Latest Updates
-
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க..
இன்னைக்கு இந்த 5 ராசிக்காரருக்கும் காசு கையில நிக்காது... கவனமா இருங்க...
daily horoscope 5.6.18, 5.6.18 ஆம் நாளான இன்று உங்களுடைய ராசிக்கான பலன் எப்படி இருக்கும்
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

அதன்படி இன்றைக்கு ரிஷபம், சிம்மம், துலாம், மகரம், மீனம் ஆகிய ஐந்து ராசிக்காரர்களுக்கு சுப விரயச் செலவுகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். மிதுன ராசிக்காரர்கள் விவாதத்தை தவிர்க்க வேண்டும். மீனம், மேஷம், விருச்சிகம், கன்னி ராசிக்காரர்களுக்கு தன லாபம் உண்டாகும். கடகம், கும்பம், தனுசு ராசிக்காரர்கள் உடல் நலத்தில் கவனம் தேவை.

மேஷம்
பிள்ளைகளின் வழியாக சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். வாகனப் பயணங்களின் வழியாக லாபம் அடைவீர்கள். பொன், பொருள் போன்றவற்றைக் கையாளும்போது நிதானத்துடன் செயல்பட வேண்டும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். போட்டிகளில் வெற்றியடைவீர்கள். அதிர்ஷ்ட திசை - தென்மேற்கு, அதிர்ஷ்ட எண் - 7, அதிர்ஷ்ட நிறம் - சாம்பல்நிறம்

ரிஷபம்
பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாளாக அமையும். தொழில் ரீதியான பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை - கிழக்கு
அதிர்ஷ்ட எண் - 2, அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

மிதுனம்
எந்த காரியமாக இருந்தாலும் எடுத்த காரியத்தில் துணிச்சலுடன் செயல்பட்டு லாபம் அடைவீர்கள். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். பொருள் சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட திசை - வடகிழக்கு, அதிர்ஷ்ட எண் - 4, அதிர்ஷ்ட நிறம் - ஊதா நிறம்

கடகம்
பரம்பரை சொத்துக்களால் சுப விரயங்கள் செய்ய வேண்டியிருக்கும். நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்ற வெளியிடங்களுக்குச் செல்வீர்கள். மனதில் புதுவித எண்ணங்கள் உண்டாகும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். அந்நியர்களிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 3, அதிர்ஷ்ட நிறம் - இளம் பச்சை

சிம்மம்
சகோதரர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகஸ்தர்கள் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பயணங்களை மேற்கொள்வீர்கள். தாயின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 3, அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை

கன்னி
புனித யாத்திரை செல்வதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வான் வழியான சம்பந்தம் உடைய தொழில் செய்பவர்களுக்கு புகழ் உண்டாகும். சுயதொழில் புரிகின்றவர்கள் தங்களுடைய முயற்சியால் லாபம் அடைவார்கள். சகோதரர்களால் சுப விரயம் ஏற்படும். அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 1, அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு நிறம்

துலாம்
மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும் நாள். எதிர்பார்த்த வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும். வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை., அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 9, அதிர்ஷ்ட நிறம் - அடர் சிவப்பு.

விருச்சிகம்
பிள்ளைகளின் மூலம் சுப விரயச் செலவுகள் உண்டாகும். குல தெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பயணங்களால் லாபம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க செயல் திட்டங்கள் தீட்டுவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சுப விரயங்கள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 6, அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்.

தனுசு
உறவினர்களின் வருகையினால் மனமகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கிடைக்கும். இழந்த பொருள்களை மீட்க முயற்சி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அமைதியுடன் செயல்படுங்கள். அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 5, அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை

மகரம்
உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமாக செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். வியாபாரம் சம்பந்தமாக வெளியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 2, அதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளை

கும்பம்
கூட்டாக தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களால் சுப விரயங்கள் ஏற்படும். தொழில் அபிவிருத்தி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சுப செய்திகள் வந்தடையும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 6, அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்

மீனம்
நிர்வாகத்தில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்ய வேண்டிய சூழல் வரும். மாற்றங்கள் செய்வதால் நிறைய சாதகமான சூழல்கள் உண்டாகும். சுயதொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் யாவும் நினைத்த பலன்களைத் தரும். தொழிலுக்கு பெற்றோர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். பிள்ளைகளால் சுப விரயச் செலவுகள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை - வடமேற்கு, அதிர்ஷ்ட எண் - 8, அதிர்ஷ்ட நிறம் - கருப்பு நிறம்



Click it and Unblock the Notifications