பணக்கார வீட்டு பிள்ளைகளின் சில தெனாவெட்டு ஸ்நாப்சாட் ஸ்க்ரீன் ஷாட்டுகள்!

Subscribe to Boldsky

ஒரு விஷயம் நம்மக்கிட்ட அளவுக்கு அதிகமா இருந்துட்டா... இல்ல அது நாம சுயமா சம்பாதிச்சு வாங்குனதா இல்லன்னா.. அதோட மதிப்பு நமக்கே தெரியாம போயிடும்ன்னு சொல்லுவாங்க.

உதாரணமா சொல்லனும்னா... வீட்டுல அதிகமா சாப்பாடு இருந்தா... தனக்கு தெரியாமலே வீணடிப்பாங்க... சிலர் பழையது பிச்சைக்காரங்களுக்கு எடுத்து வெச்சாவது போடலாம்ன்னு யோசிக்காம அநாவசியமா கீழே டிச்சுல கொட்டுவாங்க.

Dirtiest Snapchats of Some Richest Kids

இதுவே தப்புன்னு உங்களுக்கு தோணுதுனா...? அளவுக்கு அதிகமா பணம் இருக்குற மிதப்புல... என்ன பண்றதுனு தெரியாம என்னென்னமோ பண்ணுவேன்னு கைக்கு வந்தத எல்லாம் பண்ணியிருக்குற இந்த பணக்கார குட்டீஸ் வேலைகள பார்த்தா உங்களுக்கு என்ன தோணும்?

இந்த விளையாட்டு புத்தி, எதிர்காலத்துல வினையாகவும் வாய்ப்பிருக்கு இல்லையா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

பிள்ளைங்கள சொல்லி என்னங்க பண்றது... பெத்த அப்பா, அம்மாக்கள இல்ல சொல்லணும். ஆசைப்படுறதவிட, தேவைப்படுறத வாங்கிக் கொடுத்து வளர்த்தா... பிள்ளைங்க வாழ்க்க வளமா, செழிப்பா இருக்கும். அதைவிட்டு! இப்படி அளவுக்கு மீறின விஷயங்கள் செஞ்சா... அமிர்தமும் நஞ்சாகிடும்னு சொல்ற மாதிரி தான் வாழ்க்கை அமையும்.

#2

#2

இதோ! எதுவும் அளவுக்கு மீறி கிடைச்சா.. இப்படி நஞ்சாதான் விளையும். ஒரு விஷயத்தை நாம சுயமா சம்பாதிக்காத வரைக்கும் அதோட அருமை தெரியாதுன்னு சொல்லுவாங்க. அது நூறு சதவிதம் உண்மைன்னு நிரூபிச்சிருக்கிறார் நம்ம தம்பி!

#3

#3

அதாவது பிளேட்னு கூட சொல்லல, வூட்டுல ப்ளேட்க்கு கீழ வைக்கிற மேட்.. அதாங்க.. ஹோட்டலுக்கு எல்லாம் போனா.. பிளேட்க்கு கீழ வெச்சிருப்பாங்களே... அதேதான்... தற்சமயம் அது இல்லையாம்... அதனால... அவசரத்துல வேற எதுவும் கிடைக்காதனால ஆயிரங்கள் கொட்டி வாங்குன ஐ-பேட் ப்ளேட் மேட் ஆயிடுச்சு.

#4

#4

பணம் அதிகமா ஒருத்தர் கிட்ட சேர்ந்துட்டா ரெண்டு விஷயம் சேர்ந்து வரும்ன்னு சொல்வாங்க. ஒன்னு நிறையா பயம் வரும், இன்னொன்னு நிறையா உதவலாம்ங்கிற மனம் வரும். ஆனா, இயற்கை ரெண்டு விஷயம் படைக்கும் போது, தவறுதலா.., நடுவுல சில கோளாறுகள் உண்டாகும். அப்படி உண்டானது தான் மூணாவதான இந்த எண்ணம். நிறையா திமிரு. போன் பழையது ஆயிட்டா.. இன்னொருத்தருக்கு கொடுத்து உதவலாம்.. ஆனா நம்ம பயல பாருங்க..

#5

#5

கரக்டு தான்... வீட்டுல இருக்க வேலை காரங்க சரியா வேலை பார்க்கலயா இல்ல.. வளர்த்தவங்க சரியா வளர்கலயான்னு தெரியல... பட்டர் ஸ்ப்ரெட் பண்ண கத்தி இல்லையாம்... அதனால தம்பி அமெரிக்கன் எக்ஸ்ப்ரஸ் கார்ட பயன்படுத்துறாரு. பட்டர் கொழுப்பு விட இந்த பய கொழுப்பு கொஞ்சம் அதிகம் போலயே!

#6

#6

சரி! என்னத்த சொல்ல பல்லு இருக்கவன் பக்கோடா சாப்பிடறான். நோ கமெண்ட்ஸ். எல்லா வேர்ல்டு கிளாஸ் காரையும் சிவப்பு நிறத்துல வாங்கி குவிச்சு வெச்சிருக்காப்புல தம்பி. மத்தவங்களோட ஒப்பிட்டா இது தேவலை!

#7

#7

கோடை காலத்துல குதுகலிக்க மேக் ப்ரோ, மேக் புக் ஏர், ஐ-போன் எஸ்... ரெண்டு... சரிதான்... சைத்தான் சைக்கிள்ல வருது... எப்படியும் இவங்க இதெல்லாம் பல வருஷம் முன்ன யூஸ் பண்ணதாதான் இருக்கும். இந்நேரத்துக்கு ஐ-போன் எக்ஸ்க்கு அப்க்ரேட் ஆகியிருப்பாங்க.

#8

#8

ஏம்பா ஏய்... அந்த தம்முதூண்டு ஸ்க்ராட்ச் விழுந்ததுக்கா.. புதுசு வாங்க போற... இதெல்லாம் கொஞ்சம் அநியாயமா இல்ல.. சரி! அங்க ஒரு பய ப்ளேட் மேட் இல்லன்னு... ஐ-பேட் யூஸ் பண்ணதோட கம்பேர் பண்ணா.. இதெல்லாம் நியாயமா தான் இருக்கும்னு கருத தோணுது.

#9

#9

பாம்பு தொட்டு பார்க்க எதுக்கு ஜூவுக்க்கு போகணும்... இதோ இப்படியே தொட்டு பார்த்துக்குவேன்னு... பாம்பு தோல்ல பண்ண ஷூவ தொட்டு பார்த்து சொல்றாரு நம்ம குட்டி பையன். தம்பி இங்க வேணும்னா இப்படி தொட்டு பார்க்கலாம்.. நிஜத்துல போய் தொட்டு பார்த்தா... பொட்டுன்னு போட்டுடும்.

#10

#10

அட! ராஸ்கோல்! அந்த பயலாவது ப்ளேட் மேட் இல்லன்னு ஐ-பேட் தான் யூஸ் பண்ணாப்புல. இத பாருங்களேன்... டைனிங் டேபிள் க்ளாத் இல்லன்னு... டேபிள் முழுக்க ரூபா நோட்டு பரப்பி அதுக்கு மேல ப்ளேட் வெச்சிருக்காப்புல மிஸ்டர் ரிச். குடி போதையில விழுந்தவன் கூட பொழச்சிடுவான்... பண போதை ஆகாதுங்க கண்ணு!

#11

#11

நம்ம ஊருல கண்டக்டர் பணத்த கண்டபடி மடிச்சாலே எங்க கிழிஞ்சிடுமோன்னு கத்துவாங்க... இங்க பணம் அதிகமா இருக்க கிறக்கத்துல கசக்கி போடுறதுக்கு எல்லாம் யூஸ் பண்றாங்க. நிச்சயமா அந்த பயனும் கூட காச கசக்கி போட்டுருக்க மாட்டாப்புல.. ஆனாலும், இப்படி கசக்கி போடுவேன்னு போஸ்ட் போடுறதே... புத்தி கசங்கி போனத தானே குறிக்கிறது.

#12

#12

ஒருத்தருக்கு ஒருத்தர் மிஞ்சி தான் போறாங்களே தவிர, யாரும் குறைஞ்சு போகல... ஒருத்தன் என்னடானா டைனிங் டேபிள் க்ளாத்தா யூஸ் பண்ணுவேன்னு சொல்றான்.. ஒருத்தன் கை துடைக்க யூஸ் பண்ணுவேன்னு சொல்றான்.. எல்லாத்துக்கும் மேல இங்க ஒருத்தன்... கக்கா போயிட்டு வந்து துடைக்க யூஸ் பண்ணுவேன்னு.. ஸ்கூல்ல இருந்து போஸ்ட் போட்டுருக்கான். கத்த, கத்தையா பணத்த கொடுத்த பெத்தவங்க.. கொஞ்சமாவது கத்தி நல்லதா நாலு விஷயம் சொல்லிக் கொடுத்திருந்தா.. இப்படி எல்லாம் பண்ண மனசு வருமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Dirtiest Snapchats of Some Richest Kids

    See what rich kids doing in snap chats. Yes, They have more money, but this is not right way to show off. And Few gone too wild in their snapchat post's.
    Story first published: Thursday, July 19, 2018, 15:10 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more