எதிர்ப்புகளையும் தாண்டி வைரலான ராணுவ பெண்களின் தாய்ப்பால் கொடுக்கும் ஃபோட்டோக்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

தாய்ப்பால் வாரம் கொண்டாடிக் கொண்டிருக்கும் இன்றை தினத்தில் தாய்ப்பால் கொடுப்பதைப் பற்றிய முக்கியத்துவங்களை வலியுறுத்தும் விதமாக புகைப்படக்கலைஞரின் போட்டோகள் பதில் சொல்கிறது.!

வேலைக்குச் செல்லும் பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது சிரமமானது என்று இதுவரை நினைத்திருந்தால் இந்த போட்டோக்களை பாருங்கள்.

புகைப்படக்கலைஞர் வனீசா சிம்மான்ஸ் என்பவர் ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு சேவையாற்றும் பெண்கள் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதை புகைப்படங்களாக பதிவு செய்திருக்கிறார். 

இவர் தாய்மை உணர்வை பிரதிபலிக்கூடிய ரியலஸ்டிக் போட்டோக்களை எடுப்பதில் தேர்ந்தவர். கர்ப்பம், குழந்தை பிறப்பு, போன்ற வாழ்வின் உன்னத தருணங்களை புகைப்படமெடுத்தவர் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக ஓர் ப்ராஜெட் செய்ய நினைத்தார்.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அசாதரணமான சாதாரணம் :

அசாதரணமான சாதாரணம் :

தாய்ப்பால் கொடுப்பது சாதரணமானது தான் என்பதை நிலைநாட்ட வாசிங்டன் சுற்றுலா சென்ற போது அங்கிருக்கும் தரைப்படை,விமானப்படை மற்றும் கடற்படை வீராங்கனைகள் ராணுவ சீருடையில் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கும் படங்களை பதிவு செய்தார்.

உதவி :

உதவி :

பெண்கள் தாய்ப்பால் கொடுக்க முன்வந்தாலும் அவர்களுக்கு தேவையான சப்போர்ட் இல்லாது சிரமத்தை சந்திப்பதாக சொல்கிறார் வனீசா.

விமர்சனங்கள் :

விமர்சனங்கள் :

புகைப்படமெடுத்து பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று நினைத்து தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்தவருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. பெரும்பாலானவை எதிர்மறையான விமர்சனங்களகத்தான் இருந்தது.

 சந்தர்ப்பம் :

சந்தர்ப்பம் :

ஒவ்வொருவரும் தாய்ப்பால் கொடுப்பது தொடர்பாக பகிர்ந்த கருத்துக்கள் ஓவ்வொன்றும் நெகிழ்வாய் இருந்தன என்று சொல்லும் வனீசா, குழந்தையின் நலனில் அக்கறை கொண்டு தாய்ப்பாலின் அவசியத்தை உணர்த்த இது ஓர் நல்ல சந்தர்ப்பம் என்கிறார்.

வீடும் நாடும் :

வீடும் நாடும் :

இந்தப் படங்கள் விசித்திரமானதோ அல்லது அதிசயமோ கிடையாது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை அதன் முக்கியத்துவத்தை மக்கள் மனதில் பதியும். குடும்பத்தையும் நாட்டையும் பாதுகாக்கும் வேலையில் ஈடுப்பட்டிருக்கும் பெண்களுக்கு ஒரு சபாஷ்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Photos of Military moms nursing their babies

Photos of Military moms nursing their babies
Story first published: Saturday, August 5, 2017, 13:36 [IST]