பாகுபலி கதாபாத்திரங்களின் திலகங்களின் பின்னணி இரகசியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பாகுபலி பாகம் ஒன்று மற்றும் இரண்டில் இடம்பெற்ற கதாபத்திரங்களின் நெற்றில் இருக்கும் திலகம், படத்தில் இடம்பெற்ற இலட்சினைகள் போன்றவரின் பின்னணியில் இருக்கும் இரகசிய அர்த்தங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பின்கலத்தேவன் - திரிசூலம்!

பின்கலத்தேவன் - திரிசூலம்!

திரிசூலம் இந்திய புராணங்களில் அதிகம் காணப்படும் குறியீடு. இந்திய வேதங்கள் இதன் குணங்கள் என சத்விகா, ராஜசிகா மற்றும் தமசிகா என கூறுகின்றனர். இதில் தமசிகா என்பதன் தரம் சமநிலையின்மை, குழப்பம், பதட்டம் என கூறப்படுகின்றன. இது பின்கலத்தேவனுக்கு சரியாக பொருந்தும்.

சிவகாமி - முழு நிலவு!

சிவகாமி - முழு நிலவு!

சிவகாமியின் நெற்றியில் முழு நிலவு இருக்கும். இது சமத்துவம், தைரியம், அக்கறை மற்றும் சக்தியை வெளிப்படுத்தும் குறியீடு. இவை, இவரது கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தும்.

அமரேந்திர பாகுபலி!

அமரேந்திர பாகுபலி!

இவரது நெற்றியில் பாதி நிலவு குறியீடு இருக்கும். இது பல மதங்களில் பின்பற்றப்படும், காணப்படும் குறியீடாக இருந்து வருகிறது. இது இறக்கம், சமத்துவம், சமநிலை, இலகுவான் மென்மையான குணம் போன்றவற்றை குறிக்கிறது.

மகதீரா!

மகதீரா!

இதே அரை நிலை குறியீடு நீங்கள் மகதீரா கால பைரவா நெற்றியிலும் இருப்பதை கவனித்திருக்கலாம்.

தேவசேனா - பாலின சமநிலை!

தேவசேனா - பாலின சமநிலை!

இந்த படத்தில் தேவசேனாவின் கதாபாத்திரம் ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் சமநிலை காணும்படி அமைத்திருப்பார்கள். தேவசேனாவின் நெற்றியில் இருக்கும் குறியீடு ஆண், பெண் சமநிலையை குறிக்கிறது.

பல்லாலதேவா - உதிக்கும் சூரியன்!

பல்லாலதேவா - உதிக்கும் சூரியன்!

பாகுபலியின் வில்லன் பல்லாலதேவா. மாற்றமே காணாத நட்சத்திரம் சூரியன். எத்தனை ஆண்டுகள் ஆனாலுன் தன்னிலை மாறாமல் இருக்கும். இது பல்லாலதேவனின் குணத்தை குறிக்கிறது.

மகேந்திர பாகுபலி - பாம்பு, சங்கு!

மகேந்திர பாகுபலி - பாம்பு, சங்கு!

சிவடு சிவ பக்தன். சிவனுக்கு உரிய குறியீடுகள் பாம்பும், சங்கும். மேலும், கதை எழுதும் போது சிவடு பாத்திரத்திற்கு நந்தி என பெயர் வைக்கலாம் எனவும் யோசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டப்பா - விசுவாசமான அடிமை!

கட்டப்பா - விசுவாசமான அடிமை!

மாஹிச்மதி சாம்ராஜ்யத்திற்கு விசுவாசமான அடிமை கட்டப்பா. சிம்மாசனத்தில் இருப்பவரின் கட்டளைகளை நிறைவேற்றுவதே இவரது வேலை. அவரது நெற்றியில் இருக்கும் குறியீடு விசுவாசம் மற்றும் உதவியற்ற நிலையை குறிக்கிறது.

மாஹிச்மதி!

மாஹிச்மதி!

மாஹிச்மதி சாம்ராஜ்யத்தின் இலட்சினை! பின்னியில் உதிக்கும் சூரியன், சிம்மாசனம், இருப்பக்கமும் குதிரைகள் கொண்டிருக்கின்றன.

குந்தால அரசன் - கருப்பு சின்னம்!

குந்தால அரசன் - கருப்பு சின்னம்!

குந்தால குழுவின் தலைவர் நெற்றியில் கருப்பு சின்னம் இருக்கும். இது இழப்பதற்கு எதுவும் இல்லை, இழந்ததை மீட்பதற்கான போராட்டத்தை குறிக்கிறது.

அவந்திகா - வேல் கம்பு முனை!

அவந்திகா - வேல் கம்பு முனை!

தன்னை தானே தேவசேனாவை காக்கும், மீட்கும் கருவியாக தயார்ப்படுத்தி கொள்ளும் அவதிகாவின் குணத்தை குறிக்கிறது இந்த வேல் கம்பு குறியீடு.

பத்ரா - காளை!

பத்ரா - காளை!

காளை அதிகாரம், ஆக்கிரோஷம் மற்றும் ஆதிக்கம் போன்ற குணங்களை வெளிப்படுத்துகிறது. இது பிடிவாதத்தையும் வெளிப்படுத்தும் குறியீடாகும்.

காதல் சின்னம்!

காதல் சின்னம்!

சிவடு மற்றும் அவந்திகாவின் தோள்பட்டையில் இருக்கும் இருவேறு குறியீடுகள் ஒன்றினையும் போது, ஈருடல் ஓருயிர் ஆனதை குறிக்கும் காதல் குறியீடாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Bindis, Tattoos and Logos That Used in Bahubali Mean This

The Hidden Meanings Behind The Tattoos, Bindis and Logos Used By Characters Of Baahubali,
Please Wait while comments are loading...
Subscribe Newsletter