இந்தியர்களால் அதிகம் வெறுக்கப்பட்ட இந்த ஏர்டெல் 4G பொண்ணு யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஏர்டெல் 4G விளம்பரம் மூலம் இந்தியர்களுக்கு அறிமுகம் ஆன சாஷா மும்பை க்செவியர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் விளம்பரம் படித்த நபர். இவர் நடிக்க வருவதற்கு முன்னர் காபிரைட்டர் வேலையும் செய்து வந்துள்ளார்.

ஏர்டெல் 4G விளம்பரத்தில் நடிக்கக் வந்ததே தான் எதிர்பாராத வாய்ப்பு தான் என கூறுகிறார் சாஷா செட்ரி...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாஷா செட்ரி!

சாஷா செட்ரி!

இவர் பெயர் சாஷா செட்ரி, 20. ஏர்டெல் 4G விளம்பரம் மூலம் பிரபலமானார் என்பதை காட்டிலும் அதிகம் வறுத்தெடுக்கப்பட்டார் என்பதே உண்மை. இந்தியர்கள் இன்டர்நெட்டில் தங்கள் அதிக எதிர்ப்பை அல்லது கோபத்தை வெளிக்காட்டிய நபர் என்ற வாக்கெடுப்பு வைத்தால் கண்டிப்பாக சாஷா செட்ரியை யாராலும் வெல்ல முடியாது.

டேராடூன்!

டேராடூன்!

சாஷா செட்ரி டேராடூன் பகுதியை சேர்ந்தவர். இவர் பதின் வயதிலேயே இசை பயின்றவர். மேலும், இவர் மாடலிங்கிலும் ஈடுப்பட்டு வந்தார். 2015-ல் இருந்து தான் மாடலிங் மற்றும் நடிப்பில் ஈடுப்பட துவங்கினார். துவக்கத்திலேயே ஏர்டெல் எனும் பெரும் நிறுவனத்தின் மாடல் ஆனதால் மிகவும் பிரபலமானார்.

4G!

4G!

ஏர்டெல் தனது புதிய 4G நுட்ப பயன்பாடு மற்றும் சலுகைகள் குறித்து விளம்பரம் செய்ய இவரை மாடலாக தேர்வு செய்தது. காடு, மலை, குக்கிராமம் என எல்லா இடங்களிலும் ஏர்டெல் 4G கிடைக்கும் என ஒளிப்பரப்பான அந்த விளம்பர சீரீஸ்-ல் இவர் முதலில் நடித்தார்.

54,506 முறை!

54,506 முறை!

செப்டம்பர் 19 - நவம்பர் 20, 2015-க்கு இடைப்பட்ட நாளில் மட்டும் 54,506 முறைகளுக்கு மேல் இந்த விளம்பரம் இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பு ஆனது எனது இந்திய பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில் இந்தியா (BARC) ஒரு ரிப்போர்ட் வெளியிட்டது.

475 மணிநேரம்!

475 மணிநேரம்!

அதாவது இரண்டு மாத இடைவேளையில் 475 மணிநேரம் இவரது விளம்பரம் தான் ஒளிப்பரப்பாகி இருக்கிறது. அதாவது ஏறத்தாழ 20 நாட்கள்.

இந்த காரணத்தால் தான் சாஷா செட்ரி மிகவும் பிரபலம் ஆனார். மேலும், பார்வையாளர்கள் வெறுப்பையும் சம்பாதிக்க இது காரணமாக அமைந்தது.

வெறுக்கப்பட்ட பிராண்ட்!

வெறுக்கப்பட்ட பிராண்ட்!

2015-ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் அந்த ஆண்டில் மிகவும் விரும்பப்பட்ட பிராண்ட் என்றும், ஏர்டெல் தான் இந்தியாவின் மிகவும் வெறுக்கப்பட்ட பிராண்ட் என்றும் ஒரு சர்வே ரிசல்ட் கூறியது.

Source

நம்பிக்கை இல்லை!

நம்பிக்கை இல்லை!

ஏர்டெல் நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்த போது நான் நம்பவே இல்லை என்கிறார் சாஷா. நான் எனது இடுப்பு வரை இருந்த கூந்தலை ஷார்ட் கட் செய்திருந்தேன். நான் ஷார்ட்லிஸ்ட் ஆனப்போது நான் அதை ஜோக் என நினைத்தேன் என மேலும் கூறியுள்ளார் சாஷா.

என் வேலை!

என் வேலை!

இந்த விளம்பரத்திற்கு பிறகு பலதரப்பட்ட மக்கள், அவர்களுடைய பலதரப்பட்ட கருத்துக்களை இன்டெர்நெட்டில் பதிவு செய்தனர். மிகவும் டிரால் செய்யப்பட்டேன், வெறுக்கப்பட்டேன். பலர் என்னை விரும்பவும் செய்தனர். எதுவாக இருந்தாலும் நான் எனது வேலையை தொடர்ந்து செய்ய போகிறேன். அது மட்டுமே எனது மனதில் நிலைத்து இருக்கிறது என கூறியிருக்கிறார் சாஷா.

டேட்டிங்!

டேட்டிங்!

இந்த 4G பொண்ணு இப்போது ஒரு பிரபல பாலிவுட் இசை அமைப்பாளர் மற்றும் பாடகர் சச்சின் குப்தாவுடன் டேட்டிங் செய்து வருகிறார் என கூறப்படுகிறது. ஆனால், சாஷாவும் ஒரு இசை கலைஞர், இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு இசை கோப்பு வேலைக்காக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things To Know About India's Most hated Internet Personality Airtel 4G girl aka Sasha Chettri!

Things To Know About India's Most hated Internet Personality Airtel 4G girl aka Sasha Chettri!
Story first published: Friday, June 9, 2017, 10:27 [IST]