வெற்றியை தரும் விஜய தசமி தோன்றிய வரலாற்று கதை உங்களுக்கு தெரியுமா ?

By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

துர்கா பூஜையின் கடைசி நாள் கொண்டாட்டம் தான் இந்த விஜய தசமி. துர்கா பூஜையில் கொண்டாடப்படும் இந்த விஜய தசமி விழா இந்தியா முழுவதும் வெவ்வேறு முறைகளிலும் வெவ்வேறு பெயர்களிலும் மக்கள் தங்களது வழிபாட்டை செய்து மகிழ்கின்றனர். கல்கத்தாவில் இந்த பூஜை ரெம்ப சிறப்பாக கொண்டாடப்படும். ஒட்டு மொத்த மக்களின் கூட்டமும் இந்த பூஜையில் கலந்து கொண்டு வழிபடுவர்.

இந்த துர்கா பூஜை கிழக்கிந்திய மக்களுக்கு மிகவும் முக்கியமான திருவிழா ஆகும். மேற்கு பெங்காலில் இந்த பூஜையை ஆடம்பர அலங்காரத்துடன் தங்களின் மனம் மற்றும் முகம் நிறைய சந்தோஷத்துடன் எல்லாரும் சேர்ந்து கொண்டாடி மகிழ்வர். எப்படி விநாயகர் பூஜைக்கு மும்பை புகழ் பெற்று விளங்குகிறதோ அதே மாதிரி துர்கா பூஜை கல்கத்தாவில் மிகவும் புகழ் பெற்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

The Stories Of Vijaya Dashami

விஜய தசமி கொண்டாடப்படும் நாள்

விஜய தசமி துர்கா பூஜையின் இறுதி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த விழா தசமி திதி அன்றோ அல்லது அஸ்வின் மாதத்தின் பத்தாம் நாளோ கொண்டாடப்படும். இந்த வருடம் 2017ல் விஜய தசமி விழா செப்டம்பர் 30ல் சனிக்கிழமையில் வருகிறது.

முகூர்த்த நேரம்

விஜய தசமி முகூர்த்தம் ஆரம்பிக்கும் நேரம் 2.14 - 3.02 கிட்ட தட்ட 47 நிமிடங்கள் நல்ல நேரமாக அமைகிறது. விஜய தசமி பூஜையை தொடங்குவதற்கு சரியான நேரம் 1.27-3.50 கிட்டத்தட்ட 2 மணி நேரம் 23 நிமிடங்கள் இருக்கின்றன.

இந்த விஜய தசமி பூஜையானது உங்கள் பக்தி வெளிப்பாட்டிற்கு சரியான கொண்டாட்டம். எல்லா தரப்பட்ட மக்களும் ஒன்று சேர்ந்து அன்புடனும் மகிழ்ச்சியுடனும் ஒருவருக்கொருவர் பக்தியுடன் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த ஒன்பது நாள் விரதமிருந்து கொண்டாடும் தன் பக்தர்களுக்கு ஸ்ரீ துர்கா தேவி, விஜய தசமி அன்று அருள் பொழிகிறாள்.

இந்தியாவில் நிறைய திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும் இந்த விஜய தசமி தோன்றியதற்கு பின்னாடி நிறைய வரலாறு கதைகள் இருக்கின்றன. வருகின்ற விஜய தசமி நன்னாளுக்காக இந்த வரலாறு சிறப்பை நாமும் அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஹிஷாசுரனை வதம் செய்த கதை

மஹிஷாசுரனை வதம் செய்த கதை

விஜய தசமி என்பது அன்னை துர்கா தேவி அரக்கன் மகிஷாசுரனை வதம் செய்த வெற்றி (விஜய) திருநாள் (தசமி ஆகும்.

புராணக் காலத்தில்( மஹி - எருமை) அதாவது மஹிஷாசுரன் என்ற எருமை தலை கொண்ட அரக்கன் வாழ்ந்து வந்தான். மனிதர்கள், கடவுள் இப்படி யாராலும் அழிக்க முடியாத வரத்தை பெற்று உலக மக்கள் அனைவரையும் கொடுமையில் ஆழ்த்தினான்.

அசுரனின் இச் செயல்களால் மூவுலகமே நிம்மதியற்ற நிலையில் அன்னை துர்கா தேவியை வழிபட்டனர். அன்னை துர்கா தேவியும் அந்த அரக்கனை வதம் செய்ய சிம்ம வாகனத்தில் பத்து கைகளுடன் மனிதரும் அல்லாத ஒரு அமைப்பை எடுத்து அவனை வதம் செய்து உலகில் நிம்மதியை நிலை நிறுத்தின நன்னாளே இந்த விஜய தசமி நாளாகும்.

இந்த நாளில் அரக்கன் மஹிஷாசுரனை வதம் செய்ததால் மஹிஷாசுரமர்தனியாக அன்னை துர்கா தேவி காட்சி தருகிறார்.

ராவணனை வீழ்த்திய கதை

ராவணனை வீழ்த்திய கதை

அரக்கர்களின் அரசனான ராவணனை வீழ்த்திய கொண்டாட்டமும் ஒரு சில பகுதிகளில் விஜய தசமி அன்று கொண்டாடப்படுகிறது. தனது மனைவி சீதையை கொடிய அரக்கனான ராவணனிடம் இருந்து காப்பாற்றி அவனை ராமர் வீழ்த்திய கதையும் இந்த திருவிழா நேரங்களில் தசரதா விழாவாக ஒரு சில இடங்களில் ல்கொண்டாடப்படுகிறது.

பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம்

பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம்

பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என்றும் ஒரு வருடம் அயோத்திய நகரில் கழிக்க வேண்டும் என்றும் அந்த புராணக் காலத்தில் கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடைபெற்ற பகடை சூதாட்ட முடிவில் கூறப்பட்டது. அதன் படி பார்த்தால் இந்த விஜய தசமி நன்னாளில் தான் பாண்டவர்கள் தங்கள் சொந்த அயோத்திய நாட்டிற்கு திரும்பினர் என்ற சிறப்பும் சொல்லப்படுகிறது.

 அன்னை துர்கா தேவி கடவுள் சிவபெருமானுடன் இணைந்த நாள்

அன்னை துர்கா தேவி கடவுள் சிவபெருமானுடன் இணைந்த நாள்

துர்கா பூஜையின் கடைசி நாளான விஜய தசமி அன்று தனது அவதாரங்களை முடித்து விட்டு அரக்கன் மஹிஷாசுரனையையும் வதம் செய்து விட்டு அன்னை பார்வதி தேவியாக மறுஉருவம் பெற்று கடவுள் எம்பெருமானுடன் இணைந்து காட்சியளித்த நாள் என்ற சிறப்பும் இந்த விஜய தசமி விழாவுக்கு உண்டு. எனவே தான் இந்த ஓன்பது நாளும் பெண்கள் அன்னை துர்கா தேவியை வழிபட்டு பத்தாம் நாள் புதுமணத் தம்பதிகளாக புகுந்த வீட்டில் அடியெடுத்து வைப்பர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Stories Of Vijaya Dashami

The Stories Of Vijaya Dashami
Story first published: Friday, September 15, 2017, 12:25 [IST]
Subscribe Newsletter