அரசியலுக்கு வருவேன் என உறுதியாக கூறவே 21 ஆண்டுகள் ஆகினே. காலாவுடன் முடிந்துவிடும், 2.Oவுடன் முடிந்துவிடும், பேட்டயுடன் முடிந்துவிடும் என்று பார்த்தால் அடுத்து இன்னும் இரண்டு படங்கள் தலைவர் சைன் செய்துள்ளதாக அறியப்படுகிறது. தலைவரை திரையில் ரசிக்கும் ரசிகர்களுக்கு இது கொண்டாட்டம். அரசியல் களம் காண எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு இது திண்டாட்டம்.

அஜித் ரசிகர்கள்!

அஜித் ரசிகர்கள்!

கடைசியாக அஜித் ரசிகர்கள் காலரை தூக்கிவிட்டு கெத்தாக வாய்ஸ் கொடுத்த திரைப்படம் என்றால் அது மங்காத்தா தான். வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நிஜமாகவே அஜித் எனும் நடிகருக்கு மாஸ், ஆக்டிங் என கலவை பக்காவாக அமைந்திருந்தது. அதற்கு பிறகு, ஆரம்பம், என்னை அறிந்தால், வீரம் போன்ற படங்கள் ஓடினாலுமே... ஒகே ரகமாக தான் இருந்ததே தவிர... மங்காத்த எப்பெக்ட் கொடுக்கவில்லை. ஆகவே, வருமாண்டு வேற லெவலில் மாசாக காலரை தூக்கிவிடும்படியாக ஒரு நச் படத்தில் தல தரிசனம் கொடுக்க வேண்டும்.

விஜய் ரசிகர்கள்!

விஜய் ரசிகர்கள்!

விஜய் திரைப்படம் என்றாலே சர்ச்சை கூடவே நிழல் போல தொடர்கிறது. ஒன்று அரசியல், இல்லை கதைத்திருட்டு... இது கடந்த சில ஆண்டுகளாக விஜயின் படங்களில் தொடர் கதையாக நடந்துவருகிறது. வருமாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவிருக்கும் தளபதி63'யாவது இப்படியான எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காமல், ஸ்மூத்தாக வெளியாக வேண்டும்.

கமல் ரசிகர்கள்!

கமல் ரசிகர்கள்!

ஆண்டவரே... நீங்க ஒரு நடிப்பு அரக்கன் என்று எங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், சாமான்ய மக்களுக்கும் எளிதில் புரியும்படி ட்வீட் போடுங்கள், நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தலையை சுற்றி மூக்கை தொட்டால் கூட பரவாயில்லை.. நீங்கள் தலையை சுற்றி வேறு யாரோ ஒருவரது மூக்கை தொடும்படியாக கூறும் பதில்கள் எல்லாம் அரசியல் சித்துவிளையாட்டில் காமெடியனாக்கிவிடும். மற்றுமொரு முக்கியமான விஷயம்... இனிமேல், அர்னாப் கோஸ்வாமி பேட்டி என்று கூப்பிட்டால் சென்றுவிட வேண்டாம்.

சிம்பு ரசிகர்கள்!

சிம்பு ரசிகர்கள்!

கடந்த தசாப்தத்தில் சிம்புவின் திரைப்படம் ஒன்று எந்த சர்ச்சை மற்றும் சிக்கலையும் சந்திக்காமல் வெளியானது என்றால் அது செக்க சிவந்த வானம் தான். சிசிவி போலவே, வருமாண்டு என்று மட்டுமின்றி, சிம்புவின் அடுத்தடுத்த அனைத்து படங்களும் சிக்கல் இல்லாமல் ஸ்மூத்தாக வெளியாக வேண்டும்.

தி.மு.க தொண்டர்கள்...

தி.மு.க தொண்டர்கள்...

தலைவரே, தளபதியாரே... இந்த ஆண்டு தயவு செய்து முக்கிய தினங்களின் தேதிகள் மற்றும், பழமொழிகளை எழுதி வைத்தே படித்துவிடுங்கள் என்று தொண்டர்கள் எதிர்பார்க்கலாம். அதே போல, தளபதியாரும்..., இனிமேலாவது காசுக் கொடுத்து டீ, காபி, பஜ்ஜி, போண்டா, சாப்பாடு வாங்கி சாப்பிடுங்கள் என்று தனது கட்சி தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கலாம்.

சயிண்டிஸ்ட் ராஜூ!

சயிண்டிஸ்ட் ராஜூ!

வருஷம் வருஷம் யார், யாருக்கோ ஏதேதோ கண்டுப்பிடிச்சத்துக்கு பல பேருல விருது கொடுக்குறாங்க. நான் இங்க ஒருத்தன் மாங்கு, மாங்குன்னு நாசாவுக்கே சவால் விடுற மாதிரி பல விஷயங்கள் செயல்படுத்திட்டு இருக்கேன். எனக்கு இந்த வருஷமாவது ஒரு அவார்டு கொடுக்கணும்னு எதிர்பார்க்கலாம்.

ஓ.ப.செ. - எ.ப.சா!

ஓ.ப.செ. - எ.ப.சா!

ஏற்கனவே எப்ப கட்சி உடையும், எப்ப எவன் தெறிச்சு ஒடுவான்னு தெரியல.. எப்படியாவது யார் வாயிலையும் விழுகாம, நல்லப்படியா 2021 வரைக்கும் வண்டி ஓடிடணும்னு ரெண்டு பேரும் கூட்டுப் பிரார்த்தனை பண்ணலாம். இல்லாங்காட்டி, ரெண்டு பேருமே சேர்ந்து மெரினாவுல தியானம் பண்ணலாம்.

முருக நோலன் - ராக்ஸ்டார் அனி!

முருக நோலன் - ராக்ஸ்டார் அனி!

மு.நோ: நானும் என்னென்னவோ முயற்சி பண்றேன்... சினாப்ஸிஸ், பவுண்டட் ஸ்க்ரிப்ட்னு நிறையா சொல்லிப் பாக்குறேன். ஆனா, மண்டை மேல இருக்குற கொண்டைய மறைக்க முடியல தம்பி...

ரா.அ: அண்ணே! நான் கூட லைசன்ஸ் வாங்கி லீகலா தான் போட்டேன்னு சொல்லி பார்த்தேன், ஜனங்க நம்புனாலும் இந்த யூடியூப் பயலுக சும்மா இருக்காம காப்பிரைட்னு சொல்லி சல்லிசல்லியா உடைச்சிடுறாங்க...

இனிமேல், கொஞ்சம் சூதானமா செயல்படனும்!

தமிழிசை!

தமிழிசை!

இன்னும் பல வருடங்கள் ஆனாலும் இவரது ஒவ்வொரு புத்தாண்டின் எதிர்பார்ப்பு தாமரை மலர்ந்தே தீரும் என்பதாக தான் இருக்கும். சேற்றை வாரி வீசினாலும், செயற்கை மழை பெய்ய வைத்தாவது இந்த முறை தேர்தலில் தமிழகத்தில் தாமரை மலர வைத்தே தீருவோம் என்று அறைகூவல் இட்டு வருகிறார்.

மோடி, ராகுல்...

மோடி, ராகுல்...

மோடி, ராகுல் இருவரின் வருமாண்டின் பெரும் எதிர்பார்ப்பு பாராளு மன்ற தேர்தலாக தான் இருக்கும். இருவருமே தங்கள் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தாலும்... வருமாண்டு பாராளு மன்ற தேர்தல் தொங்கு பாராளுமன்றமாக அமைய தான் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

தமிழக மக்கள்!

தமிழக மக்கள்!

ஏற்கனவே வருஷம் பிறக்குறதும் தெரியல, முடியறதும் தெரியல... ஆட்சியாளர்கள் ஒருபக்கம் அடிக்கிறாங்க... இயற்கை ஒருபக்கம் எங்கள வாட்டி எடுக்குது. வர வருஷமாவது, மக்கள், துயரம், துன்பம் எதுவும் ஏற்படாம நிம்மதியான வாழ்க்கை வாழனும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Expectations of Indian Celebrities on 2019

Here is an Imaginary Story about Expectations of Indian Celebrities on 2019. Take a look on it.