For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மைக்ரோசாஃப்ட் ஆரம்பிப்பதற்கு முன் பில்கேட்ஸின் வாழ்க்கை எப்படியிருந்தது?

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நிறுவியரும் உலகின் பணக்காரருமான பில் கேட்ஸ் குறித்து சில சுவாரஸ்யத் தகவல்கள்

|

இன்றைய யுகத்தினருக்கு மிகவும் பரிச்சியமான ஒன்று என்றால் கணினி. நடக்க ஆரம்பிக்காத குழந்தைகள் கூட கணினி உட்பட பல தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்த தெரிந்திருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் அடித்தளமாக இருப்பது மைக்ரோசாஃப்ட். 1975 ஆம் ஆண்டு இதே நாளில் ஆரம்பிக்கப்பட்டது தான் மைக்ரோசஃப்ட் நிறுவனம் இன்று பல பரிணாமங்களைப் பெற்று உலகின் முதன்மை நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது அதன் நிறுவனர் பில் கேட்ஸ் உலக பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் இருக்கிறார். பில் கேட்ஸ் பலருக்கும் முன்னோடி என்று கூட சொல்லலாம். அவரைப் பற்றியும் அவரது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைப் பற்றியும் சில ஸ்வாரஸ்யத் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பு :

பிறப்பு :

1955 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி வாசிங்டனில் பிறக்கிறார் பில். இவரது முழுப்பெயர் வில்லியம் ஹென்சி பில் கேட்ஸ். மகன் நன்றாக படித்து வக்கீலாக வேண்டும் என்று பெற்றோர் நினைக்கிறார்கள்.

மகனைப் புகழ்ப்பெற்ற லேக்சைட் ஸ்கூல் என்ற பள்ளியில் சேர்க்கிறார்கள் .

Image Courtesy

ஆர்வம் :

ஆர்வம் :

மகனுக்கோ கணினிகள் மீது தீரா ஆர்வம். பதிமூன்று வயதிலேயே கம்ப்யூட்டர் ப்ரோக்கிராம் எழுத ஆரம்பித்துவிட்டார். கல்வியிலும் சிறந்து விளங்கினார். கணக்கு மற்றும் அறிவியல் அவருக்கு மிகவும் பிடித்தமான பாடங்களாக இருந்தது.

Image Courtesy

நல்ல நண்பன் :

நல்ல நண்பன் :

இவரை விட இரண்டு வயது மூத்தவரான பால் ஆலெனின் நட்பு கிடைக்கிறது. ஓய்வு நேரங்களில் இருவரும் கம்ப்யூட்டர் ப்ரோக்கிராம் குறித்தே சிந்திக்கிறார்கள்,விவாதிக்கிறார்கள்.

பள்ளியில் அப்போது டெலிடைப் கணினி தான் இருந்திருக்கிறது. அதனை பயன்படுத்த வேண்டுமென்றால் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

Image Courtesy

வெளியேற்றம் :

வெளியேற்றம் :

முதலில் கட்டணம் செலுத்தி பயன்படுத்திய பில், தன்னிடம் மேற்கொண்டு செலுத்த பணம் இல்லை என்ற சூழல் வரும் போது அந்த கணினியையே ஹேக் செய்து கட்டணமில்லாமல் பயன்படுத்த ஏதுவாக ப்ரோகிராம் எழுதி செட்டிங்க்ஸை மாற்றிக் கொள்கிறார்.

இதனைக் கண்டுபிடித்த பள்ளி நிர்வாகம் பில் கேட்ஸை பள்ளியிலிருந்து வெளியேற்றுகிறது.

Image Courtesy

மீண்டும் பள்ளி :

மீண்டும் பள்ளி :

பில் கேட்ஸ் இந்த வயதிலேயே கணினியில் புகுந்து விளையாடுகிறான் என்றால் அவனிடம் தனியாக வேறு எதோ திறமை ஒளிந்திருக்கிறது என்பதை உணர்ந்த ஆசிரியர்கள் மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

இப்போது அவர்களே பள்ளிக்குத் தேவையான வகையில் கணினியில் ப்ரோக்கிராம் செய்து கொடுக்கச் சொல்லி கேட்கிறார்கள்.

Image Courtesy

ஹார்ட்வேர்ட் :

ஹார்ட்வேர்ட் :

ஆர்வம் கொண்ட கணினித் துறையா அல்லது வீட்டில் சொல்லுகிற வக்கீல் படிப்பையா படிக்க என்று எந்த முடிவும் இல்லாமல் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் சேருகிறார்.

அங்கே பாப்புலர் எலக்ட்ரானிக்ஸ் என்ற பத்திரிக்கையில் புதிதாக அறிமுகம் செய்யவிருக்கும் Altair 8800 mini-computer குறித்த விளம்பரத்தை பார்க்கிறார். உடன் அவர்களை தொடர்பு கொண்டு தான் கம்ப்யூட்டர் ப்ரோக்கிராம் எல்லாம் எழுதுவேன் என்றும் நீங்கள் வாங்கிக் கொள்வதாக இருந்தால் உங்களுக்கும் எழுதித்தருவேன் என்றும் சொல்கிறார்.

Image Courtesy

ஆரம்பமே..... :

ஆரம்பமே..... :

புதிய மாடல் கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப்பட்ட காலம், அதனை பயன்படுத்துபவர்களே மிகவும் குறைவாக இருந்தார்கள் ஆனால் ஏகப்பட்ட கிராக்கி எதிர்காலத்தில் ஏற்படும் என்பதை அந்த நிறுவனம் முன்னரே அறிந்து களத்தில் இறங்கியிருந்தது.

இந்த சூழலில் ஒருவன் தானாக முன் வந்து கம்யூட்டர் ப்ரோக்கிராம் எழுதித்தருகிறேன் என்று சொன்னால் சும்மா விடுவார்களா? நாங்கள் அதனை வாங்கிக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.

Image Courtesy

தீவிர முயற்சி :

தீவிர முயற்சி :

நண்பன் பால் ஆலெனிடம் இந்த விஷயத்தை சொல்கிறார். இருவரும் இணைந்து தீவிரமாக வேலையை ஆரம்பிக்கிறார்கள். பல்கலைக்கழகத்தில் தான் கணினி இருந்தது என்பதால் இரவு பகலாக பல்கலைக்கழகத்திலேயே உட்கார்ந்து கோடிங் எழுதினார் பில்.

Image Courtesy

கல்லூரி :

கல்லூரி :

ஒரு வழியாக எழுதி முடித்தவர் நியூ மெக்ஸிகோவில் இருக்கிற அந்த கணினி அலுவலகத்திற்கு சென்று தான் உருவாக்கிய BASIC என்ற கணினி மொழியை அறிமுகப்படுத்துகிறார்கள்

அவர்கள் மூன்றாயிரம் டாலருக்கு இதனைப் பெற்றுக் கொள்கிறார்கள். அதோடு ஆலெனை மட்டும் பணிக்குச் சேர்த்துக் கொள்கிறார்கள்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்ததால் பணிக்கு சேர்த்துக் கொள்வதில் சிரமம் உண்டாகிறது. தனக்கு இதில் தான் ஆர்வம் என்று சொன்ன பில் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு இந்த நிறுவனத்தில் சேர்ந்து கொள்கிறார்.

Image Courtesy

23 வயதில் :

23 வயதில் :

ஆலென் மற்றும் பில் மிட்ஸ் நிறுவனத்தில் உரிமையாளர்கள் ஆகிறார்கள். சாப்ஃட்வேர் எழுதித்தருகிற நிறுவனமென்பதால் மிட்ஸ் மற்றும் சாப்ஃப்ட்வேர் இரண்டையும் இணைத்து மைக்ரோசாஃப்ட் என்று பெயரை மாற்றுகிறார்கள்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளராக பில் தன்னை நிறுவிக் கொள்கிறார். இதிலிருந்து பல நிறுவனங்களுக்கு சாப்ட்வேர் எழுதிக் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். அப்போது பில்லுக்கு வயது 23. 1979 ஆம் ஆண்டிலிருந்து 2.5 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார்கள்.

Image Courtesy

காபிரைட் இல்லாமல் :

காபிரைட் இல்லாமல் :

ஐந்து வருடங்கள் கழித்து ஐபிஎம் நிறுவனம் பில் கேட்ஸிடம் வருகிறார்கள். தங்களுக்கு ஒரு ஆப்ரேட்டிங் சிஸ்டம் உருவாக்கித் தர வேண்டும் என்று கேட்கிறார்கள்.

அப்போது எழுதித்தர முடியாத சூழல் என்பதால் இன்னொருவரிடமிருந்து டிஓஎஸ் என்கிற ஒஎஸ் வாங்கித் தருகிறார். அது காபிரைட் வாங்கப்பட்டது என்பதால் அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் நிறுவனத்திற்கு ஏற்படுகிறது.

Image Courtesy

சாப்ட்வேர் :

சாப்ட்வேர் :

இதையறிந்த பில் இனி தன் கவனத்தை சாஃப்ட்வேர் பக்கம் திருப்ப வேண்டும் என்று முடிவெடுக்கிறார். கணினியை உங்கள் வசதிக்கேற்ப பயன்படுத்தலாம், ஆனால் வசதிக்காக பல சாஃப்ட்வேர்களை இணைக்க வேண்டும்.அதற்கு தனித்தனியாக கட்டணம் செலுத்துங்கள் என்று பிஸ்னஸ் மூளை வேலை செய்ய ஆரம்பிக்கிறது.

ஸ்டீவ் ஜாப்ஸ் :

ஸ்டீவ் ஜாப்ஸ் :

பில் உருவாக்கிற சாப்ட்வேர்கள் சாதரணமக்கள் பயன்படுத்தும் வகையில் அவர்களை ஈர்க்கும் வகையில் இல்லை..விஷுவலாக அதில் பல மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கூறுகிறார் ஸ்டீவ் ஜாப்ஸ். முக்கியமாக அன்றடம் பயன்படுத்தும் வகையில் பயனாளர்களுக்கு எளிமையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்

இதைத் தொடர்ந்து பில் தீவிரமாக உழைக்க ஆரம்பிக்கிறார்.

நானே ஆரம்பிக்கிறேன் :

நானே ஆரம்பிக்கிறேன் :

இந்த ஐடியாவை சற்றே மெருகேற்றுகிறார் பில். தனியாக ஒவ்வொரு சாப்ஃட்வேரும் பயனாளர்களுக்கு எளிதாக இருக்கும் வகையில் வடிவமைப்பதை விட பொதுவான ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்தால் என்ன என்று தோன்றுகிறது.

கணினியில் அந்த ஓஎஸ் பயன்படுத்தித் தான் எல்லா பிற சாஃப்வேர்களை எளிதாக பயன்படுத்த முடியும். எளிமையாகவும் அதே சமயம் பயன்படுத்துகிறவர்களை ஈர்க்கும் வகையிலும் இருக்க வேண்டும்.

விண்டோஸ் :

விண்டோஸ் :

இப்படி உருவானது தான் விண்டோஸ்.அதற்கும் காபிரைட் வாங்கினார், இன்று கணினியைப் பயன்படுத்துகிற ஒவ்வொருவருமே விண்டோஸ் என்ற ஓ எஸ் தான் பயன்படுத்துகிறார்கள்.அதிலேயே பல வெர்சன்களைக் கடந்து வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருக்கிறது.

இதன் மூலமாக பில் கேட்ஸுக்கு அதிக வருமானம் வர ஆரம்பித்தது. அவருடைய 39 வது வயதில் உலகின் முதல் பணக்காரராக உருவெடுத்தார் பில்.

தொண்டு :

தொண்டு :

சம்பாதித்த அனைத்தையும் தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற பேராசைக் கொண்டவரல்ல பில். 1994 ஆம் ஆண்டு மெலிண்டாவை திருமணம் செய்து கொள்கிறார். அதன் பிறகு பில் மற்றும் மெலிண்டா பெயரில் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து பல உதவிகளை செய்கிறார்கள்.

தனது சொத்தில் பாதியை தொண்டு நிறுவனத்திற்கே எழுதி வைத்திருக்கிறார் பில். அவர்களது சேவையை பாராட்டும் வகையில் 2009 ஆம் ஆண்டு இந்தியாவின் உயர்ந்த விருதான பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Amazing Life Story of Bill Gates

Amazing Life Story of Bill Gates
Story first published: Wednesday, April 4, 2018, 9:55 [IST]
Desktop Bottom Promotion