இந்தியர்கள் எப்போதுமே கில்லாடிகள் என்பதை நிரூபிக்கும் டாப் - 20 படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

வல்லவனுக்கும் புல்லும் ஆயிதம்'ங்கிறது பழமொழியா மட்டும் பார்க்க முடியாது. அது இந்தியர்களோட இரத்தத்துல கலாந்த ஒண்ணு'ங்கிறத இந்த சிலபல படங்கள்ல பார்த்து, புரிந்து உலக மக்கள் தெரிஞ்சுப்பாங்க.

பேச்சுலர் ரூம் கலாட்டால இருந்து, பொண்டாட்டி வீட்டுல இல்லாத நேரத்துல கிச்சன்ல சாகசம் செய்யிற புருஷன் வரைக்கும். டீக்கடை காரன் பையன்ல இருந்து, என்ஜினியர் வரைக்கும்'னு பாரபட்சம் பார்க்காம நாங்கெல்லாம் யாரு தெரியும்'லனு சொல்றது மாதிரி பல அசால்ட்டு கண்டுபிடிப்புகள் பண்ணி இன்டர்நெட்ட அதிரவிட்டுருக்காங்க இந்த இந்தியன்ஸ்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வள்ளல் மகராசன்!

வள்ளல் மகராசன்!

மயிலுக்கு போர்வை தந்த பேகன், முல்லைக்கு தேர் கொடுத்த பாரிக்கு அடுத்து நம்மாளு தாங்க. யாருக்காவது இந்த ஐடியா தோணுமா. நமக்கு நன்றியுள்ள ஜீவனா இருக்க நாய்களுக்கு நன்றியுள்ள ஜீவனா இருந்திருக்காரு இந்த பெயர் தெரியாத ஜீவன். நல்லா இருந்த வள்ளல் மகராசா.

இருக்குறத வெச்சு...

இருக்குறத வெச்சு...

எப்பவுமே வீட்டுல, இருக்குறத விட்டுட்டு பறக்க ஆசைப்படாதே என அறிவுரை கூறுவார்கள். சிலர் சாபமாகவும் கூறுவார்கள். ஆனா, இருக்கிறது வெச்சு எப்படி பறக்குறதுன்னு ஆசைப்படுறது தான் புத்திசாலித்தனம்.

ஷவர் உடைஞ்சு போனா என்ன, இருக்கவே, இருக்கு மக்காத பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில். பத்து, பதினஞ்சு ஓட்டைய போட்டமா, சாவகாசமா குளிச்சமான்னு போவுறதவிட்டுட்டு.. அப்படிதானா பாஸ்...

நீயா, நானா...

நீயா, நானா...

கல்யாணம் பண்ண அப்பாவி ஜீவன்களுக்கு மட்டும் தான் இந்த அதிபுத்திசாலியோட திறமைய பாராட்ட தோணும். ஒரே வீட்டுல அம்மாவையும், பொண்டாட்டியும் வெச்சுட்டு ஒருநாள் நிம்மதியான தூக்கம் கிடைச்சிடுச்சுனா அதுதான் சார் சொர்க்கம்.

விநாயக பெருமானே நீதான் இந்த குழந்தைய எப்பவும் பத்திரமா பாத்துக்கணும்.

சொகுசு பர்த்!

சொகுசு பர்த்!

டிக்கெட் எடுக்காமலே ஸ்டேட்டுவிட்டு ஸ்டேட்டு போற நாங்க டிக்கெட் எடுத்த என்னென்ன அளப்பரிய கூட்டுவோம்ன்னு சொல்லவா வேண்டும். அன்ரிசர்வ்ல போறாமாதிரியா போறாங்க... ஏதோ டீலக்ஸ் ரிசார்ட்ல ஜமாயக்கிற மாதிரில டிராவல் பண்றாங்க....

ஃபிர்ட்ஜா? எதுக்கு!!!

ஃபிர்ட்ஜா? எதுக்கு!!!

ஏம்ப்பு... நாங்கெல்லாம் அயர்ன் பாக்ஸ்லயே நூடுல்ஸ் சமைச்சு சாப்ட்ட பரம்பரை. எங்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி. ஆனாவொன்னு... இத யாரோ அரபோதையில தான் பண்ணிருக்கனும். இந்த மாதிரியான சிந்தனைகள் எல்லாம் அந்த மாதிரியான தெய்வீக நிலையில இருக்கும் போதுதான் வரும்.

எப்படி நம்ம ஸ்ப்லிட்டு...

எப்படி நம்ம ஸ்ப்லிட்டு...

ஸ்ப்லிட் ஏ.சி'யா? இங்குட்டு பாருங்க மகாஜனங்களே இந்தியாவுல மட்டுமே காணப்படும் அதிசய ஸ்ப்லிட் ஏர் கூலர். ஐ.ஐ.டி, எம்.ஐ.டி'ல படிச்சா கூட இப்படி ஒரு அறிவு வருமான்னு தெரியல. என்ன ஒரு புத்திசாலித்தனம்.

தி கிரேட் மாம்!

தி கிரேட் மாம்!

சைக்கிள்ல கிட்ஸ் சீட் வைக்க தெரிஞ்ச உங்களுக்கு ஸ்கூட்டர்ல குட்டி சீட் வைக்க தெரியலையே... சும்மாவா சொன்னாங்க அம்மான்னா சும்மா இல்லடான்னு....

இன்டலிஜென்ஸ்!

இன்டலிஜென்ஸ்!

மைன்ஸ் + மைன்ஸ் = ப்ளஸ்னு கணக்கு பாடத்துல படிச்சிருப்பீங்க. அதோட சின்ன எக்சாம்பிள் பீஸ் தான் இந்த அறிவியல் கண்டுபிடிப்பு. இதோ லூசுத்தனம்'னோ, கஞ்சத்தனம்'னோ யாரும் தப்பா நினைச்சிட கூடாது.

ஆமாங்க! உதவாத வளைஞ்சு போன ஸ்பூன் ப்ளஸ் பிஞ்சு போன பெல்ட் ரெண்டையும் எப்படி சேர்த்து யூஸ்பில்லா ஆக்கியிருக்காறு நம்மாளு!

இதுக்கு பேரு தான்...

இதுக்கு பேரு தான்...

சைக்கிள் கேப்பில ஆட்டோ ஓட்டுற ஜனங்க சார். ட்ரைன்ல ல சைக்கில் கட்டி டிராவல் பண்றது எல்லாம் சாதாரணம். தட் அயம் எ மெக்கானிக், எனக்கு இதெல்லாம் சர்வசாதாரணம் மொமெண்ட். இந்தியாவுல பொறந்துட்டு இதுக்கூட செய்யாட்டி எப்படி.

ஆப்பிள்...

ஆப்பிள்...

ஐ-பாட், ஐ-பேட், ஐ-போன்.... அதெல்லாம் எதுக்கு. ஆப்பிள்ங்கிறது நாங்க சாப்பிட மட்டும் தான் யூஸ் பன்னுவோமே தவிர, அநாவசியமா செலவு பண்ண சூஸ் பண்ணமாட்டோம். பாட்டு கேட்க ரெண்டு காதும், லேப்டாப், ஹெட்போன் இருந்தா போதாதா என்ன?

வல்லவனின் புல்!

வல்லவனின் புல்!

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்ன்னு சொல்லிருப்பாங்க. இதோ! பிஞ்சுபோன ரப்பர் செருப்ப தூக்கி வீசிடனும்'னு இல்ல, இப்படியும் உபயோகப்படுத்தலாம்'னு படம் எடுத்திருக்கார் ஒரு கொத்தனார்!

விஞ்ஞானி!

விஞ்ஞானி!

டெங்குவ ஓடவிரட்ட யாரோ ஒரு அரசியல்வாதி அதிதீவிரமா யோசிச்சிட்டு இருந்தப்ப எடுத்த படம். 360டிகிரில எங்க இருந்து வேணாலும் கொசு வரலாம். எனவே, இப்படி கொசுவர்த்தி சுருள சுத்தி, சூத்தி ஏத்துனா எப்படி கொசு வீட்டுக்குள்ள வரும். இந்த விஞ்ஞானி பேரு தான் யாருன்னு தெரியல.

ஒருவேளை நாட்டுக்காக தன்னோட இலவச சேவையா இருக்கட்டும்னு போற போக்குல கொளுத்திப் போட்டுட்டு போயிட்டாருன்னு நினைக்கிறேன்.

சமத்து!

சமத்து!

இப்படி வீட்டுல பெத்தவங்களுக்கு செலவு வெக்காம அப்பா யூஸ் பண்ற அயர்ன் பாக்ஸ்ல ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் பண்ணிக்க கத்துக்குங்க எதிர்கால குத்துவிளக்குகளே...

எப்பூடி!

எப்பூடி!

அதாவது நாம ஒரு தப்பு பண்ணிட்டா, அத சமயோசிதமா யோசிச்சு எப்படி மறைக்கணும்னு கத்துக்கணும். (என்ன அந்த ஓட்டைய தான் மறைக்க முடியாது.

இதுக்கும் யூஸ் பண்ணலாமோ...

இதுக்கும் யூஸ் பண்ணலாமோ...

வண்டி ஓட்டும் போது ஹெல்மட் யூஸ் பண்ண சொன்னா ஒரு பயலும் மாட்டிக்கிறது இல்ல. அம்மா வெங்காயம் யூஸ் பண்ண சொன்னா மட்டும் உடனே எடுத்து மாட்டிக்கிறாங்க. பேசமா, இனிமேல் வண்டி ஓட்டும் போது வெங்காயம் உரிக்கணும்னு ஒரு புது சட்டம் போட்டுடலாமா?

அடடே!

அடடே!

வாழத்த வயதில்லை வணங்குகிறோம்'கிறது மாதிரி... இதப்பத்தி பேச வார்த்தை இல்லை வணங்குகிறோம்... எங்க இருந்து இப்படி எல்லாம் யோசனை வருதுன்னு தான் தெரியல...

பேச்சுலர் விஞ்ஞானி...

பேச்சுலர் விஞ்ஞானி...

இதெல்லாம் சாதாரணம், பேச்சுலர் வீட்டுல இதவிட கொடுமைகள் எக்கச்சக்கமா நடக்கும். சிக்கனத்துக்கு பெயர்போனவங்க நம்ம பேச்சுலர் பசங்க.

யார் பெற்ற மகனோ...

யார் பெற்ற மகனோ...

எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல, இவருக்கு ஒரு அவார்டு கொடுத்தே ஆகணும். வார்த்தை வெளிவராம அடைச்சுக்கிட்டு நிக்குது. எப்படி ராசா உனக்கு மட்டும்...

நேரம் பொன் போன்றது...

நேரம் பொன் போன்றது...

நேரம் பொன் போன்றதுன்னு சொல்லிருக்காங்க.. அந்த பொன்ன வாங்குறதுக்கு ஒரு நூறு ரூபாயாவது செலவு பண்ணிருக்கலாம். அந்த வளைஞ்சு போன முள்ளு கண்டிப்பா ஸ்லோவா தான் ஓடும்னு நினைக்கிறோம். பார்த்து பண்ணுங்க பாஸ்.

சி.சி.டி...

சி.சி.டி...

சி.சி.டி-க்கே சவால் மொமெண்ட்... இன்ஜினியரிங் படிச்சு வேலை கிடைக்காம சுத்திட்டு இருக்க நம்ம பய எவனோதான் இந்த டெக்னிக் கண்டுப்பிடிச்சிருக்கணும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Photo's That Proves Indian's Always Khiladi's!

Photo's That Proves Indian's Always Khiladi's!
Story first published: Tuesday, November 14, 2017, 12:10 [IST]