Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
உங்க கையில இந்த ரேகை எப்படி இருக்கு? உங்க எதிர்காலம் பத்தி என்ன சொல்லுதுனு தெரிஞ்சிக்கோங்க....
உங்களுடைய கை ரேகைப்படி உங்களுடைய எதிர்காலம் தொழில் பற்றி நிபுணர்களின் கருத்துக்கள் இதோ
எல்லாருக்கும் தங்களுடைய வாழ்க்கையை பற்றிய சுவராஸ்யத்தை அறிந்து கொள்வது என்பது விருப்பமாக இருக்கும். வாழ்க்கையில் ஏற்படும் வெற்றி தோல்விகள், சந்தோஷங்கள் துக்கங்கள் என்று எல்லாவற்றையும் கணித்து சொல்லும் ஒரு ஜோதிட முறை தான் இந்த கைரேகை ஜோதிடம் என்பது.

உங்கள் கைரேகையைக் கொண்டே உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கூற முடியும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள். நமது கைகளில் உள்ள சில தனித்துவமான ரேகைகளின் வடிவமைப்பு மற்றும் தன்மையை கொண்டு ஒவ்வொருத்தரின் வாழ்க்கையை அறிந்து கொள்ள இயலும். அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண உள்ளோம்.

விதி ரேகை மற்றும் சூரிய ரேகை
உங்கள் வாழ்க்கையை பற்றி அறிய விதி ரேகை மற்றும் சூரிய ரேகை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சரி வாங்க உங்கள் கைரேகையைக் கொண்டு வாழ்க்கையின் சுவராஸ்யத்தை பார்க்கலாம்.

வாழ்க்கை ரேகை வியாழன் மேட்டிற்கு மேலாக செல்லுதல்
உங்கள் உள்ளங்கையில் வாழ்க்கை ரேகை வியாழன் மேட்டை நோக்கி சென்றால் நீங்கள் சிறந்த தலைமை பண்பு பெற்றவராக இருப்பீர்கள். நீங்கள் பணி சார்ந்த வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்வீர்கள். அதுமட்டுமல்ல நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியராக இருக்க வாய்ப்புள்ளது.

வாழ்கை ரேகை கொடி வடிவில் இருந்தால்
உங்கள் வாழ்க்கை ரேகை பார்ப்பதற்கு கொடி வடிவத்தில் இருந்தால் நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளராக இருக்க வாய்ப்புள்ளது. இந்த எழுத்தாளர் திறன் உங்கள் கூடவே பிறந்தது என்றே கூறலாம்.

கிளைகளையுடைய வாழ்க்கை ரேகை
உங்கள் உள்ளங்கைகளில் வாழ்க்கை ரேகை கிளைகளையுற்று இருந்தால் வாழ்க்கையில் எதையும் கஷ்டப்பட்டு சாதிக்க வேண்டியிருக்கும். வெற்றி என்பது தாமதமாகவே கிடைக்கும். 30 விநாடிகள் கழித்தே வெற்றி கனியை உங்களால் சுவைக்க முடியும்.

வாழ்க்கை ரேகை சனி மேட்டிற்கு சென்றால்
உங்கள் வாழ்க்கை ரேகை சனி மேட்டை நோக்கி சென்றால் நீங்கள் ஒரு சிறந்த தொழிலதிபராக இருக்க வாய்ப்புள்ளது. அதிலும் நிலக்கரி, கட்டிட தொழில், இயந்திர வேலை,, எண்ணெய் பிசினஸ், லெதர் தொழிற்சாலை போன்றவற்றில் கொடி கட்ி பறக்கும் வாய்ப்புள்ளது என்று கைரேகை ஜோதிடம் கூறுகிறது.

வாழ்க்கை ரேகை சூரிய மேட்டை நோக்கி செல்லுதல்
உங்கள் வாழ்க்கை ரேகை சூரிய மேட்டை நோக்கி சென்றால் நீங்கள் சினிமாத் துறையில் புகழ்பெற்று விளங்க வாய்ப்புள்ளது. மேலும் அரசாங்க மேலதிகாரியாகவும் வர வாய்ப்புள்ளது.

வாழ்க்கை ரேகை புதன் மேட்டை நோக்கி செல்லுதல்
உங்கள் உள்ளங்கைகளில் உள்ள வாழ்க்கை ரேகை புதன் மேட்டை நோக்கி சென்றால் நீங்கள் ஒரு சிறந்த கணித மேதையாக திகழ்வீர்கள். அதிலும் கணக்கு வழக்கு துறையில் (C. A), தொலைத் தொடர்பு துறை, ஆடிட்டிங் போன்றவற்றில் புலியாக இருப்பீர்கள்.



Click it and Unblock the Notifications
