உறக்கம் பற்றி நீங்கள் அறிந்திராத வினோத உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

நல்ல உறக்கம் என்பது ஒரு பெரிய வரப்பிரசாதம். அதிலும் ஆழ்ந்த உறக்கம், நமக்கு பிடித்த கனவு என்பது ஆஹா... அட்டகாசம். ஆனால், இது அவ்வளவு எளிதாக அனைவருக்கும் கிடைத்துவிடாது.

உடல் சோர்வு இருந்தால் எளிதில் உறங்கிவிடலாம். ஆனால், மன சோர்வு நமது உறக்கத்தை மெல்ல, மெல்ல தின்று தீர்த்துவிடும்.

Lesser Known Facts about Sleep!

உறக்கத்திற்கு மட்டுமல்ல, நமக்கு வரும் கனவிற்கும் நமது மனதில் புதைந்திருக்கும் நிகழ்வுகள் மற்றும் சூழல்களுக்கும் கூட இறுக்கமான பந்தம் இருக்கிறது.

நீங்கள் உறங்குவது போலவே, நீங்கள் காண்பது போலவே அனைவரும் உறங்குவதும் இல்லை, கனவு காண்பதும் இல்லை....

  • உலகில் 12% மக்களுக்கு அவர்களது கனவு கருப்பு, வெள்ளை வண்ணத்தில் தான் வருகிறதாம்.
  • பூனை தனது வாழ்நாளில் மூன்றில் இரண்டு பங்கை உறங்கியே கழிக்கிறது. இது பூனை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு நன்கு தெரியும். ஒட்டகச்சிவிங்கி ஒரு நாளுக்கு 1.9 மணிநேரம் மட்டுமே உறங்குகிறது. வவ்வால் ஒரு நாளுக்கு 19.9 மணிநேரம் உறங்குகிறது.
  • ஒருவேளை உங்கள் துணை வாய் பேச முடியாத நபராக இருந்தால், அவர் கனவிலும் சைகை பாஷையில் பேசுவது போன்ற கனவு தான். இது இயல்பானது தான். மிக அரிதாக ஆழ்மன எண்ணங்கள் அல்லது ஏதனும் நினைவுகளின் கலவைகள் காரணமாக அவர்கள் வாய் திறந்து பேசுவது போல கனவு வரலாம்.
  • Dysania என்பது உறக்கத்தின் ஒரு நிலை. இது சிலர் மத்தியில் மட்டும் காணப்படும். அதிகாலை, தூங்கி எழு மிகவும் கடினமாக உணர்வார்கள். தூக்கத்தில் இருந்து விழித்த பிறகும் கூட, படுக்கையில் படுத்தப்படியே நீண்ட நேரம் இருப்பார்கள்.
  • பொதுவாக அனைவரும் உறங்கும் போது ஒரே நிலையில் தான் படுத்திருப்பார்கள். அவ்வப்போது திரும்பிப்படுப்பது, உருண்டு செல்வது போன்ற அசைவுகள் கொடுக்கலாம். ஆனால், உறங்கும் போது சிலர் மத்தியில் வினோதமான அசைவுகள் காணப்படும் அதை Parasomnia என கூறுகிறார்கள். எழுந்து நடப்பது, கொலை செய்ய முயற்சிப்பது, கார் எடுத்து ஓட்ட முயல்வது என பல வேலைகளில் இவர்கள் உறங்கும் நிலையிலேயே செய்வார்கள்.
  • பிறவியிலேயே கண்பார்வையற்றவர்களுக்கும் கனவு வரும். ஆனால், அதில் உணர்ச்சி, சப்தம், முகரும் தன்மை போன்றவையாக இருக்கும். அவர்களுக்கு காட்சிகளாக கனவு வராது.
  • பெரும்பாலும் தூங்கி எழுந்த ஐந்து நிமிடத்தில், நீங்கள் கண்ட கனவில் 50% மறந்துவிடுவீர்கள். ஏறத்தாழ 90% நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள விரும்பியவை மறந்து போகும்.
  • ஒருவர் உறங்கும் நிலையை வைத்தே அவரது குணாதிசயங்களை பற்றி அறிந்துக் கொள்ள முடியும் என உறக்கம் பற்றி ஆய்வு செய்துள்ள நிபுணர்கள் கூறுகின்றனர்.
English summary

Lesser Known Facts about Sleep!

Lesser Known Facts about Sleep!
Story first published: Thursday, September 21, 2017, 17:50 [IST]