Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
உங்க ராசிய சொல்லுங்க... உங்களோட வெற்றிக்கான ரகசியத்தை தெரிஞ்சிக்கோங்க...
உங்களுடைய குணம் என்ன, உங்களுடைய வெற்றி எதில் அடங்கியிருக்கிறது என உங்களுடைய ராசியை வைத்து இங்கே கணித்துக் கூறப்பட்டுள்ளது.
ஜோதிடம் என்பது நம்முடைய பிறந்த நேரத்தினை வைத்துக் கணிக்கப்படுவது. அந்த சமயத்தில் கிரகங்களின் சுழற்சியை அடிப்படையாக வைத்து நம்முடைய வாழ்க்கையைக் கணிப்பார்கள். அதற்கு அடிப்படையாக இருப்பது ராசியும் நட்சத்திரமும்.

நாம் பிறந்த நம்முடைய ராசியை வைத்து நாம் எப்படிப்பட்டவர்குள், எதை சாதிப்போம், எது நமக்குத் தடையாக இருக்கும் என்பது பற்றியெல்லாம் ஆராய்ந்து கணித்துக் கொள்ள முடியும். அப்படித்தான் கீழே 12 ராசிகளுக்குமான குணங்களும் வெற்றிக்கான ரகசியங்களும் கணிக்கப்பட்டுள்ளன.

மேஷ ராசிக்காரர்கள்
மேஷ ராசிக்காரர்கள் இயற்கையாகவே யாருக்கும் கட்டுப்படாதவர்களாகவும் சுதந்திரமாக செயல்படுகிறவர்களாகவும் இருப்பார்கள். எந்த காரியத்தை எடுத்தாலும் வைராக்கியம் மிக்கவர்களாக இருப்பார்கள். எந்த விஷயத்தை எடுத்தாலும் தைரியத்தோடும் தன்னம்பிக்கையும் செய்து முடிப்பார்கள். எதுவாக இருந்தாலும் அவசர அவசரமாக எதையும் செய்து முடிப்பார்கள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்யாவிட்டால் அவர்களுக்கு தூக்கமே வராது. உங்களுடைய கோபத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டால், நன்மை பயக்கும்.

ரிஷப ராசிக்காரர்கள்
ரிஷப ராசிக்காரர்கள் கொஞ்சம் அமைதியாக குணம் கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஏதாவது விஷயத்தில் அவர்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தாலும் அதை செய்வதற்கான துணிச்சல் அவர்களுக்கு இருக்காது. தான் எடுக்கும் எந்த முயற்சியிலும் பின்வாங்க மாட்டார்கள். ஆடை, அணிகலன்கள் டிரெண்டியாக அணிவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இவர்களுக்கான தலைமைப் பதவி தக்க சமயத்தில் வந்து சேரும். இவர்களுடைய வாழ்க்கை ஏற்ற இறக்கமாகவே இருக்கும்.

மிதுன ராசிக்காரர்கள்
மிதுன ராசிக்காரர்கள் அதிக அளவு மூளை பலம் உள்ளவர்களாகவும் புத்திசாலித்தனம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். மிகச்சிறந்த நிர்வாகத் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். எதையும் புதுமையாக செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். மிக சிரமமான காரியங்களைக் கூட, மிக எளிதாகச் செய்து முடிப்பார்கள்.
அடுத்தவர்களுக்காக நிறைய யோசனைச் சொல்வார்கள். ஆனால் இவர்களைப் பற்றி எதையும் யோசிக்கவே மாட்டார்கள். ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்கள்.

கடக ராசிக்காரர்கள்
மற்றவர்களுடைய மனதையும் குணத்தையும் அறிந்து கொண்டு பேசுவதில் வல்லவர்கள் இவர்கள். இவர்களுக்கு ஒரு பிரச்னையை சமாளிப்பதற்காக எந்த ஆயுதங்களும் தேவையில்லை. தன்னுடைய பேச்சுத்திறமையையே ஆயுதமாக மாற்றி அந்த பிரச்னைக்காக தீர்வு காண்பார்கள். அதிக வைராக்கிய குணம் கொண்டராக இருப்பார்கள். எந்த காரியமாக இருந்தாலும் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டார்கள். பொது நலனில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.

சிம்ம ராசிக்காரர்கள்
சிம்ம ராசிக்காரர்கள் மனதளவில் அதிக துணிவு கொண்டவராக இருப்பார்கள். தலைமைப் பதவிக்கு மிகவும் தகுதியானவராக இருப்பார்கள். ஆளுமைத் தன்மை மிக்கவராக இருப்பார்கள். எவருக்கும் அடங்க மாட்டார்கள். மற்ற எல்லோரையும் அடக்கி ஆள வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்கு உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி காரியம் சாதித்துவிடுவார்கள். நான் என்ற சுயநலப் போக்கு எண்ணங்களையும் ஈகோவையும் விட்டால், நன்மை உண்டாகும்.

கன்னி ராசிக்காரர்கள்
அடுத்தவர்கள் பாராட்ட வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். ஆனால் அடுத்தவர்களுடைய பாசத்தை எதிர்பார்ப்பார்கள். இவர்களுக்கு ஆத்ம பலங்களை விட அறிவு பலம் மிக அதிகம். பார்த்தவுடன் இவர்குளைப் புரிந்து கொள்வது மிகமிக இரிது. தங்களுடைய வாழ்க்கையின் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். எல்லாவற்றையும் தங்களுடைய மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள்.

துலாம் ராசிக்காரர்கள்
துலாம் ராசிக்காரர்கள் மிகவும் கை ராசி மிக்கவர்கள். எதிலும் கடமை தவறாமல் இருப்பார்கள். அதிக இரக்க சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். சில சமயங்களில் கோபம் வரும்போது, அரக்க சுபாவமும் இருக்கும். மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். கோபம் இவர்ளின் பிறப்பிலேயே இருந்து வந்தது.

விருச்சிக ராசிக்காரர்கள்
இவர்கள் எல்லா விஷயங்களிலும் விறுவிறுப்பாகச் செயல்பட்டு, அதன்மூலம் வெற்றிகளைக் குவிப்பார்கள். கூர்மையான புத்திக் கூர்மை கொண்டவர்களாக இருப்பார்கள். குணத்தில் இமயம் போல் உயர்ந்தவர்களாக இருப்பார்கள். தவறு செய்கிறவர்கள் எவ்வளவு பெரிய உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அதைத் தட்டிக் கேட்க தயங்க மாட்டார்கள்.

தனுசு ராசிக்காரர்கள்
எல்லோருக்கும் உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். உழைப்பை நம்புகின்றவர்களாக இருப்பார்கள். திறமையை நம்புவார்கள். அதனாலேயே வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவார்கள். இவர்குள் எதற்கெடுத்தாலும் ரோஷப்படுவார்கள். ஏன் கவரிமான் பரம்பரை என்றுகூட அவர்களைச் சொல்லலாம். வெளியில் சுதந்திரப் பறவைகளாகச் சுற்றித் திரிவார்கள். ஆனால் வீட்டில் இவர்களுக்கு நிம்மதியே இருக்காது.

மகர ராசிக்காரர்கள்
எப்போதும் புன்னகை சிந்தும் முகத்தோடு இருப்பார்கள். அடுத்தவர்களை நல்ல செய்தால் போற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் இனிமையான குணத்தோடு காட்சியளிப்பார்கள். எதையும் ஆராய்ந்து முடிவெடுக்கும் சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள். நன்கு சிந்திக்கு ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்குளுக்கு உறவும் பகையும் தற்காலிகமானதாகத் தான் இருக்கும். எதையும் பொறுமையாகக் கையாளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். பல சோதனைகளுக்குப் பிறகு, சாதனைகள் செய்வார்கள்.

கும்ப ராசிக்காரர்கள்
சனி பகவானின் முழு ஆதிக்கமும் கொண்ட இவர்கள் சமுதாயத்தில் தனக்கென தனி முத்திரை பதிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். உழைப் முழுதான நம்பக் கூடியவர்கள். உழைப்பால் உயர்ந்த பட்டம் பெறுவார்கள். இவர்கள் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் ஏதாவது ஒரு நீங்காத மனக்குறை இருநு்து கொண்டே இருக்கும். படிப்பை விடவும் தன்னுடைய அனுபவத்தின் மூலமாக உயர்ந்த நிலையை அடைவார்கள்.

மீன ராசிக்காரர்கள்
மற்றவர்களால் இயலாத காரியத்தையும் மிக எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த செயலையும் எளிதாகச் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களுடைய மனநிலையை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்றாற்போல செயல்படும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். தான் எந்த தவறு செய்தாலும் அதை மற்றவர்களிடம் மறைக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். மற்றவர்கள் முன் தைரியமாக ஒத்துக் கொள்வார்கள். அதுதான் அவர்களுடைய தனிச்சிறப்பு. எதிலும் கொஞ்சம் நிதானமாக இருப்பது கொஞ்சம் நன்மை தரும்.



Click it and Unblock the Notifications
