விராத் கோஹ்லி-அனுஷ்கா சர்மா திருமண ஹைலைட்ஸ்!!! Exclusive படங்கள்...

Subscribe to Boldsky
விராத் கோஹ்லி-அனுஷ்கா சர்மா திருமண ஹைலைட்ஸ்!!!..வீடியோ

ஒரு வழியாக சத்தமில்லாமல் நாம் எல்லாருமே எதிர்ப்பார்த்த விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மா திருமணம் இத்தாலியில் நடந்து முடிந்திருக்கிறது.நேற்று இரவிலிருந்து சமூக வலைதளங்கள் எங்கும் இத்திருமணம் தொடர்பான பேச்சுக்கள் தான் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் பத்திரிக்கை பேட்டி ஒன்றில் பங்கேற்றிருந்த அனுஷ்காவிடம் உங்களது திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்று கேள்விக்கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறுகையில் என்னுடைய திருமணம் டெஸ்டினேஷன் வெட்டிங்காக இருக்க வேண்டும். அந்த இடம் இயற்கை சூழல் மிகுந்த இடமாக அமைந்திருக்க வேண்டும் அதுவும் திராட்சை தோட்டத்திற்கு நடுவே எங்களது திருமணம் அரங்கேற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். இதோ.... இன்றைக்கு அவருடைய காதலர் விராட் அதனை நிறைவேற்றியிருக்கிறார்.

நேற்று நடந்த திருமணத்தைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

சில வாரங்களுக்கு முன்னர் அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோஹ்லி குடும்பத்தினர் விமானம் மூலமாக இத்தாலி பறந்தனர். குடும்பத்தினருடன் செல்வது, கலந்து கொள்ளவிருக்கும் போட்டிகள், ஒப்பந்தம் இட்டிருக்கும் படங்களில் இருந்து விலகிக் கொண்டு அவசர அவசரமாக கிளம்பிச் செல்வது திருமணத்திற்கு தான் என்று அரசல் புரசலாக பேசப்பட்டது.

#2

#2

சரி, இத்தாலியில் இருக்கிற மிலன் நகரில் அவருடைய திருமணம் நடக்கவிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தால் அதுவும் இல்லாமல் மிலனிலிருந்து நான்கு கிலோ மீட்டர் பயணத்தில் வரக்கூடிய டஸ்கேனி என்ற இடத்தில் இருக்கிற Borgo Finocchieto என்ற இடத்தில் விமர்சையாக திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

#3

#3

இந்த இடம் செல்பிரிட்டி ரிசார்ட் என்றே அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு விவிஐபிக்கள் இங்கே வருகை தருவார்களாம்.

கிட்டதட்ட 13 ஆம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டிருக்கிறது. borgo என்றால் இத்தாலிய மொழியில் கிராமம் என்று பெயர்.Finochietto என்றால் நிலம் என்று பொருள்.

 #4

#4

2001 ஆம் ஆண்டு இதனை இப்போதைய சொந்தக்காரர் வாங்கியிருக்கிறார். பழமை மாறாமல் நவீனத்திற்கு ஏற்றார் போல வசதிகளை மேம்படுத்த பழமைக்கு அழகு சேர்ந்துக் கொண்டது.

இங்கே 22 அறைகள் இருக்கிறது. சுமார் 50 பேர் வரை இங்கே தங்கலாம்.

#5

#5

இத்தாலியில் இருக்கிற செய்னா என்ற ஸ்டேஷனிலிருந்து 34 கி.மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இங்கிருந்து ரோம் இரண்டு மணி நேரங்கள் தான். இத்தாலியின் வைன் தலைநகரம் என்று அழைக்கப்படும் Montalcino. கூட இந்த திருமணம் நடந்த இடத்திற்கு மிக அருகில் தான் இருக்கிறது.

 #6

#6

இந்த இடம் மிகவும் வரலாற்று சிறப்பு வாய்ந்த இடம் என்றே சொல்லலாம். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ரோமிலிருந்து மக்கள் வந்து செல்ல இந்த சாலையைத் தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் முதல் சாலை போடப்பட்டது என்று கூட சொல்லலாம்.

#7

#7

Borgo Finocchietoவில் திருமணம் நடத்த வேண்டி தேடினால் இத்தாலியில் நடக்கும் மிகவும் எக்ஸ்க்ளூசிவ் வெட்டிங் ஸ்பாட் என்று குறிப்பிட்டிருக்கிறது. அதாவது நாம் கற்பனையில் நினைப்பதை விட எக்குத்தப்பான விலை இருக்கும் என்பது உண்மை .

#8

#8

என்ன தான் விலை அதிகம் என்று சொன்னாலும் உங்கள் திருமணத்தைப் பற்றிய, உங்கள் வாழ்வில் மறக்க முடியாத திருமண பந்தத்தை என்றும் நினைவில் கொள்கிற மாதிரியான மிகப்பெரிய உணர்வை கொடுக்கும் என்பது நிச்சயம்.இங்கே இருக்கக்கூடிய வைன் சுவை பார்க்கும் இடங்கள், கூடாரங்கள் எல்லாமே பயங்கர பேமஸ்.

#9

#9

Borgo Finocchieto என்பது ஐந்து தனித்தனி மிகவும் ஆடம்பரமான பங்களாவைக் கொண்டது. இது முழுவதுமே குளிரூட்டப்பட்ட அறைகளாக இருக்கிறது.அந்த ஐந்து வீடுகளுக்கும் முறையாக Finocchieto, Colussi, Filippi, Santa Teresa and Fede.என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

#10

#10

இங்கே மிகவும் உயர்ந்த அந்தஸ்த்தில் இருக்ககூடிய விவியைபிக்கள் வருகை தான் அதிகமாக இருக்கிறது. கடந்த மே மாதம் அமெரிக்காவின் முன்னால் அதிபர் ஒபாமா தன் மனைவி மிச்சேல் ஒபாமாவுடன் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பின்னர் இங்கே சில காலங்கள் தங்கியிருந்தார்.

 #11

#11

உலகில் இருக்கக்கூடிய முதல் 20 விலை அதிகமான டெஸ்டினேஷன் என்ற பட்டியலில் இந்த இடம் இடம்பிடித்திருக்கிறது. இங்கே ஒரு வாரம் தங்குவதற்கு குறைந்தது ஒரு கோடிக்கும் அதிகமாக செலவாகும். ஒரு இரவுக்கு ஆறு லட்சத்திலிருந்து, பதினான்கு லட்சம் வரை உறுதியாக ஆகிடும் என்கிறார்கள்.

#12

#12

இந்த திருமணத்தை திட்டமிட்டு இத்தாலியில் நடத்தலாம் என்று சொல்லி அதற்கான எல்லா திட்டங்களையும் வகுத்துக் கொடுத்தவர் தேவிகா நாராயண். இவை டெல்லியை மையமாக கொண்டு செயல்படுகிற மிகவும் பிரபலமான வெட்டிங் ப்ளானர்.

#13

#13

சமூகவலைதளத்தில் அவர்கள் பகிர்ந்த படங்களின் மூலமாகத்தான் விராத்துக்கும் அனுஷ்காவுக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது என்ற விவரமே நமக்கெல்லாம் தெரிந்தது. எப்போதும் திருமணத்தில் போட்டோ மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படும்.

இவர்களின் திருமணத்தில் யார் போட்டோகிராபி தெரியுமா? ஜோசப் ராதிக் இவர் வெட்டிங் பிளானர் தேவிகா நாரயணின் கணவர் என்பது ஹைலைட்.

#14

#14

மணமக்களுக்கான உடையை டிசைன் செய்தது பேஷன் டிசைனர் Sabyasachi Mukherjee . நிச்சயதார்த்தம், மெஹந்தி, சங்கீத், வெட்டிங், போஸ்ட் வெட்டிங் டின்னர் என விதவிதமாக பல நிகழ்வுகளுக்கு தனியாக டிசைன் செய்திருக்கிறார்கள்.

#15

#15

விராத் மற்றும் அனுஷ்காவின் திருமணத்தில் கேட்டரிங் செய்தவர் Chef Ritu Dalmia. தால்மியா ரெஸ்ட்டாரண்டில் கிடைக்கும் சிக்னேச்சர் டிஷ்கள் பல இங்கே பறிமாறப்பட்டது.

அத்துடன் பல சவுத் இந்தியன் உணவுகள்,டெசர்ட் வகைகளும் பறிமாறப்பட்டது.

#16

#16

இவர்களின் திருமணத்தில் உறவினர்களைத் தாண்டி வெளியுலக ஆட்களாக பங்கேற்றது இருவர். ஒருவர் விராத்தின் மேனேஜர் பண்ட்டி சஜ்தே மற்றும் விராத்தின் குழந்தைப்பருவத்தில் கோச்சாக இருந்த ராஜ்குமார் ஷர்மா.

#17

#17

மிக நெருக்கமான சில உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். பிற சுற்றத்திற்காகவும், உறவுகளுக்காகவும் டிசம்பர் 21 ஆம் தேதி டெல்லியில் ரிசப்ஷன் நடக்கிறது.

அதே போல சினிமாத் துறையில் இருக்கும் நட்சத்திற நண்பர்கள் மற்றும் கிரிக்கெட் உலகின் நட்புக்கூட்டத்திற்காக மும்பையில் 26 ஆம் தேதி இன்னொரு ரிஷப்சன் நடக்கிறது.

#18

#18

இதெல்லாம் முடிந்த பிறகு புதுமணத் தம்பதிகள் தென்னாப்ரிக்காவிற்கு பயணிக்கவிருக்கிறார்கள். அநேகமாக விராத் மற்றும் அனுஷ்காவின் ஹனிமூன் அங்கே தான் இருக்கும். அங்கே புத்தாண்டை கொண்டாடிவிட்டு ஜனவரி முதல் வாரத்தில் திரும்புவார்கள்.

தொடர்ந்து அனுஷ்கா ஷாருக் கான் உடன் ஓர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் போடவுள்ளார். அத்துடன் வருண் தவானுடன் சுய் தாகா என்ற திரைப்படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கவிருக்கிறது. அதோடு ஏற்கனவே நடித்து முடித்திருக்கும் பாரி என்ற திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் கவனம் செலுத்த உள்ளார்.

#19

#19

விராத் திருமணத்திற்கு பிறகு தென்னாப்பிரிக்காவில் நடக்கவிருக்கும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறார். இத்துடன் மூன்று டுவெண்டி 20 மேட்சிலும் பங்கேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகு விராட் மற்றும் அனுஷ்கா மும்பையில் இருக்கும் வொர்லி என்ற இடத்தில் புது வீடு குடிபுக இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Virat and Anushka wedding Exclusive Pictures

    Virat and Anushka wedding Exclusive Pictures
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more