18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்களை பதப்படுத்தி வைத்திருக்கும் மியூசியம்!

Posted By:
Subscribe to Boldsky
உலகில் இப்படியும் ஒரு மியூசியம் உள்ளதா?- வீடியோ

குடும்பத்துடன் பயனுள்ள வகையில் எங்காவது சென்று வர வேண்டும் என்று சொன்னால் பல்வேறு இடங்கள் இருக்கிறது, அவரவர் ரசனைக்கு ஏற்ப சிலர் கோவில், தியேட்டர்,பார்க் என்று ஒவ்வொரு இடங்களை தேர்வு செய்வார்கள்.

அவற்றில் ஒன்று தான் மியூசியம், பொதுவாக மியூசியம் என்று சொன்னால் அங்கே நினைவுச் சின்னங்கள், மிகவும் அரிதான பொருட்கள், பழங்கால பொருட்கள் என பலவற்றை வைத்திருப்பார்கள். அதனை நாம் நேரடியாக பார்த்துவிட்டு வரலாம். சரி, இப்போது உலகம் முழுவதிலும் இருக்கக்கூடிய மிகவும் விசித்திரமான மியூசம்களைப் பற்றியும், அங்கே வைத்திருக்கக்கூடிய அபூர்வ பொருட்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

துருக்கி நாட்டில் மிகச்சிறிய குகையொன்றில் இந்த மியூசியம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை முடிகளின் மியூசியம் என்று அழைக்கிறார்கள். இங்கே கிட்டத்தட்ட 16 ஆயிரம் பெண்கள் தலைமுடி, நகம் ஆகியவற்றை வைத்திருக்கிறார்கள். இவர்களின் பெயர் மற்றும் வாழ்ந்த இடம் கூட எழுதப்பட்டிருக்கிறது.

Image Courtesy

#2

#2

மியூசியத்தின் பெயரை வைத்தே அங்கேயிருக்கக்கூடிய பொருட்கள் என்னவென்பதை கண்டுபிடித்து விடலாம். மியூசியம் ஆஃப் பேட் ஆர்ட். மோசமான ஓவியம் என்று சொல்லப்பட்டவை எல்லாம் சேகரித்து அதனை பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். இதற்கு இரண்டு கிளைகளும் இருக்கிறதாம்.

Image Courtesy

#3

#3

ஐஸ்லாந்தின் தலைநகரான ரெக்ஜாவிக் என்னுமிடத்தில் இந்த மியூசியம் அமைந்திருக்கிறது. இங்கே பல ஆண் உயிரினங்களின் பிறப்புறுப்புக்களை வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட ஆண் உயிரினங்களின் பிறப்புறுப்புக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 2011 ஆம் ஆண்டு இங்கே வைப்பதற்காக ஓர் ஆண் தன்னுடைய பிறப்புறுப்பை தானமாக அளித்திருக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் இங்கே பன்னிரெண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து பார்வையிடுகிறார்களாம். அவற்றில் சரி பாதி பெண்கள் தான்!

Image Courtesy

#4

#4

வடக்கு இங்கிலாந்தில் இந்த லான் மூவர் மியூசியம் இருக்கிறது. இங்கிலாந்தில் இருப்பதிலேயே மிகவும் விசித்திரமான மியூசியம் என்றால் அது இது தான். புல் தரையை சமன் செய்ய இந்த கருவியை பயன்படுத்துவார்கள். பல காலங்களாக பல வரலாற்று நாயகர்கள் பயன்படுத்திய லான் மூவர் கூட இங்கேயிருக்கிறதாம்.

Image Courtesy

#5

#5

மெக்ஸிகோவில் இருக்கக்கூடிய அண்டர் வாட்டர் மியூசியம் இது. உலகிலேயே மிகவும் வித்யாசமான மியூசியம் என்று சொல்லலாம், ஒரு வகையான களி மண்ணினால் சிற்பங்களை செதுக்கியிருக்கிறார்கள் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட சிற்பங்கள் இருக்கின்றன.

இதைப் பார்க்க நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறதாம்.

Image Courtesy

#6

#6

கொரோசியா என்ற நாட்டில் இந்த மியூசியம் அமைந்திருக்கிறது. இங்கே காதல் தோல்வியை குறிக்கும் வகையில் முன்னால் காதலர்களிடமிருந்து பெறப்பட்ட பொருட்களை வைத்திருக்கிறார்கள்.

சிலர் இதனை வேடிக்கையாக பார்த்தாலும் பலரும் மிகவும் உணர்வுப்பூர்வமாக பார்த்துச் செல்கிறார்களாம்.

Image Courtesy

#7

#7

இந்த மியூசியத்தில் ஆரம்ப காலம் அதாவது கிமு 2500லிருந்து தற்போது நவ நாகரிக டாய்லெட்டின் உருமாற்றம் எப்படியிருந்தது என்பதை காண்பிக்கும் வகையில் பலவகையான டாய்லெட்டுகளை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

தொழில்நுட்ப பயன்பாடு, அந்தப் பகுதியில் பின்பற்றப்பட்ட கலாச்சாரம், போன்றவற்றை தெரிந்து கொள்ள இந்த மியூசியத்திற்கு சென்று வாருங்கள்.

Image Courtesy

#8

#8

நெதர்லாந்தின் தலைநகரில் இந்த மியூசியம் அமைந்திருக்கிறது. ஆரம்பகாலத்தில் தங்களது மூதாதையர்கள் எத்தகைய கொடுமைகளை எல்லாம் அனுபவித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள இங்கே செல்லலாம். அதாவது முந்தைய காலத்தில் தண்டனை, டார்ச்சர் எப்படியெல்லாம் கொடுத்தார்கள் என்பதை உணர்த்தும் வகையில் சிற்பங்களை செதுக்கியிருக்கிறார்கள்.

Image Courtesy

#9

#9

உலகிலேயே சற்று பயம் தரக்கூடிய மியூசியம் என்று சொன்னால் அது இது தான். குனாஜுவாட்டோவில் அமைந்திருக்கும் இந்த மியூசித்தில் 1800களில் வாழ்ந்த மனிதர்களை பதப்படுத்தி மம்மிக்களாக வைத்திருக்கிறார்க. இங்கே கிட்டத்தட்ட நூறு மம்மி உடல்கள் இருக்கின்றன.

Image Courtesy

#10

#10

மாதவிடாய்க்கு எக்ஸிபிஷனா என்று அனைவரும் பிரம்மிக்கும் வகையில் இருக்கிறது இந்த மியூசியம் ஆஃப் மென்ச்சுரேசன்.மேரி லேண்டில் கடந்த 1995 ஆம் ஆண்டு இந்த மியூசியம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது இதனை ஹேரி ஃபின்லே என்பவர் நடத்தி வருகிறார்.

Image Courtesy

 #11

#11

இங்கே ஒரு நாளைக்கு மட்டும் இரண்டாயிரம் பார்வையாளர்கள் வருகிறார்கள் .மலாக்கா நகரத்தின் அழகை பறைசாற்றும் விதமாக இங்கே மிக விசித்திரமான பொருட்களை வைத்திருக்கிறார்களாம். அங்கே பின்பற்றப்படும் பழக்கவழக்கங்கள், கலாச்சார விஷயங்களை இப்போதிருக்கும் இளைஞர்களுக்கு தெரியப்படுத்தும் விதத்தில் இந்த மியூசியத்தை அமைத்திருக்கிறார்கள்.

Image Courtesy

#12

#12

சர்வதேச மியூசியம் இது. க்ரிப்டோஜுவாலஜி மியூசியம் என்று அழைக்கப்படும் இந்த மியூசியத்தில் அழிந்த விலங்குகளின் தடையங்கள் மற்றும் அவற்றின் எச்சங்களை வைத்திருக்கிறார்கள்.

ஆராய்ச்சியாளர்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Image Courtesy

#13

#13

இந்த மியூசியம் 1953 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. ஜாப்பானில் இருக்கும் டோக்கியோவில் இந்த மியூசியம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே மண் புழுக்களைப் பற்றிய முழு விவரங்களை கண்டறியும் விதத்தில் அவற்றின் முழுத் தொகுப்பு இங்கே அமைந்திருக்கிறது.

Image Courtesy

#14

#14

உலகிலேயே அதிகப்படியான காண்டம் தயாரிப்பது தாய்லாந்தில் தான். அங்கேயே காண்டம் மியூசியம் ஒன்றினை ஆரம்பித்திருக்கிறார்கள். காண்டம் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், காண்டம் குறித்து மக்களிடையே இருக்கக்கூடிய தவறான எண்ணங்களை போக்கவுமே இதனை ஆரம்பித்திருக்கிறார்களாம்.

Image Courtesy

#15

#15

இரும்பு வேலிகளுக்கு ஒரு மியூசியம். அந்தப் பக்கம் செல்லக்கூடாது என்பதை நினைவூட்ட வேலி அமைத்திருப்பார்கள் ஆனால் இங்கே கண்டிப்பாக சென்று வாருங்கள். இதனை 1970களில் ஆரம்பித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் இரும்பு வேலி பற்றிய வரலாறு சொல்வதற்காக என்று ஆரம்பிக்கப்பட்டது ஆனால் தற்போது 2400 விதமான வேலிகள் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். அவற்றை பயன்படுத்திய ஆண்டு, பயன்படுத்தும் விதம் போன்றவை எல்லாம் தெரிந்து கொள்ளலாம் குறிப்பாக முந்தைய காலத்தில் எப்படி இதனை தயாரித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Bizarre Museum Around The World

Bizarre Museum Around The World
Story first published: Friday, March 2, 2018, 9:00 [IST]