இந்த 10 'ல, உங்க காதலி எந்த வகை?

Posted By:
Subscribe to Boldsky

மனைவி அமைவதெல்லாம் மட்டுமல்ல, காதலி அமைவதும் அவரவர் செய்த வரம் தான். பெண்களின் மனதை மட்டுமல்ல, அவர்கள் எப்போது, எதை, எப்படி எடுத்துக் கொள்வார்கள் என அறிவதும் கஷ்டம் தான்.

ஒரு நேரத்தில் ஜோவியலாக எடுத்துக் கொண்ட அதே விஷயத்தை, மறு சமயத்தில் கோபமாக எடுத்துக் கொள்வார்கள்.

Ten Types of Girl Friends!

இதற்கு அந்தந்த சூழல் தான் காரணம் என்றாலும், அவர்களிடம் ஏற்படும் மாற்றங்கள் மிகுந்த வீரியத்தை உண்டாக்கும். எல்லாருக்கும் ஒரே மாதிரி துணை அமையாது. அப்படி அமைந்தாலும் அது வாழ்க்கையை சுவாரஸ்யமாக நகர்த்தாது.

காதலிகளில் பத்து வகை இருக்கிறார்களாம்... அதில் உங்க காதலி எந்த வகை என நீங்களே படிச்சுப்பாருங்க!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#டிராமா குயின்!

#டிராமா குயின்!

இப்படி ஒரு பெண்ணை நாம் காணாதிருக்கவே முடியாது. எந்த ஒரு சின்ன விஷயத்தையும் கூட ஊத்தி பெரிதாக்கி, அமர்க்களப்படுத்தி விடுவார்கள். கிட்டத்தட்ட பிக் பாஸ் ஜூலி போல.

#போர்வாள்

#போர்வாள்

எந்த விஷயமாக இருந்தாலும் பொறுமை இருக்காது, எதற்கு எடுத்தாலும் கத்திக் கூச்சலிட்டு தான் பேசுவார்கள். தெரியாமல் ஒரு தவறு நடந்தால் கூட போரிடத் துவங்கிவிடுவார்கள்.

#தொணதொணவென்று!

#தொணதொணவென்று!

நாம் ஒரு வார்த்தை பேசினால், அதை வைத்து பூக்கட்டி, சரமாக்கி, மாலைத்தொடுத்துவிடும் வகை இவர்கள். இவர்களின் பேச்சை நிறுத்துவது மிகவும் கடினம்.

#செல்ஃபீப்புள்ள

#செல்ஃபீப்புள்ள

எங்கே சென்றாலும், அங்கே ஊரே ரெண்டுப்பட்டு கிடந்தாலும், மொபைலை எடுத்து செல்ஃபீ எடுக்க துவங்கும் வகை இவர்கள். அதும், நீங்கள் அழகாக இருந்தால் மட்டும் போதாது, அவர்கள் அழகாக தெரியும் வரை செல்ஃபீ வெடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

#டமால், டுமீல்!

#டமால், டுமீல்!

சண்டை போட எப்படா வாய்ப்பு கிடைக்கும் என வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் காதலிகள். இவர்களிடம் இருந்து தப்பிப்பதே பெரிய போராட்டமாக இருக்கும். கனவில் கூட வந்து பயமுறுத்துவார்கள்.

#உயிரே, உயிரே!

#உயிரே, உயிரே!

நீங்கள் எவ்வளவு கஷ்டமான சூழலில் இருந்தாலும், அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், அவர்களுக்கு ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும், உங்களது முக்கியமான வேலையை விட்டுவிட்டு அவர்களுடன் செல்ல வேண்டும். அட்டைப்பூச்சி போல உயிரை குடிப்பவர்கள்.

#புத்தகப்புழு

#புத்தகப்புழு

காதலிக்க போறமா, இல்ல டியூஷன் கிளாசுக்கு போறமா என்ற ஒரு வித்தியாச ஃபீலிங் இருக்கும். எப்போது பார்த்தாலும் எதாவது பாடம் எடுத்துக் கொண்டே இருப்பார்கள். அல்லது புத்தகம் படித்துக் கொண்டே இருப்பார்கள். டின்னர், டேட்டிங், சினிமா, பார்க் எங்கு சென்றாலும் இவருடன் ஒரு புத்தகம் இருக்கும்.

#செய்தி புறா!

#செய்தி புறா!

நேரில் பார்க்கும் போது, வெளிய போகும் ஒரு வார்த்தை பேச மாட்டார்கள். நண்பர்கள், தெரிந்தவர்கள் எல்லாம் இப்படி ஒரு லவ்வர் கிடைக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பார்கள்.

ஆனால், நமக்கு தான் தெரியும், வீட்டுக்கு சென்றவுடன், குறுஞ்செய்தியில் அவள் எப்படி வறுத்தெடுப்பாள் என.

#டாம்பாய்

#டாம்பாய்

உங்கள் சட்டை பையில் இருந்து, மணிபர்ஸ் வரை, உங்கள் ஃபேஸ்புக் ஸ்டேடஸ் முதல் வாட்ஸ்அப் ஸ்டேடஸ் வரை அனைத்தையும் ஆராய்ந்து பார்க்கும் டாம் பாய். இவர்களிடம் இருந்து ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. அவர்கள் உங்களை வாட்ச் செய்துக் கொண்டே இருப்பார்கள்.

#பார்ட்டி கேர்ள்!

#பார்ட்டி கேர்ள்!

அவங்க மப்பு ஆகுறத பார்த்தாலே உங்களுக்கு பப்பு ஏறாது. "குடி"யும் குடித்தனமாக வாழும் மாடர்ன் காதலி. காதலின் ஆரம்பத்தில் நன்கு போதை ஏறும், போக போக அந்த சரக்கு போல கசக்க ஆரம்பித்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Types of Girl Friends!

Ten Types of Girl Friends!
Subscribe Newsletter