For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

10,000 பேரை எதிர்கொண்ட 21 சீக்கியர்கள் - இந்தியரின் பெருமை போற்றும் உலகம் வியக்கும் சாகர்ஹரி போர்!

10,000 பேரை எதிர்கொண்ட 21 சீக்கியர்கள் - இந்தியரின் பெருமை போற்றும் உலகம் வியக்கும் சாகர்ஹரி போர்!

|

1897ம் ஆண்டு கோடை காலத்தில் ஆங்கிலேயே பிரிட்டிஷ் அரசு உண்மையாகவே அதிக வெப்பத்தை எதிர்கொண்டது. ஆம்! பஷ்தூன் எனப்படும் கிழக்கு இரானிய மக்கள் இனப்பிரிவினர், இன்றைய பாகிஸ்தான் ஹங்கு மாவட்டத்தில் இருக்கும் சமனா ரேஞ் எனப்படும் மலைத்தொடர் பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் தொடுத்தனர்.

அந்த காலக்கட்டத்தில் அப்பகுதி முழுவதுமே ஆங்கிலேயே பிரிட்டிஷ் ஆட்சிக்கு கீழ் தான் இருந்தது. ஆயினும், வடமேற்கு பகுதி அவர்களது கட்டிபாட்டில் கொஞ்சம் தடுமாறி காணப்பட்டது. சாகர்ஹரி என்பது ஒரு சிறிய இனத்தவர் வாழ்ந்து வந்த பகுதி. அங்கே பிரிட்டிஷின் 36ம் சீக்கியர் படை பரிவில் வெறும் 21 வீரர்கள் மட்டுமே பாதுகாப்பு படையில் இருந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாகர்ஹரி

சாகர்ஹரி

சாகர்ஹரியில் இருந்து கோட்டைக்கு தொடர்பு கொள்ள முடியாதபடி பஷ்தூன் படையினர் தாக்குதல் நடத்தினார்கள். அவர்களை எதிர்த்து தாக்குதல் நடத்தும் அளவிற்கு அங்கிருந்த சீக்கியர் படையில் அப்போது ஆட்கள் இல்லை. ஆயினும், அவர்கள் தங்களை முற்றுகை இடும் முன்னர், அவர்களை அதிர்த்து போரிட அந்த 21 பேர் கொண்ட இராணுவ குழுவின் தலைவர் இஷ்வர் சிங் சில திட்டங்கள் வைத்திருந்தார்.

Image Source: WIKIPEDIA.COM

துணிச்சல்!

துணிச்சல்!

லாஜிக்காகவோ, பிராக்டிக்கலாகவோ இஷ்வர் சிங்கிடம் பெரிதாக எந்த திட்டமும் இல்லை. அதற்கான நேரமும் இல்லை ஆனால், பஷ்தூன் படையை எதிர்க்க அவரிடம் இதயம் முழுக்க நிறைய தைரியமும், துணிச்சலும் இருந்தது. இஷ்வர் சிங் தனது படையில் இருந்து வீரர்களுக்கு போருக்கு தயாராக கூறி ஆணையிட்டார். மேலும், தாங்கள் சண்டையிட போவதாக லாகார்ட் கோட்டையில் இருந்த லெப்டினென்ட் கர்னல் ஜான் ஹாஹ்டனுக்கு செய்தி அனுப்பிவிட்டார்.

Image Source: © Flickr

யுக்தி!

யுக்தி!

10,000 பேர் கொண்ட பஷ்தூன் படையை எதிர்க்க இஷ்வர் சிங் தலைமை தாங்கிய சீக்கியர் படையிடம் இருந்த ஒரே யுக்தி, தங்களுக்கு உதவி வரும் வரை தங்களை மீறி அவர்கள் சென்று விடக் கூடாது என்பது மட்டும் தான். அதற்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்ய அவர்கள் துணிவுடன் இருந்தனர்.

Image Source: © Facebook

போர் துவக்கம்!

போர் துவக்கம்!

போர் துவங்கியவுடன், பஷ்தூன் படையில் இருந்த பல வீரர்கள் காயம் அடைந்தனர். அப்போது, பஷ்தூன் படைய தலைமை சீக்கிய வீரர்களுக்கு சரணடைந்துவிட்டால் உயிருடன் விட்டுவிடுவதாக கூறப்பட்டது. ஆனால், போரிட்டு மரணித்தாலும் பரவாயில்லை, சரணடைய தயாராக இல்லை என்று இஷ்வர் சிங் கூறிவிட்டார்.

Image Source: © Facebook

மூர்க்கத்தனமான தாக்குதல்!

மூர்க்கத்தனமான தாக்குதல்!

பஷ்தூன் படையினர் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தினார்கள். அதை அனைத்தையும் தைரியமாக எதிர்கொண்டனர் சீக்கிய படையினர். 21 பேர் கொண்ட படையில் முதல் ஆளாக காயம் பட்டவர் பகவான் சிங். இஷ்வர் சிங் தனது வீரர்களிடம் பின்வாங்காமல் சண்டையிட உத்தரவிட்டார். பஷ்தூன் படையின் தாக்குதல் மற்றும் முன்னேறி வருவதை தனது துணிச்சலான வீரத்தால் தாமதம் ஆக்கினார்.

கடைசி ஆள்!

கடைசி ஆள்!

21 வீரர் கொண்ட 36ம் சீக்கியர் படையில் இருந்த குர்முக் சிங் கடைசி ஆளாக மரணம் அடிந்தார். பத்தாயிரம் பேர் கொண்ட பெரும் படையை வெறும் 21பேர் எதிர்கொண்டு சண்டையிட்டனர். ஒருவர் கூட உயிர் மிஞ்சவில்லை. தங்கள் வீரம் எத்தகையது என்பதற்கு ஒரு பெரும் சான்றாக இன்று வரையிலும் விளங்கி வருகிறார்கள் இந்த படை வீரர்கள்.

Image Source: LINKEDIN.COM

பெருமை!

பெருமை!

பிரான்ஸ் பள்ளிகளில் தைரியத்திற்கு எடுத்துக்காட்டாக இவர்களை பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. யுனெஸ்கோ இவர்களை குறித்த கதை பிரசுரம் செய்துள்ளது. மேலும், 21 பேர் கொண்ட சீக்கிய படையினர் 600க்கும் மேற்பட்ட பஷ்தூன் படை வீரர்களை கொன்று குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source: WIKIPEDIA

விருது!

விருது!

இவர்களது வீரத்தை சிறப்பிக்கும் வகையில் இந்திய கவுரவ ஆணையை (மெரிட் கிளாஸ் III, இது இன்றைய பரம்வீர் சக்ரா விருதுக்கு இணையானது ஆகும்) வழங்கியது. இது விக்டோரியா பதகக்திற்கு இணையானது ஆகும். இந்த போரை கிமு 480ல் மாபெரும் பெர்சிய படையை வீழ்த்திய கிரேக்க ப்படை போருடன் ஒப்பிடுகிறார்கள்.

இன்றும் சராகர்ஹி போரை நினைவு கூர்ந்து சீக்கிய இராணுவ பிரிவினர் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 12ம் தேதி சராகர்ஹி நாள் என்று அனுசரித்து வருகிறார்கள்.

Image Source: Dailyhunt

முழக்கம்!

முழக்கம்!

போரின் துவக்கத்தில் இருந்து கடைசி ஆள் மரணிக்கும் வரையிலும் போல் சோ நிஹல், சாத் ஸ்ரீ அகல் (Bole so nihal, Sat Shri Akal") என்று முழக்கமிட்டனர் சீக்கிய படை வீரர்கள். ஏறத்தாழ மூன்று மணி நேரம் தொடர்ந்து நடந்தது இந்த போர். இதன் காரணமாக, இவர்கள் அனுப்பிய செய்தியின் மூலம், படை வரும் வரை இவர்கள் தாக்குப்பிடித்தனர்.

Image Source: Dailyhunt

வீரம்!

வீரம்!

போர் துவங்குவதற்கு முன் சீக்கிய படை வீரர்களிடம் மூன்றே வழி தான் இருந்தது. தப்பித்து ஓடுதல், சரணடைதல்... சாகும் வரை அவர்களை எதிர்த்து போரிடுதல். இதில் மூன்றாவது வழியை கையில் எடுத்து தங்கள்இறுதி மூச்சு வரை போரிட்டு வீர மரணம் அடைந்தனர் இந்த போர் வீரர்கள். ஆகையால் தான் இன்று, நூறு வருடங்களுக்கு பிறகும் அவர்கள் பெயர் வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தில் நிலைப்பெற்றுள்ளது.

Image Source: historyextra

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Battle of Saragarhi, The Proud of Sikhs!

Facts to know about Battle of Saragarhi, Which is cleanly shows the Proud of Sikhs
Desktop Bottom Promotion