For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ப்ளூ வேல் விளையாட்டில் குழந்தைகள் அதிகம் ஈடுபட இது தான் காரணம்! அவசியம் தெரிஞ்சுக்கோங்க

தற்கொலையை தூண்டும் ப்ளூ வேல் என்கிற ஆன்லைன் விளையாட்டில் ஏராளமான இளையோர் தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் இதற்கு காரணம் என்ன? அவர்களால் என்ன தற்கொலை செய்வதற்கு முன்னால் யோசிக்க முடியவில்லை என்பதற்க

|

இன்றைக்கு பெற்றோர்களை அதிகம் பயமுறுத்தும் ஒரு வார்த்தை ப்ளூவேல் சேலஞ்ச். மொபைல் கேம்ஸுக்கு அடிமையாகிப்போன குழந்தை எங்கே ப்ளூவேல் சேலஞ்ச் என்று சொல்லி தற்கொலை செய்துவிடுமோ என்ற பயத்துடன் தான் இருக்கிறார்கள். நாளுக்கு நாள் ப்ளூவேல் சேலஞ்ச் என்ற பெயரில் தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

Reason for why youngsters are addicted to Blue Whale

2013 ஆம் ஆண்டு ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இணைய விளையாட்டில் ஐம்பது டாஸ்க் கொண்டது. இதன் கடைசி டாஸ்க்கில் தான் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஈர்க்கப்படும் இளையோர் :

ஈர்க்கப்படும் இளையோர் :

அதிகமாக இந்த விளையாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களாகத்தான் இருக்கிறார்கள். குழந்தைகள் மத்தியில் இது வேகமாக பரவி வருகிறது.

வாழ்வா சாவா என்ற போராட்டம் பொதுவாகவே இளைஞர்களை கவர்ந்துவிடும்.வாழ்க்கை குறித்த திட்டமிடல் எதுவும் இருக்காது என்பதால் மரணம் குறித்த பயமும் அவர்களுக்கு இருக்காது. அதனால் எளிதாக ஈர்க்கப்படுகிறார்கள்.

கெத்து காட்டலாம் :

கெத்து காட்டலாம் :

பிறரால் செய்ய முடியாத ஒரு விஷயத்தை என்னால் செய்ய முடிகிறது என்ற மமதையில் தான் இதனை தொடர்கிறார்கள். அந்த வயதில் சவால்களை எதிர்கொள்ளும் தைரியம் அவர்களுக்கு அதிகமாக இருக்கும் என்பதால் இதனை சர்வசாதரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

சேலஞ்ச் :

சேலஞ்ச் :

ப்ளூவேல் சேலஞ்ச் எடுத்தவுடனேயே கடினமான டாஸ்குகள் எல்லாம் இருக்காது. ஆரம்பத்தில் உங்கள் ஆர்வத்தை தூண்டுவது போலவும், உங்களைச் சுற்றியிருப்பவர்களை தவிர்த்து தனிமையில் உங்களை இருக்கச் செய்திடும். பிறரது எதிர்ப்பையும் மீறி இந்த விளையாட்டினை விளையாட ஆர்வமாக இருக்கிறீர்களா என்று கண்காணிக்கும்.

உங்களது விருப்பு வெறுப்புகளை தாண்டி சொல்லப்படும் டாஸ்க்குகளை எல்லாம் செய்கிறீர்களா என்று கண்காணிக்கும். இப்படி உங்களைச் சுற்றியிருக்கும் ஓர் வட்டத்தை முற்றிலும் அழித்த பிறகு உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கும்.

ஆள்மனதில் :

ஆள்மனதில் :

ப்ளூவேல் சேல்ஞ்சில் மிகவும் பிரபலமானது விடியற்காலையில் எழுந்து பேய்ப்படம் பார்க்க வேண்டும் என்பது. இது பேய்ப்படம் தவிர்த்து த்ரில்லர் படமாகவோ அல்லது பயங்கரமான சண்டைக்காட்சி நிறைந்த படமாகவோ இருக்கலாம்.

விடியற்காலையில் இப்படியான படங்களை அடிக்கடி பார்ப்பதால் அவை பார்ப்போரின் ஆள்மனதில் பதிந்திடும். அதன் தாக்கம் அவர்களது பழக்கவழக்கத்தில் மாற்றங்களை கொண்டுவரும். எப்போதும் கோபமாக இருப்பது, எரிந்து விழுவது, தனிமையில் இருக்க விரும்புவது போன்றவை ஏற்படும்.

யார் ஹீரோ :

யார் ஹீரோ :

ப்ளூவேல் கொடுக்கும் சேலஞ்சுகளை ஒவ்வொன்றாக நாம் செய்து முடித்து அவர்களுக்கு போட்டோ எடுத்து அனுப்ப வேண்டும் அதனை அவர்கள் அப்ரூவ் செய்தால் மட்டுமே அடுத்த சேலஞ்ச் வரும்.

ஆரம்பத்தில் எளிதான சேலஞ்சுகள் மூலம் இந்த விளையாட்டிற்கு அடிமைபடுத்தியபின்னர், சொல்லப்படுகிற டாஸ்க்குகளை செய்தே தீர வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கும்.

அதைவிட பிறரால் செய்ய முடியாது ஒரு விஷயத்தை நான் செய்கிறேன் என்ற எண்ணத்தில் தான் கையை அறுத்துக் கொள்வது, ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுப்பது போன்ற டாஸ்க்குகளைக் கூட எளிதாக செய்கிறார்கள்.

ரகசியம் :

ரகசியம் :

ப்ளூவேல் டாஸ்க்குகள் எல்லாம் இவர்களுக்கென்றே பிரத்யோகமாக வழங்கப்படுகிறது. எனக்காக கொடுக்கப்பட்ட வேலை ரகசியமாக எனக்காக சொல்லப்பட்டது என்ற எண்ணத்தில் அதீத ஆர்வமாக இருப்பார்கள்.

அதோடு ஆரம்பத்திலேயே அவர்களை சுற்றியிருக்கும் நட்பு வட்டத்தை குறைத்து தனிமையில் இருக்கச் செய்வது. அவர்களது அடிப்படை குணங்களையே மாற்றிவிடுவதால் இதிலிருந்து மீளமுடியாமல் தவிக்கிறார்கள்.

மிரட்டல் :

மிரட்டல் :

உயரமான கட்டிடங்களுக்குச் செல்வது,கையை அறுத்துக் கொள்வது போன்ற விபரீதமான டாஸ்க்குகள் வரும்போது சிலர் பயந்து பின்வாங்குவார்கள். அப்போது தான் இவர்கள் மிரட்டப்படுகிறார்கள்.

யாருக்கும் தெரியாமல் ஆரம்பித்த இந்த விஷயத்தை நடுவில் யாருக்காவது தெரிந்தால் தன்னை திட்டுவார்களோ அல்லது என்னால் பிறருக்கு பாதிப்பு உண்டாகுமோ என்கிற பயத்தில் இதனை தொடர்கிறார்கள்.

ஒரே வழி :

ஒரே வழி :

பாதி தூரம் சென்ற பிறகு இதிலிருந்து வெளியே வருவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகும்.

உங்களின் சுயத்தையே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியிருக்கும் போது இதிலிருந்து வெளியேற வேண்டும் என்று நினைப்பதில்லை மாறாக எப்டியாவது அவர்கள் சொல்லும் எல்லா சவால்களையும் ஏற்றுக் கொண்டு செய்து முடிக்க வேண்டும் என்று தான் தோன்றும்.

மகிழ்வான மரணம் :

மகிழ்வான மரணம் :

ப்ளூவேல் சேலஞ்ச் மேற்கொள்கிறவர்கள் இதனை மரணம், தற்கொலை என்று அணுகுவதில்லை.

மகிழ்ச்சி, வெற்றியின் அடையாளமாகத் தான் பார்க்கிறார்கள் அவர்கள். எனக்கு கொடுக்கப்பட்ட எல்லா சவால்களையும் நான் செய்து முடித்து விட்டேன் என்கிற நிறைவாகத்தான் பார்க்கிறார்கள் என்பதால் தற்கொலை செய்வதற்கு முன்னால் அவர்களால் தங்களை சுயபரிசோதனை செய்யக்கூட முடியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Reason for why youngsters are addicted to Blue Whale

Reason for why youngsters are addicted to Blue Whale
Desktop Bottom Promotion