For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த விஷயங்களை பிறரிடம் கூறுவது உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியை அழிக்கும் என்கிறார் சுக்ராசாரியார்

சக்தி மற்றும் புத்திகூர்மையில் தேவர்களின் குருவான வசிஷ்டருக்கு எந்த விதத்திலும் இவர் குறைந்தவர் அல்ல. தன் தவபலத்தை கொண்டு இவர் மனிதர்களின் வாழ்வு மேம்பட சுக்ர நீதி என்னும் நூலை எழுதியதாக புராணங்கள்

|

சுக்கிராச்சாரியார் அசுரர்களின் குரு ஆவார். அசுரர்கள் பலமுறை தேவர்களை வெற்றிக்கொள்ள காரணம் அவர்களின் குலகுருவான சுக்கிராச்சாரியார்தான். அழிப்பது மட்டுமின்றி இவரால் ஆக்கவும் முடியும், செல்வத்தை வழங்கும் நவகிரகங்களில் ஒன்றான சுக்கிரனில் அமர்ந்து அனைவரின் வாழ்க்கையிலும் வளத்தை கூட்டுவது சுக்கிராச்சாரியார்தான். இவர் அறிவிலும், ஞானத்திலும் மட்டும் சிறந்தவர் அல்ல தந்திரத்திலும் மிகவும் சிறந்தவர்.

 according to the shukra niti never reveal these things to anyone

சக்தி மற்றும் புத்திகூர்மையில் தேவர்களின் குருவான வசிஷ்டருக்கு எந்த விதத்திலும் இவர் குறைந்தவர் அல்ல. தன் தவபலத்தை கொண்டு இவர் மனிதர்களின் வாழ்வு மேம்பட சுக்ர நீதி என்னும் நூலை எழுதியதாக புராணங்கள் கூறுகிறது. அதில் உள்ள கருத்துக்கள் புராணகாலம் மட்டுமின்றி தற்போதுள்ள மனிதவாழ்க்கையை மேம்படுத்தவும் பயன்படக்கூடியது. இந்த நூலில் குறிப்பிட்டுள்ளபடி ஒருவரின் வாழ்க்கை சிறக்க அவர் சில விஷயங்களை ஒருபோதும் மற்றவர்களிடம் கூறக்கூடாது. அவ்வாறு இந்த செயல்களை கூறும்பட்சத்தில் அவர்களுக்கு கெடுதல் மட்டுமே மிஞ்சும். எந்தெந்த செய்திகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மற்றவர்கள் தரும் மரியாதை

மற்றவர்கள் தரும் மரியாதை

உங்களை அனைவரும் நேசிப்பதும், மரியாதையுடன் நடத்துவதும் உங்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றுதான். ஆனால் அந்த மகிழ்ச்சியை மற்றவர்கள் முன்னிலையில் நீங்கள் காட்டிக்கொள்ளக்கூடாது. அவ்வாறு காட்டிக்கொள்ளும் பட்சத்தில் அவர்களின் பார்வையில் உங்கள் மீதுள்ள மரியாதையை நீங்கள் இழக்க நேரிடும்.

அவமானம்

அவமானம்

மரியாதையை போலவே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஏதாவது ஒரு தருணத்தில் அவமானத்தை சந்திக்க நேரிடலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த அவமானங்களை உங்களுக்குள்ளே வைத்துக்கொள்ள வேண்டும். அதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வது உங்களது அவமானத்தை மேலும் அதிகரிக்கும்.

இரகசிய மந்திரங்கள்

இரகசிய மந்திரங்கள்

நீங்கள் தினமும் கடவுளை ஏதாவது ஒரு சிறப்பு மந்திரத்தை கூறி வழிபட்டால் அந்த மந்திரத்தை இரகசியமாக வைத்துக்கொள்வது நல்லது. அதனை உங்களுக்குள்ளயே வைத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு அந்த மந்திரங்களை கூறும்போது உங்கள் வேண்டுதல்கள் பலிக்காமல் போக வாய்ப்புள்ளது.

பணம்

பணம்

இதனை செய்வதற்கு தனி மூளை என்று எதுவும் தேவையில்லை. உங்களிடம் எவ்வளவு பணம் உள்ளது என்பதை எப்பொழுதும் உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். அதனை அனைவருக்கும் சொல்லும்போது உங்களுக்கு இருவிதத்தில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒன்று பணம் திருடுபோகும் அல்லது பலரின் பொறாமையை பெற நேரிடும். இந்த இரண்டுமே உங்களுக்கு நல்லதல்ல.

MOST READ:இந்த நடிகர், நடிகைகளின் இயற்பெயர் என்னன்னு உங்களுக்கு தெரியுமா?

வயது

வயது

ஒருவரின் வயதிற்கும் அவர்களின் ஆளுமை மற்றும் ஆற்றலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனவே மற்றவர்கள் அதனை கேட்கும்வரை எக்காரணம் கொண்டும் உங்கள் வயதை வெளியே கூறாதீர்கள். அப்படி ஒருவேளை கேட்டாலும் முடிந்தவரை பதில்கூறாமல் இருக்க முயற்சியுங்கள்.

கிரக நிலை மற்றும் தோஷங்கள்

கிரக நிலை மற்றும் தோஷங்கள்

நீங்கள் வாழ்க்கையில் மோசமான காலகட்டத்தில் இருக்கும்போது உங்களின் கிரக நிலைகள் சரியில்லாமல் இருந்தாலோ அல்லது ஏதாவது தோஷங்கள் இருந்தாலோ அதனை பற்றி மற்றவர்களுக்கு கூறவேண்டுமென்ற அவசியம் இல்லை. ஏனெனில் அது எந்த வகையிலும் உங்கள் பிரச்சினைக்கு தீர்வை தரப்போவதில்லை.

உங்கள் மருத்துவர்

உங்கள் மருத்துவர்

நீங்கள் எந்த மருத்துவரிடம் தொடர்ச்சியாக சிகிச்சை எடுக்கிறீர்கள் என்பதையும், அவரை பற்றிய தகவல்களையும் இரகசியமாகவே வைத்திருங்கள். ஏனெனில் உங்களின் ஆரோக்கியம் பற்றிய அனைத்து தகல்வல்களும் உங்கள் மருத்துவர் மூலம் உங்களுக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கு தெரிய வந்தால் உங்கள் நிலை மோசமாக வாய்ப்புள்ளது.

காதல் வாழ்க்கை

காதல் வாழ்க்கை

உங்கள் காதல் வாழ்க்கை உங்களின் தனிப்பட்ட விவகாரம். எனவே உங்கள் காதல் வாழ்க்கை பற்றியும், உங்கள் துணையுடனான உங்கள் நெருக்கம் பற்றியும் எப்பொழுதும் யாரிடமும் சொல்லாதீர்கள்.

MOST READ: இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்க்காமலே எல்லா வெற்றியும் கிடைக்குமாமே? உண்மைதானா?

நன்கொடை

நன்கொடை

தானம் கொடுப்பது என்பது மிகவும் உன்னதமான காரியம், ஆனால் அதை மற்றவர்கள் முன் சொல்வது சிறந்த காரியமாக இருக்காது. நீங்கள் தானம் செய்தால் அதனை உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் அதனால் கிடைக்கும் புண்ணியம் எதுவும் உங்களுக்கு கிடைக்காது. சுக்ரநீதி கூறும் மற்ற கருத்துக்கள் என்னவென்று பார்க்கலாம்.

விதி

விதி

நீங்கள் எவ்வளவுதான் மனதளவில் நல்லவராக இருந்தாலும் உங்கள் விதி உங்களுக்கு சாதகமாக இல்லையெனில் உங்களால் வெற்றிபெற இயலாது. எனவே விதியுடன் போரிட நினைக்காதீர்கள்.

கர்மா

கர்மா

நீங்கள் செய்யும் கர்மாக்கள் நல்லதாக இருப்பின் அது உங்கள் விதியை மாற்றும் சக்திகொண்டது. எனவே எப்பொழுதும் நல்ல செயல்களை மட்டும் செய்வதில் உறுதியாய் இருங்கள்.

மூளை

மூளை

சிலசமயம் நமது இதயமானது நமது மூளையை மீறி செயல்படும். உங்கள் வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எப்பொழுதும் உங்கள் மூளையே எடுக்கவேண்டும் என்பதில் உறுதியாய் இருங்கள். ஏனெனில் சிலசமயம் உங்கள் இதயம் தவறான முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது.

MOST READ: அழியா புகழும், செல்வமும் பெற நமது வேதங்களில் கூறியுள்ள இந்த எளிய செயல்களை செய்யுங்கள்

மரணத்தை விட மோசமானது

மரணத்தை விட மோசமானது

ஒரு பெண்ணின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வாழும் ஒருவன், அவனது கர்மா மிகவும் மோசமானதாக இருப்பான். அறிவாளிகளின் பார்வையில் அவர்கள் உயிரோடு இருக்கும்போதே இறந்த மனிதனை விட கேவலமானவர்களாக மதிக்கப்படுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

according to the shukra niti never reveal these things to anyone

Sukra Charya's teachings, popularly known as Sukra Niti are relevant even today. Here are a few things he had said one should never reveal about himself.
Desktop Bottom Promotion