உடலுறவுக்கு பின் ஆண்கள் செய்யும் சில விசித்திரமான செயல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உடலுறவு ஒரு ரொமான்டிக்கான ஒர் செயலாக இருக்கலாம். ஆனால் சில சமயங்களில் இச்செயலாலும் துணையின் மனநிலை சற்று பாதிக்கப்படும். குறிப்பாக உச்சக்கட்ட இன்பத்தை அடைந்த பின் செய்யும் சில செயல்கள் வெறுப்பையும், மன வருத்தத்தையும் உண்டாக்கும்.

பொதுவாக இம்மாதிரியான வருத்தத்தை ஆண்கள் ஏற்படுத்துவார்கள். இக்கட்டுரையில் உடலுறவுக்கு பின் பெண்கள் வெறுக்கும் படி ஆண்கள் செய்யும் சில விசித்திரமான செயல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்த செயல்களுள் ஏதேனும் ஒன்றையாவது ஒவ்வொரு ஆணும் செய்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன வருத்தம் கொள்வது

மன வருத்தம் கொள்வது

ஆண்கள் உடலுறவு கொண்ட பின், காரணம் ஏதுமின்றி மன வருத்தம் அடைவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதிலும் பெரும்பாலான ஆண்கள் இம்மாதிரி வருத்தம் கொள்வதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தூங்கிவிடுவது

தூங்கிவிடுவது

அனைத்து ஆண்களும் செய்யும் ஓர் பொதுவான செயல் தான், உடலுறவு கொண்ட உடனேயே தூங்கிவிடுவது. உடலில் இருந்து விந்து வெளியேறி விடுவதால், ஆண்கள் ஒருவித ரிலாக்ஸை அடைந்து, உடனே தூங்கிவிடுகின்றனர். எனவே உங்கள் துணை உடலுறவுக்கு பின் தூங்கிவிட்டால், அன்பு இல்லையோ என்று எண்ணி கவலை கொள்வதை தவிர்த்திடுங்கள்.

சிறுநீர் கழிப்பதில் கஷ்டம்

சிறுநீர் கழிப்பதில் கஷ்டம்

பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு பின் சிறுநீர் கழிக்க முடியாமல் கஷ்டப்படுவதாக கூறுகின்றனர். ஆண்குறியில் இரத்த ஓட்டம் காரணமாக ரத்த நாளங்கள் சுருங்குவதால், ஆண்கள் இப்பிரச்சனையை சந்திக்கின்றனர். அதுவும் விறைப்புத்தன்மையை முழுமையாக இழக்காத போது, இந்த பிரச்சனையை ஆண்கள் சந்திப்பார்கள்.

அதிக பசி

அதிக பசி

நிறைய ஆண்கள் உடலுறவில் ஈடுபட்ட பின் கடுமையான பசியை உணர்வார்கள். இதற்கு உடலுறவில் உச்சக்கட்ட இன்பத்தை அடைந்த பின், விந்து வெளியேற்றத்தால், உடலில் உள்ள ஸ்டாமினா வெளியேறிவிடுவதால் தான் ஆண்களுக்கு பசி ஏற்படுகிறது.

உடனே மீண்டும் முடியாது

உடனே மீண்டும் முடியாது

ஆண்களால் ஒருமுறை உறவில் ஈடுபட்ட உடனேயே மீண்டும் உறவில் ஈடுபட முடியாது. மீண்டும் ஆண்கள் உடலுறவில் ஈடுபட குறைந்தது 30 நிமிடம் முதல் 1 மணிநேரம் வரை ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weirdest Things Men Do After Making Love

Did you know that all men do most of these things after they make love? Check out the weirdest things men do after making love.
Subscribe Newsletter