For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இவரை திருமணம் செய்து கொள்ள 60 பேர் போட்டி! உதவிக்கரம் நீட்டிய மத்திய அமைச்சர் மற்றும் மாநில முதல்வர்

இவரை திருமணம் செய்து கொள்ள 60 பேர் போட்டி! உதவிக்கரம் நீட்டிய மத்திய அமைச்சர் மற்றும் மாநில முதல்வர் !!!

|

ஒரு பெண்ணின் எதிர்காலமாக இங்கே இருப்பவர்கள் எல்லாம் நிர்ணயித்திருக்கிற இடம் அவளது திருமணம். அவளுக்கென்ற ஓர் வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டால் பெற்றோரின் கடமை முடிந்துவிட்டது என்று நிர்ணயித்துக் கொள்வது தான் வழக்கமாக இருக்கிறது.

இங்கேயும் ஒரு பெண்ணின் திருமணத்தைப் பற்றி தான் பார்க்கப்போகிறோம். ஆனால் இங்கே சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்திருக்கிறது. குறிப்பிட்ட பெண்ணிற்கு மாப்பிள்ளை தேடியது யார் தெரியுமா? இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கிற சுஸ்மா ஸ்வராஜ்.

Pakistan

Image Courtesy

இதுவரை அறுபது பேர் வரையில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்க அவர்களில் 25 பேர் வரை அடுத்த கட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

Image Courtesy

இந்தியாவிலிருந்து வழிதவறி தன்னுடைய ஏழு வயதில் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டார் அந்தப் பெண். வழி தவறி சென்றாரா அல்லது கடத்திச் செல்லப்பட்டாரா என்று அந்த சிறுமிக்கே தெரியவில்லை. லாகூருக்கு சென்ற சம்ஜ்ஹுதா எக்ஸ்பிரசில் தனியாக உட்கார்ந்திருந்த சிறுமியை மீட்டு பாகிஸ்தானில் இருக்கிற ஒரு ஹோமில் சேர்க்கப்பட்டார்.

#2

#2

Image Courtesy

சிறுமிக்கு தன்னுடைய அடையாளங்களையும் விவரங்களையும் சொல்லத் தெரியாத்ததால் அங்கேயே வளர்க்கப்பட்டார். ஒரு கட்டத்தில் சிறுமி இந்தியாவிலிருந்து வந்திருக்க வேண்டும் என்பது மட்டும் உறுதியானது. சிறுமி கூறிய சின்ன சின்ன அடையாளங்களை வைத்து உறுதி படுத்தியிருந்தார்கள்

இந்தியாவைச் சேர்ந்த ஓர் சிறுமி பாகிஸ்தானில் இருக்கிறாள் அவளை பெற்றோருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று பேச்சு எழ ஆரம்பித்தது.

#3

#3

Image Courtesy

இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது சல்மான் கானின் பாஜிரங் பைஜான் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான். அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஓர் சிறுமியை தன் தாயுடன் சேர்ப்பதாய் கதைக்களம் அமைந்திருக்கும்.

ஒரு வழியாய் 2015 ஆம் ஆண்டு அந்தப் பெண் இந்தியா அனுப்பி வைக்கப்படுகிறார். பாகிஸ்தானில் வளர்க்கப்பட்ட அந்த சிறுமிக்கு கீதா என்று பெயரிடப்பட்டிருந்தது. இதில் ஹைலைட்டான விஷயம் என்ன தெரியுமா? அந்த சிறுமிக்கு காது கேட்காது வாய் பேச முடியாது.

#4

#4

இந்தியாவிற்கு வந்த கீதாவை அவளது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பலரும் கீதா பல ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன எங்கள் குழந்தையாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களில் யாரையும் கீதாவிற்கு அடையாளம் தெரியவில்லை. அதோடு கீதாவும் அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டார். இதனால் பெற்றோரை தேடும் படலம் தொய்வானது.

#5

#5

Image Courtesy

இந்த நேரத்தில் தான் கீதாவிற்கு என்று ஓர் வாழ்க்கை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவளுக்கு திருமணம் செய்து வைப்பது என்று முடிவானது. மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கீதாவிற்கு கன்யா தானம் செய்ய தயாராய் இருப்பதாக முன்வந்தார்.

அவர்களின் வழக்கப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் போது தந்தை ஸ்தானத்தில் இருப்பவர் பெண்ணை மணமகனிடம் தாரை வார்த்துக் கொடுப்பார். அதைத் தான் அவர்கள் கன்யா தானம் என்கிறார்கள்.

#6

#6

Image Courtesy

மத்திய அமைச்சரும், முதலமைச்சரும் விஷயத்தை துரிதமாக முடிக்க திட்டமிட்டார்கள் சிவில் உறுப்பினர்களிடம் கீதாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கீதா காது கேளாத வாய்பேச முடியாதவர் என்பதால் அவரது இணையும் அதே போன்றதொரு மாற்றுத் திறனாளியாக இருந்தால் நல்லது என்று நினைத்து ஒருவரை டெல்லியில் இருக்கும் சுஷ்மா சுவராஜின் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.

#7

#7

Image Courtesy

ஆனால் கீதாவிற்கு அந்த வரன் பிடிக்கவில்லை. சுஷ்மா ஸ்வராஜ் மாப்பிள்ளை தேடும் படலத்தை விரிவு படுத்தினார். உனக்கான இணையை நீயே தேர்ந்தெடுத்துக் கொள் என்று கீதாவிடம் சொல்லப்பட்டது.

கயாந்திரா ப்ரோஹிட் என்ற சமூக ஆர்வலர் கீதாவிற்கு வரன் தேடுவதில் தீவிரமாக இறங்கினார். வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜும் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் கீதாவின் நிலையைப் பற்றிச் சொல்லி அவருக்கு நடந்து கொண்டிருக்கிற திருமண ஏற்பாடுகளைப் பற்றியும் விவரித்திருந்தார். விருப்பமிருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.

#8

#8

Image Courtesy

25 வயதுக்கு மேற்பட்ட ஆண், காது கேளாத வாய்பேச முடியாத ஆணாக இருக்க வேண்டும் என்பது முக்கிய விதியாக விதிக்கப்பட்டிருந்தது. அதோடு கீதாவை திருமணம் செய்து கொள்பவருக்கு அரசு வேலையும் ஒரு வீடும் வழங்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

ஏராளமானோர் விண்ணப்பித்தனர். முதற்கட்டமாக அறுபது பேரின் விண்ணப்பங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

#9

#9

Image Courtesy

கிடைக்கப்போகிற அரசு வேலை மற்றும் வீட்டிற்கு ஆசைபட்டு தான் கீதாவை திருமணம் செய்கிறார்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் எல்லாம் இதிலிருந்து நீக்கப்பட்டார்கள். இறுதி கட்டமாக பதினைந்து பேர் பரிசீலனைக்கு வந்திருக்கிறார்கள்.

எழுத்தாளர்,ஆர்மி ஆஃபிசர்,விவசாயி,இன்ஜினியர், உட்பட பல துறைகளைச் சேர்ந்தவர்கள் கீதாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் ராஜஸ்தான், உத்திரபிரதேசம்,உத்ராஞ்சல்,பீஹார்,மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

#10

#10

Image Courtesy

இந்தூர் மாவட்ட நிர்வாகத்தினரும் பார்க்கப்பட்ட வரன்களில் கீதாவிற்கு பொறுத்தமானவரை இறுதி செய்ய உதவி வருகிறார்கள். கீதாவின் பாதுகாவலாக இருக்கும் மோனிகா என்பவர் இது குறித்து கூறுகையில் கீதாவிற்கு என்று ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வேலை தான் இது. அவருக்கான வாழ்க்கையை அவர் விருப்பப்படி சந்தோஷமாக அமைத்துக் கொள்ள நாங்கள் துணையாய் இருக்கிறோம். எங்களால் முடிந்த அளவு உதவிகளை நாங்கள் செய்கிறோம். இறுதி முடிவினை கீதாவின் கையில் தான் கொடுத்திருக்கிறோம் என்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse wedding women
English summary

Central Minister Seeks Groom For Indian Girl

Central Minister Seeks Groom For Indian Girl
Story first published: Thursday, May 24, 2018, 12:20 [IST]
Desktop Bottom Promotion