முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்ற கர்ணம் மல்லேஸ்வரி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

கர்ணம் மல்லேஸ்வரியை அறியாத இந்திய விளையாட்டு வீரர்களே இருக்க முடியாது. தனி நபர் போட்டியில் இந்தியாவிற்கு முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்று கொடுத்து கௌரவப்படுதியவர்.

வலிமையான பெண் யாரையாவது கண்டால், அவரை கர்ணம் மல்லேஸ்வரியுடன் ஒப்பிட யாரும் மறந்ததே இல்லை. இந்திய அளவில் பெரும் புகழ் பெற்றுத் திகழ்ந்தார்.

2000-ம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இவர் 69 கிலோ பிரிவில் இவர் வெண்கல பதக்கம் வென்றார். இது போக இவர் உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தலா இரண்டு முறை தங்க பதக்கமும், வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்.

சர்வதேச பளுதூக்கும் அரங்கில் இவர் மொத்தம் 29 பதக்கங்கள் வென்றுள்ளார், அதில் 11 தங்க பதக்கங்கள் அடங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பத்ம ஸ்ரீ

பத்ம ஸ்ரீ

கர்ணம் மல்லேஸ்வரி 1995ம் ஆண்டு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதும், 1999ல் பத்ம ஸ்ரீ விருதும் வென்றார்.

Image Credit: Twitter

தங்கப்பதக்கம்

தங்கப்பதக்கம்

1994ம் ஆண்டு, இஸ்தான்புலில் நடந்த உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் கர்ணம் மல்லேஸ்வரி தங்கப்பதக்கம் வென்றார்.

Image Credit: Twitter

நான்கு சகோதரிகள்

நான்கு சகோதரிகள்

கர்ணம் மல்லேஸ்வரி ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த வூசவாணிபேட்டா (Voosavanipeta)என்ற ஊரில் பிறந்தவர். இவருக்கு மொத்தம் நான்கு சகோதரிகள் உள்ளனர்.

இவர்கள் அனைவருமே பளுதூக்கும் விளையாட்டில் பயிற்சி பெற்றவர்கள்.

Image Credit: Twitter

காமன்வெல்த்

காமன்வெல்த்

2002ல் தனது தந்தை இறந்ததன் காரணத்தால், காமன்வெல்த் போட்டியில் இருந்து பின்வாங்கினார் கர்ணம் மல்லேஸ்வரி.

Image Credit: Twitter

திருமணம்

திருமணம்

1997ல் ராஜேஷ் தியாகி எனும் பளுதூக்கும் வீரரை திருமணம் செய்துக் கொண்டார் கர்ணம் மல்லேஸ்வரி. இவர் 2001ல் ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

Image Credit: Twitter

தோல்வி

தோல்வி

2004ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தேர்வாக இவர் தோல்வியுற்றார். அதன் பிறகு உடனடியாக பளுதூக்கும் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

Image Credit: Twitter

 உணவு ஆணையம்

உணவு ஆணையம்

இப்போது இவர் யமுனா நகர் எனும் பகுதியில் வாழ்ந்து வருகிறார். இவர் இந்திய உணவு ஆணையத்தில் வேலை செய்து வருகிறார்.

Image Credit: Twitter

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Facts About Karnam Malleswari!

Seven Facts About Karnam Malleswari!