For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  நீங்கள் பயந்து பார்த்த இந்த பேய் படங்கள் எல்லாம் உண்மை சம்பவங்கள் என தெரியுமா?

  |

  பேய்ப்படங்கள் என்றாலே சிலருக்கு உதறல் எடுக்கும். இன்றைய சினிமாவில் பேய்ப்படங்கள் என்று சொன்னாலே ஹிட் என்று சொல்லலாம். பலரும் இன்றைக்கு பேய்ப்படங்களை விரும்பி பார்க்கிறார்கள். தமிழ்த் திரைப்படங்களை விட ஆங்கிலத் திரைப்படங்கள் தான் பயங்கரமான த்ரில்லருடன் இருக்கும்.

  படங்களில் பார்ப்பதை விட சிலர் தான் நேரில் பேயைப் பார்த்ததாகவும், அவர்களின் அனுபவத்தை விவரிக்கும் போதே நமக்கு உதறல் எடுக்கும். நிஜத்தில் பேய் இருக்கிறதா இல்லையா என்ற விவாதத்திற்குள் செல்லாமல் பேய்ப் பார்த்தவர்களின் அனுபவக் கதைகள் தெரியுமா.

  List of Horror movies inspired by real life incidents

  இந்த கதைகள் எல்லாம் சாதரணமான கதைகள் கிடையாது இவர்களின் அனுபவத்தை திரைப்படமாகவே எடுத்திருக்கிறார்கள். ஒரு அனுபவம் திரைப்படமாக இருக்க வேண்டுமானால் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அத்தனையும் அவ்வளவு பயங்கரமாக இருக்கிறது. நம்மை உறைய வைத்திடும் அந்த கதைகள் இடம்பெற்ற திரைப்படங்களை பார்க்கலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  A Nightmare on Elm Street :

  A Nightmare on Elm Street :

  லாஸ் ஏஞ்சல்ஸில் நடைப்பெற்ற உண்மை சம்பவம் தான் இந்த கதை. அங்கு வசிக்கும் சில அகதிகள் ஆழ்ந்த உறக்கத்தில் அப்படியே இறந்துவிடுவதாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன, இதனால் உறங்குவதற்கே பலரும் பயப்படுவதாகவும் செய்தியில் இருந்தது.

  இங்கிருந்து கதையைப் பிடித்தார் இத்திரைப்படத்தின் இயக்குநர். இந்த திரைப்படத்திற்கு இந்த சம்பவம் மட்டுமல்ல இன்னும் சில உண்மை சம்பவங்களும் திரைப்படத்தை மெருகேற்றியிருக்கிறது.

  மருத்துவர் ஒருவரின் மூன்றாவது மகனுக்கு 21 வயது. இவருக்கு தூங்குவதில் பிரச்சனை இருந்திருக்கிறது. வீட்டில் உள்ள அனைவரும் அவரை தூங்குமாறு வற்புறுத்த அந்த மூன்றாவது மகன் இல்லை தூங்க மாட்டேன் என்று அடம்பிடித்திருக்கிறார். தூங்காமல் பல நாட்கள் இருப்பது தொடர்ந்ததால் அவருக்குத் தெரியாமல் தூக்கமாத்திரை கலந்து கொடுத்தனர். அதனை சாப்பிட்ட மகன் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போதே அப்படியே தூங்கி விடுகிறார். பல நாட்கள் கழித்து மகன் நிம்மதியாக தூங்கட்டும்.

  அவன் தூங்கி விட்டான் இனி எல்லாப் பிரச்சனையும் முடிந்தது என்று நினைத்தனர்.

  இரவில் திடீரென்று அலறல் சத்தம் கேட்க எல்லாரும் மகன் படுத்திருந்த அறைக்குள் சென்ற பார்த்த போது அவர் மகன் இறந்து கிடந்திருக்கிறார்.

  Child's Play :

  Child's Play :

  பலருக்கும் பிடித்த படம் இது. இதுவும் ஓர் உண்மை சம்பவம் தான். 1909 ஆம் ஆண்டு பெயிண்ட்டர் ஒருவர் தன்னுடைய வேலையாள் ஒருவர் தன் வீட்டில் இருக்கும் பொம்மையில் செய்வினை வைத்துவிட்டதாகவும். அந்த பொம்மை அறைக்கு அறை நடந்து செல்வதாகவும், ஃபர்னிச்சர்களில் ஏறி இறங்கியதாகவும் தெரிவித்தார்.

  அதோடு தன்னிடம் பேசியதாகவும் தெரிவித்தார். 1974 ஆம் ஆண்டு அவர் இறந்த பிறகு வேறொரு குடும்பம் வந்தது அவர்களும் அந்த பொம்மையைப் பற்றி வரிசையாக புகார்களை அடுக்க இயக்குநருக்கு கதை ரெடி!

  The Amityville Horror :

  The Amityville Horror :

  இளம் குடும்பத்தினர் கொலை செய்யப்பட்ட வீட்டிற்கு தெரியாமல் சென்று விடுகிறார்கள் அங்கு அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் நிகழும் அமானுஷ்யங்களும் தான் கதை. இதே பெயரில் ஒரு புத்தகமும் வெளியாகியிருக்கிறது.

  1975 ஆம் ஆண்டு அவர்கள் செல்லவிருந்த வீட்டில் ரொனால்ட் டிஃபெடோ என்பவர் இந்த குடும்பத்தினர் செல்வதற்கு 13 மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்டார். ஏதோ விலங்குகளின் சத்தம் கேட்கிறது, விலங்குகள் நடமாட்டம் இருக்கிறது, சமையலறைக்கும் லிவ்விங் ஏரியாவிக்கும் பன்றி நடமாடுகிறது என்றெல்லாம் விவரித்தார்கள். தொடர்ந்து அங்கே இருக்க முடியாததால் வீட்டை காலி செய்து சென்று விட்டார்கள்.

  Psycho :

  Psycho :

  பிணங்களில் இருந்து திருடும் சைக்கோ குணம் கொண்டவரின் கதை இது. 1950 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்திருக்கிறது. பிணவறைத் திருடரான எட் கெயின் பெண்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்களை எல்லாம் குறிபார்த்து கொன்றிருக்கிறார்.

  மனிதனின் தோல்களை வைத்து மாஸ்க்,பெல்ட் எல்லாம் செய்து அணிந்து கொள்வாராம். அன்றைக்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டிருக்கிறது, இதனை ராபர்ட் ப்லோச் என்பவர் ஒரு நாவலாகவும் எழுதியிருக்கிறார். ஆனால் பிணவறை திருடன் என்ற கேரக்டரை மாற்றி சீரியல் கில்லர் ஆக்கிவிட்டார்.

  The Exorcist :

  The Exorcist :

  கிறிஸ்துவ பாதிரியார்கள் இருவர் இளம்பெண்ணை பேயோட்டிய கதை தான் இந்தப் படம்.

  இந்த கதையை எழுதியதும் திரைக்கதை எழுதியதும் வில்லியம் பீட்டர். இந்த கதை குறித்த செய்தி வாசிங்கடன் போஸ்ட் பத்திரிக்கையில் 1949 ஆம் ஆண்டு வெளியானது. ரேமெண்ட் ஜெ.பிஷப் என்பவரும் வால்டர் ஹெச்.ஹாலோரன் என்பவரும் தான் இரண்டு பாதிரியார்கள்.

  அப்போது அமெரிக்காவில் மூன்று சர்ச்களில் மட்டும் தான் பேயோட்டம் செய்யப்பட்டிருக்கிறது.

  The Girl Next Door:

  The Girl Next Door:

  உறவினர் பெண்ணை அத்தை டார்ச்சர் செய்யும் கதை.

  ஜேக் கெட்ச்சும் என்பவர் இதனை நாவலாக எழுதினார் . சில்வியா லிக்கின் என்ற பதினாறு வயதுப் பெண் 1965 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். சில்வியாவும் அவரது தங்கை ஜெனியும் அத்தை கெர்ட்ருட் பரமாரிப்பில் இருந்தனர்.

  குழந்தைகள் வீட்டில் பேஸ்மெண்ட்டில் போட்டு டார்ச்சர் செய்வது, மூளை பாதிக்கப்பட்டதாலும், உணவு கொடுக்காமலும் இறக்கும் வரை டார்ச்சர் செய்திருக்கின்றனர்.

  The Conjuring :

  The Conjuring :

  இந்தப் படம் இரண்டு அமானுஷ்ய ஆய்வாளர்கள் பற்றியது. ஈட் மற்றும் லோரைன் வாரென் என்ற இருவரும் அமானுஷ்யங்கள் குறித்து பல விதமான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

  1971 ஆம் ஆண்டு ரோடி என்ற பண்ணை வீட்டிற்குச் சென்ற குடும்பத்தினர் தங்கள் வீட்டில் ஏதேதோ அமானுஷ்யங்கள் நடப்பதாக இவர்களை அழைத்திருக்கிறார்கள். அங்கே சந்தித்த அமானுஷ்ய கதை தான் இது.

  Open Water :

  Open Water :

  சுற்றுலா சென்ற போது, இரு ஸ்கூபா டைவர்ஸ் சுறாவிடம் சிக்கி உயிரிழக்கும் கதை தான் இது.

  அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று ஸ்கூபா டைவிங் செல்ல கடலுக்குள் செல்கிறது. அப்போது டாம் மற்றும் ஈலன் இருவர் கடலில் தொலைந்து விடுகிறார்கள்.

  இரண்டு நாட்கள் தேடியதன் பலனாக டாமின் உடல் மட்டுமே கிடைக்கிறது.

  இதனை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான் ஓபன் வாட்டர்

  The Blob :

  The Blob :

  இது நம்மால் நம்பவே முடியாத கதை. 1950 ஆம் ஆண்டு இந்த செய்தி பத்திரிக்கைகளில் வந்திருக்கிறது.

  இதனை நான்கு போலீசார் நேரில் பார்த்ததாக விவரித்திருக்கிறார்கள். இன்றைய ஸ்டார் ஜெல்லி போல அது இருந்திருக்கிறது. மிகவும் பிரம்மாண்டமான பொருளாக இருந்ததாம். அதனை அருகில் சென்று பார்ப்பதற்குள் அது ஆவியாகி மறைந்து விட்டதாம்.

  அது என்ன பொருள் எங்கிருந்து வந்தது? எப்படி ஆவியானது என்று யாருக்கும் தெரியவில்லை இதனை மையமாக வைத்து ப்ளோப் என்ற திரைப்படம் வெளியானது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: inspirational insync pulse
  English summary

  List of Horror movies inspired by real life incidents

  List of Horror movies inspired by real life incidents
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more