Latest Updates
-
துவரம் பருப்பு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 07 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
லட்சுமி தேவியின் அருள் எப்போதும் கிடைக்க இந்த 3 செயல்களை செய்தால் போதுமென்று சாணக்கியர் கூறுகிறார்
லட்சுமி தேவியின் அருளை பெற வேண்டுமென்பதே அனைவரின் ஆசையாகத்தான் இருக்கும். ஆனால் அதனை எப்படி செய்ய வேண்டும் என்பதில் பலருக்கும் நிறைய சந்தேகங்கள் இருக்கும்.
வாழ்க்கையில் அனைவருமே லட்சுமி தேவியின் அருளை பெற்று செல்வ செழிப்புடன் வாழ வேண்டுமென்றுதான் ஆசைப்படுவோம். லட்சுமி தேவியின் அருளை பெற வேண்டுமென்பதே அனைவரின் ஆசையாகத்தான் இருக்கும். ஆனால் அதனை எப்படி செய்ய வேண்டும் என்பதில் பலருக்கும் நிறைய சந்தேகங்கள் இருக்கும். அப்படி உங்கள் சந்தேகங்களை விளக்க ஒரு மாமேதை சில வழிகளை கூறியுள்ளார்.

அந்த மாமேதை வேறுயாருமல்ல தந்திரங்களின் நிபுணரான சாணக்கியர் ஆவார். நமது புறவாழ்க்கையில் நாம் விரும்பும் அனைத்தும் நமக்கு கிடைக்க உதவுவது பணம்தான். அந்த பணத்தை பெற லட்சுமி தேவியின் அருளை பெற வேண்டியதன் அவசியம். அவ்வாறு லட்சுமி தேவியின் அருள் உடனடியாக கிடைக்க வேண்டுமெனில் இந்த செயல்களை கண்டிப்பாக செய்யவும்.

கடின உழைப்பு + புத்திசாலித்தனம் = செல்வம்
வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு கடின உழைப்பை தவிர சிறந்த வழி வேறு எதுவும் இல்லை. ஆனால் உங்கள் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லை எனில் நீங்கள் எங்கோ தப்பு செய்கிறீர்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். ஏனெனில் புத்திசாலித்தனமில்லாத வெறும் கடின உழைப்பு உங்களுக்கு ஒருபோதும் நீங்கள் விரும்பும் பலனை தராது என்று பல்கலை வித்தகர் சாணக்கியர் கூறுகிறார்.

சாணக்கிய மந்திரம்
சாணக்கியரின் கூற்று என்னவெனில் " முர்க்க யாத்ரா பூஜ்யந்தே தன்யம் யாத்ரா சுசஞ்சிதம் ". இதன் பொருள் என்னவென்றால் எவரொருவர் தான் கூறும் இந்த மூன்று விஷயங்களை தவிர்க்காமல் செய்கிறாரோ அவர் எப்பொழுதும் லட்சுமி தேவியால் ஆசீர்வதிக்கப்படுவார் என்று தன் நூலில் சாணக்கியர் கூறியுள்ளார்.

முதல் செயல்
புத்திசாலித்தனமும், அறிவாற்றலும் கொண்ட ஒருவரை அவர்கள் குடும்பம் ஊக்குவித்து, பாராட்டும்போது அந்த குடும்பத்தை லட்சுமி தேவி ஆசீர்வதிப்பார். சரியான நபருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும்போது அந்த இடத்தில் லட்சமி தேவி வசிக்க விரும்புவார்.

இரண்டாவது செயல்
எந்த வீட்டில் தங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை அவர்களின் பொருளாதார நிலையை கொண்டு அவமதிக்காமல் அவர்களை நன்கு கவனித்து வயிறும், மனதும் நிறைய அனுப்பி வைக்கிறார்களோ அவர்கள் இல்லம் ஆலயத்தை காட்டிலும் புனிதமானதாகும். அப்படிப்பட்டவர்கள் இல்லத்தில் லட்சுமி தேவி நிரந்தரமாக தங்குவதுடன் தன் அருளால் அவர்களை செல்வச்செழிப்புடன் வாழவைப்பார்.

மூன்றாவது செயல்
எந்த வீட்டில் கணவரும், மனைவியும் ஒருவர் மீது ஒருவர் குன்றாத காதலுடன் உண்மையான அக்கறை கொண்டு வாழ்கிறார்களோ அவர்கள் இல்லத்தில் வசிக்க லட்சுமி தேவி விரும்புவார். ஒருவேளை அப்படி இல்லாமல் இருவரும் ஒருவர் மீது ஒருவர் வெறுப்பை உமிழ்ந்துகொண்டும், வன்சொற்களால் திட்டிக்கொண்டும் இருந்தால் அந்த வீட்டிற்கு ஒருபோதும் லட்சுமி வரமாட்டார். இது மட்டுமின்றி மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் சாணக்கியர் சில வழிகளை கூறியுள்ளார்.

பண இழப்பு
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சாணக்கியர் கூறும் முதல் வழி உங்கள் பணக்கஷ்டங்களை பற்றி ஒருபோதும் மற்றவர்களிடம் விவாதிக்காதீர்கள். உங்களுக்கு பணக்கஷ்டம் ஏற்பட்டால் அதை உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு காரணம் என்னவெனில் உங்கள் பணக்கஷ்டத்தை பற்றி அறியும்போது பெரும்பாலானோர் அதற்கு உண்மையாக உதவ முன்வரமாட்டார்கள். அவர்கள் உதவுவது போல நடித்தாலும் அது போலியாகத்தான் இருக்கும்.

தனிப்பட்ட பிரச்சினைகள்
இரண்டாவது வழி என்னவெனில் உங்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை எப்பொழுதும் ரகசியமாகவே வைத்திருங்கள். அவ்வாறு பகிர்ந்து கொள்ளும்போது உங்கள் ரகசியங்கள் ரகசியங்களாக இருக்காது. அது உங்களை எப்பொழுதும் பதட்டமாகவே வைத்திருக்கும். நிச்சயம் மற்றவர்கள் உங்களை பார்த்து சிரிக்கும்படி இது செய்துவிடும்.

மனைவியின் குணம்
உங்கள் மனைவியின் குணத்தை பற்றி ஒருபோதும் மற்றவர்களிடம் பகிராதீர்கள். இதனை ரகசியமாக வைத்திருப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள். மற்றவர்களின் முன்னால் தங்கள் மனைவியை பற்றி ஆண்கள் பேசும்போது அவர்கள் சொல்ல விரும்பாத சில தகவல்களையும் கூறிவிட வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு பல பிரச்சினைகளை உண்டாக்கும்.



Click it and Unblock the Notifications