Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உலகின் முன்னணி வீரர்கள் ஏ.பி. டி வில்லியர்ஸ் பற்றி பாராட்டி கூறிய நெகிழ்ச்சியான வார்த்தைகள்!
உலகின் முன்னணி வீரர்கள் ஏ.பி. டி வில்லியர்ஸ் பற்றி பாராட்டி கூறிய நெகிழ்ச்சியான வார்த்தைகள்!
சச்சின், தோனி, விராட் கோலியை வெறுக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால், ஏ.பி. டி வில்லியர்ஸை வெறுக்கும் கிரிக்கெட் ரசிகனை எங்கும் காண இயலாது.
சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், ஏலியன், மனுஷனே இல்லை, மிஸ்டர் 360 என்று பல வகையில் புகழப்படும் ஏ.பி. டி வில்லியர்ஸ் யாரும் எதிர்பாராதவிதமாக கடந்த ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இது பல கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சோகத்தில் மூழ்கடித்தது. நிஜமாகவே ஏ.பி. டி வில்லியர்ஸ் போல சில ஷாட்டுகளை ஆடுவதற்கு இன்னொரு கிரிக்கெட் வீரர் பிறந்து தான் வர வேண்டும்.
இவரை உலகின் பல முன்னை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். அவற்றில் சுவாரஸ்யமான சில பாராட்டுக்கள்....

ஸ்டெயின்!
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மற்றும் ஏ.பி. டி வில்லியர்ஸின் நெருங்கிய நண்பருமான ஸ்டெயின்,
"நான் இரண்டே போட்டிகளில் தான் அச்சம் கொண்டிருந்தேன். அவை, ஐபிஎல் தொடரில் ஏ.பி. டி வில்லியர்ஸ்'க்கு எதிராக விளையாடியவை." என்று கூறி புகழாரம் சூட்டியுள்ளார். எல்லா பேட்ஸ்மேனும் இவரை கண்டு அஞ்சினால், இவர் ஏ.பி. டி வில்லியர்ஸை கண்டு அஞ்சினேன் என்று கூறியுள்ளார்.

ராகுல் திராவிட்!
இந்திய கிரிக்கெட் அணியின் சுவராக கருதப்படும் திராவிட். இன்று, நாளைய இந்திய அணியை வலுவாக கட்டமைத்துக் கொண்டு வருகிறார். இவர் ஏ.பி. டி வில்லியர்ஸை
"ஏ.பி. டி வில்லியர்ஸ் ஆட்டத்தின் ரூல்ஸ்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்..." என்று கூறி பாராட்டியுள்ளார்.

ஹர்ஷா போக்லே!
கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன், பவுலர், கீப்பர், அம்பயர், ஃபீல்டர் என்று எத்தனை பேரை வேண்டுமானாலும் கூறலாம். ஆனால், சிறந்த வர்ணனையாளர் யார் என்று கேட்டால் ஹர்ஷாவின் பெயர் மட்டுமே நினைவுக்கு வரும். அப்படியான சிறந்த கிரிக்கெட் வர்ணனையாளர் மற்றும் விமர்சகரான ஹர்ஷா...
"லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்... உங்கள் சீட் பெல்ட் மாட்டிக் கொள்ளுங்கள்... நாம் வேகமான பயணத்திற்கு தயாராக வேண்டிய நேரம் வந்துவிட்டது... (ஏ.பி. டி வில்லியர்ஸ் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது...)" என்று கூறி ஏ.பி. டி வில்லியர்ஸை புகழ்ந்திருக்கிறார்.

ஜிம்மி நீஷம்!
ஜேம்ஸ் டக்லஸ் நீஷம் என்கிற ஜிம்மி நீஷம் நியூசிலாந்து அணியின் விளையாட்டு வீரர்.
"யாரேனும் ஏ.பி. டி வில்லியர்ஸ் மற்றும் சூப்பர்மேனை ஒன்றாக ஒரே அறையில் பார்த்ததுண்டா... அதற்கு வாய்ப்பே இல்லை... (ஏ.பி. டி வில்லியர்ஸ் மற்றும் சூப்பர்மேன் இருவரும் ஒரே நபர் தான் என்ற பொருளில்...)" என்று கூறி வில்லியர்ஸை புகழ்ந்து பாராட்டியுள்ளார் ஜிம்மி நீஷம்.

க்றிஸ் கெயில்!
ஏ.பி. டி வில்லியர்ஸ்'க்கு கொஞ்சமும் சளைத்தவர் இல்லை க்றிஸ் கெயில். ஆயினும்,
"எனது இளமை பருவத்தை ஏ.பி. டி வில்லியர்ஸ் நினைவுப் படுத்துகிறார்..." என்று கூறி ஏ.பி. டி வில்லியர்ஸின் திறனை பாராட்டி கூறியுள்ளார் கெயில்.

பாப் வில்லிஸ்!
முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் விளையாட்டு வீரரான பாப் வில்லிஸ்,
"நான் கடந்த முப்பது ஆண்டுகளாக... விவியன் ரிச்சர்ட்ஸ் தான் எல்லா காலங்களிலும் வைத்து சிறந்த வீரர் என்று கூறி வந்தேன். ஆனால், இந்த நபர் (ஏ.பி. டி வில்லியர்ஸ்) அசாதாரணமாக காட்சி அளிக்கிறார்..." என்று கூறி ஏ.பி. டி வில்லியர்ஸை புகழ்ந்து பேசியிருக்கிறார்.

மேக்ஸ்வெல்!
தற்போதைய உலகின் சிறந்த ஆக்ரோஷமான விளையாட்டு வீரர்களில் மேக்ஸ்வெல்லும் ஒருவர். அத்தகைய இவர்..,
"நான் எப்போதுமே நுணுக்கமாக கவனிக்கும், பார்க்கும் நபர் ஏ.பி. டி வில்லியர்ஸ். இவர் ஒரு கிளாசான வீரர். இவரது பாணியை எனது கிரிக்கெட் அடித்தளமாக அமைக்க எண்ணுகிறேன்." என்று புகழ்ந்து ஏ.பி. டி வில்லியர்ஸை பாராட்டியுள்ளார்.

ஆகாஷ் சோப்ரா!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா,
ஏ.பி. டி வில்லியர்ஸ்'க்கு மரபணு பரிசோதனை செய்ய வேண்டும். கிரிக்கெட் மனிதர்களுக்கான விளையாட்டு மட்டும் தான். (ஏ.பி. டி வில்லியர்ஸ்'ஐ பலர் பாராட்டும் வகையில் ஏலியன் என்று கூறுவது உண்டு) என்று கூறி வில்லியர்ஸை பாராட்டியுள்ளார்.

விராத் கோலி!
பெரும்பாலான வீரர்கள் கடந்த ஒருசில வருடங்களாக ஒப்பீடு செய்து வந்தது ஏ.பி. டி வில்லியர்ஸ் மற்றும் விராத் கோலியை தான். ஆனால், விராத் கோலியே முழு மனதுடன்....
"தற்போதைய கிரிக்கெட் உலகில் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஏ.பி. டி வில்லியர்ஸ். அதை அடுத்தடுத்து அவர் நிரூபணம் செய்துக் கொண்டே இருக்கிறார்." என்று கூறி ஏ.பி. டி வில்லியர்ஸ்'க்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

ஆடம் கில்க்ரிஸ்ட்!
உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர் ஆடம் கில்க்ரிஸ்ட். ஏ.பி. டி வில்லியர்ஸ் போலவே பல நாடுகளை சேர்ந்த ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டவர் இவர்.
"இந்த உலகின் அதிக மதிப்பிற்குரிய வீரர் ஏ.பி. டி வில்லியர்ஸ்.", என்று கூறி ஏ.பி. டி வில்லியர்ஸின் ஆட்டத் திறனை பாராட்டி பேசியிருக்கிறார்.

வி.வி.எஸ். லட்சுமணன்!
இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் மேட்ச் வீரர்களில் ஒருவரான லட்சுமணன் ...
"மாடர்ன் யுக கிரிக்கெட்டில் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரராக ஏ.பி. டி வில்லியர்ஸ் இருக்கிறார்.", என்று ஏ.பி. டி வில்லியர்ஸை வாழ்த்தியுள்ளார்.

இர்பான் பதான்!
இந்தியாவின் ஆல்-ரவுண்டர் கிரிக்கெட்டர் மற்றும் சிறந்த ஸ்விங் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான் , ஏ.பி. டி வில்லியர்ஸை
"நான் ஒரு பந்து வீச்சாளராக ஏ.பி. டி வில்லியர்ஸ்'க்கு எதிராக புகார் அளிக்கலாம் என்று இருக்கிறேன். அனைவரும் என் பக்கம் நிற்க வேண்டும். #லெஜண்ட்.," என்று வாழ்த்தியுள்ளார்.

மைக்கல் வாகன்!
முன்னாள் இங்கிலாது கிரிக்கெட் வீரரும், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டனுமான மைக்கல் வாகன்...
"ஏ.பி. டி வில்லியர்ஸ் கிரிக்கெட் ஜீனியஸ் என்பதற்கான விரிவாக்கம் / தெளிவுரை.".,என்று ஏ.பி. டி வில்லியர்ஸை வாழ்த்தியுள்ளார்

சச்சின்!
அனைவரும் கடவுளை புகழ்வார்கள்... ஆனால், கடவுளே அனைத்து வகையிலும் வெற்றி அமைய வேண்டும் என்று வாழ்த்திய வீரர் ஏ.பி. டி வில்லியர்ஸ்.
"விளையாட்டு மைதானம் போலவே, பிற செயல்களிலும் ஏ.பி. டி வில்லியர்ஸ் 360 டிகிரியிலும் வெற்றி அமைய வேண்டும்.," என்று வாழ்த்தியுள்ளார்.

முகமது கைப்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விளையாட்டு வீரர் மற்றும் தற்போது இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்து வரும் முகமது கைப்....
"ஏ.பி. டி வில்லியர்ஸ், கிரிக்கெட்டின் பெடரர். பெருவாரியாக அனைவராலும் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர்."., என்று கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications