Latest Updates
-
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
இந்த அமங்கலமான விஷயங்களைத் தொட்டால் வறுமையும், துரதிர்ஷ்டமும் தான் வரும் என்பதை மறவாதீர்கள்!
கீழே கொடுக்கப்பட்டுள்ள தவறுகளை செய்யும் போது, அது ஒருவரை நோக்கி துரதிர்ஷ்டத்தையும், வறுமையையும் தான் கொண்டு வரும்.
யாருக்கு தான் போதிய செல்வத்துடன் சந்தோஷமாக இருக்க விருப்பமிருக்காது. இந்த வாழ்க்கைக்காகத் தான் நாம் அவ்வளவு பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும், பலரது வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாகத் தான் இருக்கிறது.
இதற்கு நாம் செய்யும் பல தவறுகளும் முக்கிய காரணம். குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தவறுகளை செய்யும் போது, அது ஒருவரை நோக்கி துரதிர்ஷ்டத்தையும், வறுமையையும் தான் கொண்டு வரும். அவை என்னவென்று தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தவறு #1
சுடுகாட்டில் உள்ள இறந்த நபரின் எலும்புகளைத் தொட்டால், அது தொட்டவரை நோக்கி எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதோடு, எதிலும் துரதிர்ஷ்டத்தை தான் கொண்டு வரும்.

தவறு #2
சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்கள் தரையில் சிதறி இருந்தால், அதை காலால் மிதித்தால், அது மிகப்பெரிய அமங்கலமான செயலாக கருதப்படுகிறது.

தவறு #3
ஒரு சுப காரியத்தில் ஈடுபடும் போது, நாய் வந்து உங்களைத் தொட்டால், அது கெட்ட சகுணமாக நாரத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் இச்செயல் வாழ்வில் வறுமையை வரவழைக்கும்.

தவறு #4
வீட்டைப் பெருக்கி, துடைக்கும் போது, அந்த அழுக்கு நீர் மேலே படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அந்நீர் நம் உடலில் பட்டால், அது துரதிர்ஷ்டத்தை வரவழைக்குமாம்.

தவறு #5
இறந்த சடலத்தை தொட்ட பின், ஒருவர் தவறாமல் குளித்துவிட வேண்டும். இல்லாவிட்டால், அது அவரது வீட்டிற்கு முடிவற்ற துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்.

தவறு #6
சுடுகாட்டில் உள்ள மரக்கட்டைகளைத் தொடுவதும் அபசகுணமான செயல் தான். இதைச் செய்யும் போது, அது எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, பின் எதிலும் தோல்வியைத் தழுவச் செய்யும்.



Click it and Unblock the Notifications