Latest Updates
-
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க லட்சங்களை குவிக்கப் போறாங்களாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்..
தாஜ் மஹாலுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உண்மைகளும், மறைக்கப்பட்ட மர்மங்களும்!
தாஜ் மஹால், மும்தாஜ், ஷாஜகான் பற்றிய திகைக்க வைக்கும் உண்மைகள்.
தாஜ்மகால் யார் கட்டியது, அது முன்னர் இந்து கோவிலாக இருந்ததா என பல புரளிகள் சர்ச்சைகள் இன்றளவும் சென்றுக் கொண்டே தான் இருக்கிறது.
ஆனால், அது யாருக்காக கட்டப்பட்டதோ, யார் கட்டினார் என வரலாறு கூறுகிறதோ... அவர்களை சுற்றியும், அவர்களது குழந்தைகளையும் சுற்றியும் கூட பல திகைக்க வைக்கும் உண்மைகள் இருக்கின்றன...

#1
ஷாஜகான் பேரரசராக முடிசூட்டிய போது அவருக்கு அளிக்கப்பட முழுப்பட்டம், "ஷாஹான்ஷாஹ் அல் சுல்தான் அல் அஸாம் வால் ககான் அல் முக்ராம், மாலிக் உல் சுல்தானாட், அலா ஹஸ்ரத் அபுல்-முஸாபர் ஷஹப் உத்-தின் முஹம்மத் ஷா ஜஹான் ஐ, சாஹிப்-இ-கிரான்-ஐ-சானி, பத்ஷா காஸி ஜில்லு ' லலா, ஃபிர்ஹாரஸ்-ஆஷியானி, ஷாஹான்ஷா-ஈ-சுல்தான்ட் உல் ஹிந்தியா வால் முகலலியா ".
(Shahanshah Al-Sultan al-‘Azam wal Khaqan al-Mukarram, Malik-ul-Sultanat, Ala Hazrat Abu'l-Muzaffar Shahab ud-din Muhammad Shah Jahan I, Sahib-i-Qiran-i-Sani, Padshah Ghazi Zillu'llah, Firdaus-Ashiyani, Shahanshah-E-Sultanant Ul Hindiya Wal Mughaliya".)

#2
ஷாஜகான் 7 முறை திருமணம் செய்துக் கொண்டார். அதில் நான்காவது மனைவி தான் மும்தாஜ்.

#3
மும்தாஜ் வேறு ஒரு ஆணை திருமணம் செய்தவர். மும்தாஜை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவரை கொலை செய்தாராம் ஷாஜகான்.

#4
தனது 14வது பிரசவத்தின் போது இறந்து போனார் மும்தாஜ்.

#5
மும்தாஜ் இறந்த பிறகு, அவரது சகோதரியை திருமணம் செய்துக் கொண்டார் ஷாஜகான்.

#6
யார் மகுடம் சூடிக் கொள்வது என்பதை தீர்மானம் செய்ய ஷாஜகானின் மகன்கள் சமுகார் எனும் போரில் ஈடுப்பட்டனர்.

#7
அவுரங்கசீப் தனது தந்தையான ஷாஜகானையே வீட்டு சிறைப்பிடித்தார். இதற்கு அவர் கட்ட நிணத்தை கருப்பு தாஜ்மகால் மற்றும் ஷாஜகான் அதிக செல்வங்களை வாரியிறைத்தது போன்ற பல காரணங்கள் கூறப்படுகின்றன.

#8
1628 - 1658 வரை இந்தியாவை ஆண்ட ஷாஜகானின் இறுதி சடங்கு எப்படி நடந்தது, எங்கே நடந்தது என்ற தகவல்கள் அறியப்படாமலேயே இருக்கின்றது.

#9
தாஜ் மகாலில் மும்தாஜின் சமாதிக்கு அருகாமையிலேயே ஷாஜகானின் உடலும் புதைக்கப்பட்டது.

#10
தாஜ் மகாலில் இன்னொரு சமாதி கட்ட எந்த வரைப்படமும் இல்லை. ஆனால், இன்னொரு தாஜ்மகால் கட்டுவதற்கு பதிலாக தனது தந்தை ஷாஜகானை மும்தாஜ் அருகிலேயே அவர் சமாதி செய்துவிட்டார் என கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications











