For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தன் வாயாலேயே தங்களை டேமேஜ் செய்துக் கொண்ட பிரபலங்கள்- 2018 #Top10

தன் வாயாலேயே தங்களை டேமேஜ் செய்துக் கொண்ட பிரபலங்கள்- 2018 #Top10

|

தவளை தன் வாயாலே கெடும் என்பார்களே, அப்படி தான் இந்த ஆண்டு சில அரசியல், திரையுலக மற்றும் விளையாட்டு பிரபலங்கள் தங்கள் வாயாலேயே தங்கள் இமேஜை டேமேஜ் செய்துக் கொண்டனர். இது பிரதமரில் இருந்து சூப்பர்ஸ்டார், ரன் மெஷின் வரை பலருக்கும் பொருந்தும்.

நீங்கள் எத்தனை பெரும் பதவி வகித்தாலும், எவ்வளவு பெரிய செல்வாக்கு கொண்டிருந்தாலும், வருடம் நூறு கோடிகளுக்கு மேல் சம்பாதித்தாலும்... வார்த்தை தவறினால்.. மீம்களில் போட்டு கிழிப்போம் என்று மீம் கிரியேட்டர்கள் வாய் தவறி பேசிய பிரபலங்களை வெச்சு செஞ்ச ஆண்டு 2018.

அப்படி இந்த அண்டு சிக்கிய பிரபலங்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எச். ராஜா!

எச். ராஜா!

இந்த வருடம் முழுக்க சீரான இடைவேளையில் எண்டர்டெயின்மென்ட் செய்தவர். பா.ஜ.க தேசிய தலைவர் எச். ராஜா அவர்கள் தான். அட்மின் பயலில் ஆரம்பித்து, ஜோசப் விஜய், கோர்ட்டாவது கூந்தலாவது என்று தொடர்ந்து மீம் டெம்ப்ளேட் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

துரைமுருகன்!

துரைமுருகன்!

ஒரு அரசியல் பிரமுகரை பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது... அதாவது, இதாவது என்பது போல இவர் பெயரை வைத்து கேலி செய்ய... அதை டெம்ப்ளேட்டாக வைத்து மீம்களை தெறிக்கவிட்டனர்.

ஸ்டாலின்!

ஸ்டாலின்!

தொடர்ந்து தான் செல்லும் இடத்தில் எல்லாம் பழமொழிகளை தவறாகவே பேசி நிறைய மீம்களில் அடிப்பட்டார் ஸ்டாலின். அதில், அவர் பேசிய யானை வரும் முன்னே, மணியோசை வரும் பின்னே வேற லெவல் வைரலானது. மேலும், சுதந்திர நாளை குறிப்பிடும் போது ஏற்பட்ட குளறுபடி எல்லாம் வேறே லெவலுக்கும் அட்வான்ஸ்டு வெர்ஷன்.

சீமான்!

சீமான்!

இந்த ஆண்டு பிறரை திட்டியதை காட்டிலும் அடுக்குமொழி வசனம், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தனது சுயபுராணம் பாடியே பெரிதும் மீம்களில் அடிப்பட்டவர் சீமான் அவர்கள். இவர் பேசிய தாக்கு, அட்டாக்கு, உடன் சடன் போன்றவரை மிகவும் வைரல் ஆகின. மேலும், ஜெர்மனியில் டீ-கடை ஒன்றில் தன் தம்பி அமர்ந்திருந்தது, படகில் இலங்கை சென்றது, உணவுண்டு கழித்தது போன்றவை என பெரும் லிஸ்டே இருக்கிறேது.

ரஜினி!

ரஜினி!

தூத்துக்குடியில் ஆவேசமான பேச்சு ஸ்டார்ட்டிங் பாயிண்ட். காலா நேரத்தில் கர்நாடகத்தில் படம் ரிலீசாக தைவித்து என கூறி (கன்னடத்தில் தயவு செய்து என்று கெஞ்சியது) பேசியது. விமான நிலையத்தில் யாரந்த ஏழு பேர், யாரு பலசாலி போன்றவை ரஜினின் இமேஜை டேமேஜ் செய்தது என்பது தான் உண்மை.

தமிழிசை!

தமிழிசை!

வருடங்கள் மாறினாலும் தாமரை மலர்ந்தே தீரும் என்ற வசனத்தை மாற்றாத தமிழசை.. நிச்சயம் தமிழகத்தில் தாமரை மலரும். சேற்றை வாரி இறைத்தாலும், செயற்கை மழை பெய்தாவது தாமரையை மலர செய்வோம் என்று கூறியது... மக்கள் ஒட்டு போடாவிட்டாலும் நாங்கள் எப்படியாவது வெற்றிபெறுவோம் என்று அவரே தன் மீதும் கட்சி மீதும் எதிர்வினையாக பேசியது போல அமைந்தது. மேலும், லேட்டஸ்டாக வட மாநிலங்களில் பா.ஜ.க தோல்வி அடைந்ததை வெற்றிகரமான தோல்வி என்று கூறி தோல்விக்கு ஒரு புது அகராதி கொடுத்து அசத்தினார் தமிழிசை.

இளையராஜா!

இளையராஜா!

தனது இசைக்கு ராயல்டி கோடி இளையராஜா பேசிய வீடியோ பெரும் வைரலானது. ராயல்ட்டி அனைவரும் தான் வாங்குகிறார்கள் என்றாலும், இளையராஜா பேசிய முறை கொஞ்சம் தெளிவாக புரியாததால் மீம்களில் சிக்கிக் கொண்டார்.

முருகதாஸ்!

முருகதாஸ்!

சர்கார் கதை திருட்டு விவகாரத்தில் பவுண்டட் ஸ்க்ரிப்டே அவங்க படிக்கல... வெறும் சினாப்ஸிஸ் படிச்சுட்டு எப்படி கதை திருட்டுன்னு சொல்ல முடியும் என்று எல்லா யூடியூப் சேனல்களிலும் பேட்டி கொடுத்தார் முருகதாஸ். நீதிமன்றம் சென்று பார்த்துக் கொள்கிறேன் என்று விடாப்படியாக இருந்தவர். கடைசி நேரத்தில் யு டர்ன் போட்டு, செங்கோல் கதாசாரியருக்கு கிரெடிட் தருகிறேன் என்று ஒப்புக் கொண்டார்.

மோடி ஜி!

மோடி ஜி!

அவர்கள் ஆட்சி நடப்பதையே மறந்து ஒருமுறை மேடையில், மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை குறைப்போம் என்று பேசி மீம் கிரியேட்டர்கள் வாய்க்கு அவலாக மாறினார்.

ட்ரான்ஸ்ஃபர்மேஷன் கோபி!

ட்ரான்ஸ்ஃபர்மேஷன் கோபி!

சீரியல் மற்றும் திரைப்பட இயக்குனர் கோபி என்கிற திருமுருகன் தனது கல்யாண வீடு சீரியலில் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் காட்சிகளில் கூடாது... கூடாது என்று கூவி, கூவி பேசிய வசனம்... அவருக்கு ஏடாகூடமாக அமைந்துவிட்டது. இந்த ஆண்டில் ஷ்ரூவ் கரணுக்கு பிறகு தெய்வீக லெவல் ஹிட்டானது நம்ம கோபி மீம்ஸ் தான்.

விராத் கோலி!

விராத் கோலி!

இந்தியாவில் இருந்தால் இந்திய வீரர்களை தான் பிடிக்க வேண்டும். உங்களுக்கு அயல்ந்நாட்டு வீரர்களை பிடித்தால், இந்தியாவை விட்டு வெளியேறிவிடுங்கள் என்று கொஞ்சம் காட்டமாக பேசி இருந்தார். அப்படி பார்த்தால் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கம் டான் பிராட் மேன், சச்சின் போன்றவர்களை பிடிக்கும். அதற்காக அனைவரும் இந்தியா, ஆஸ்திரேலியாவில் மட்டுமா வாழ முடியும். ஆக்ரோஷம் இருக்கலாம், ஆனால், அகங்காரம் ஆகாது கோலி.

சரத்குமார்!

சரத்குமார்!

சரத்குமார் தனது கட்சி கூட்டம் ஒன்றில் ஜாதி குறித்து ஆவேசமாக பேசும் போது, தாயின் வயிற்றில் கருவுற்றிருக்கும் என ஆரம்பித்து தத்தக்கா பித்தக்கா என்று உளறியது வீடியோ மீம்ஸ்களாக உருவெடுத்தன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Celebrities Controversies Meme Template 2018!

Here we have listed some controversies that made by Indian political and entertainment Celebrities, which later became a viral Meme Template in 2018
Desktop Bottom Promotion