Latest Updates
-
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
Ganesh Chaturthi 2026: விநாயகரின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெற்ற 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி நாளில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
கூரைக்கடை கார சட்னி - இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
செப்டம்பர் 14, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க நிறைய சோதனைகளை சந்திக்கப் போறாங்களாம் -
கடக ராசியில் உருவாகும் குரு-மங்கள யோகத்தால் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
நீங்க பிறந்த நேரத்த சொலுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்...
நீங்கள் பிறந்த நேரத்தை வைத்து உங்களது குணாதிசயங்கள் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டுமா? இதப்படிங்க!
ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து தான் ஜாதக கட்டங்கள், இராசி, நட்சத்திரம் குறிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒருவரது இல்வாழ்க்கை, சமூக வாழ்க்கை, வேலை, குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என அறியப்படுகிறது.

அந்த வகையில், குறிப்பிட்ட நேரத்தில் பிறப்பவர்களது குணாதிசயங்கள் மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும் என இங்கு காணலாம்...

அதிகாலை 6 முதல் 8
இந்நேரத்தில் பிறந்தவர்கள் அமைதியான மனோபாவம் கொண்டிருப்பார்கள். சிலர் நேரத்தை வீணடிக்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள், இது இவர்களுடைய எதிர்காலத்தை பாதிக்கும்.

காலை 8 முதல் 10
இந்நேரத்தில் பிறப்பவர்கள் நல்ல நட்பும், சுற்றமும் கொண்டிருப்பார்கள். பொருளாதாரம் சீரான நிலையில் இருக்கும். இவர்களது வாழ்வில் பணம் முக்கிய பங்கு வகிக்கும். மேலும், இவர்கள் சற்று விரக்தியுடன் காணப்படலாம்.

நண்பகல் 10 முதல் 12
இந்நேரத்தில் பிறந்தவர்கள் பின்தொடரும் காரியங்கள் எல்லாம் வெற்றியே தரும். இவர்களது வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். பெருமை கொள்ளும் வகையில் வாழ்வார்கள்.

மதியம் 12 முதல் 2
இந்நேரத்தில் பிறப்பவர்கள் அதிக பயணம் சார்ந்த எதிர்காலம் கொண்டிருப்பார்கள். இவர்களது வேலை அல்லது பர்சனல் விஷயங்கள் பயணம் சார்ந்து அமையலாம். புத்திகூர்மை கொண்டுள்ளவர்களாக திகழ்வார்கள். நல்ல குணத்திற்கு பெயர்பெற்று திகழ்வார்கள்.

மதியம் 2 முதல் 4
பணம் சார்ந்து துறையில் சிறந்து விளங்குவார்கள். எதையும் லீகலாக செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டிருப்பார்கள்.

மாலை 4 முதல் 6
இந்நேரத்தில் பிறந்தவர்கள் பொறுப்பு, கடமை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கை வலிமையாக இருக்கும். மக்களுடன் அதிகம் தொடர்பு கொள்ளும் வகையிலான வேலை செய்வார்கள்.

மாலை 6 முதல் 8
இந்நேரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கை தங்களுக்கு நெருக்கமான அல்லது நண்பர்களை சார்ந்து வாழும் விதமாக அமைந்து காணப்படுவார்கள்.குடும்பம் என்பது இவர்களுக்கு இரண்டாம்பட்சம்தான். சமூக வாழ்க்கையில் அதிகம் இணைந்திருப்பார்கள்.

இரவு 8 முதல் 10
இந்நேரத்தில் பிறந்தவர்கள் மத்தியில் கற்பனை திறன் அதிகம் காணப்படும். திறமைகள் அதிகம் கொண்டிருப்பார்கள். தங்களுக்கு பிடித்த வேலைகளை மட்டுமே செய்வார்கள், அதிலும் சிறந்து காணப்படுவார்கள்.

இரவு 10 முதல் 12
இந்நேரத்தில் பிறந்தவர்கள் வெற்றி, தோல்வியை சமமாக காணும் பண்பு கொண்டிருப்பார்கள். ஏற்றத்தாழ்வுகளை எளிதாக கடந்து வந்துவிடுவார்கள்.

நள்ளிரவு 12 முதல் 2
இந்நேரத்தில் பிறந்தவர்கள் அதிக புத்திசாலியாக இருப்பார்கள். சாகசங்களை விரும்புவார்கள். பயணிக்க விரும்புவார்கள். ஊடகம் சார்ந்த வேலையில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

நள்ளிரவு 2 முதல் 4
இந்நேரத்தில் பிறந்தவர்களுக்கு உணவு சார்ந்த விருப்பம் அதிகம் இருக்கும். குடும்பம் மற்றும் பொருளாதார நிலை மேலோங்கி காணப்படும்.



Click it and Unblock the Notifications
