யோனியை வணங்கும் மக்கள் - காமாக்யா கோவிலின் விசித்திரங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இந்தியா, இந்துக்கள் வாழும் ஓர் பெரிய நாடு. இங்கே கோவில்களுக்கு பஞ்சமே இல்லை. சந்து, பொந்துகளில் இருந்து வானளாவிய உயரம் வரை என பல வித்தியாசமான கோவில்கள் இந்தியாவில் உண்டு.

ஆனால், அசாம் மாநிலத்தில் ஒரு கோவிலில் பெண் கடவுளின் பெண்ணுறுப்பை (யோனி) வணங்கி வருகின்றனர். இந்த கோவிலில் வேறு எந்த ஒரு சாமி சிலைகளும் இல்லை. காமாக்யா என அழைக்கப்படும் இந்த கோவில் விசித்திரத்தின் உச்சமாக காணப்படுகிறது.

இந்த கோவில் வரலாற்றின் பின்னணியில் ஒரு புராண கதையும் புதைந்திருக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சக்தி பீடங்கள்!

சக்தி பீடங்கள்!

இந்த காமாக்யா கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக காணப்படுகிறது. இந்து அசாமின் கவுகாத்தி நகரின் மேற்கில் இருக்கும் நீலாச்சல் குன்றில் அமைந்திருக்கிறது.

பத்தில் ஒன்று...

பத்தில் ஒன்று...

இங்கே தச மகா வித்யாதேவிகள் கோவில்கள் என பத்து கோவில்கள் இருக்கின்றன. இவற்றில் திரிபிரசுந்தரி, மாதங்கி, கமலா தேவி என்ற மூவரின் கோவில்கள் காமாக்யா கோவிலினுள்ளே அமைந்துள்ளனர். இதர ஏழு கோவில்கள் தனித்தனியாக அமைந்துள்ளன.

நரபலி!

நரபலி!

இந்த காமாக்யா கோவில் கவுகாத்தியிலிருந்து 12 கி.மீ தொலைவில் நீலாச்சல் என்ற மலையில் 700 அடி உயரத்தில் இருக்கிறது. இந்த கோயிலில் நரபலி கொடுக்கும் வழக்கங்கள் இருந்து வந்தன என்றும் கூறப்படுகிறது.

தாட்சாயிணி!

தாட்சாயிணி!

சக்தி பீடங்கள் என்பது சக்தியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களை குறிப்பவை ஆகும். இவற்றுள் சக்தியின் யோனி விழுந்த இடம் தான் இந்த காமாக்யா கோவில்.

வேறு பெயர்கள்!

வேறு பெயர்கள்!

காமாக்யா தேவியை திரிபுர பைரவி, அமிர்தா, காமா, காமதா, மங்கள கௌரி, காமரூபிணி, யோனிமண்டல வாஸினி, மஹாகாளி, மஹாமாயா, காமரூபா தேவி, காமேஸ்வரி, நீல பார்வதி என பல பெயர் கொண்டு புராண கதைகளில் அழைக்கப்படுகிறார்.

மேலும், இந்த காமாக்யா கோவில் அமைந்திருக்கம் தலத்தையும் காமரூபம், ஹரிக்ஷேத்திரம், பிரக்ஜோதிஷபுரம், காமகிரி, காமயோனி மண்டலம், மஹாமாயா ஸ்தானம், நீலாச்சலம், நீல் பர்வதம் என பல பெயர்களில் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

புராண கதை!

புராண கதை!

தந்தை தட்சனால் நடத்தப்பட்ட யாகத்தில் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி, அந்த யாகத்தை அழிக்க, அந்த யாகத்திலே விழுந்து எரிந்து போகிறார்.

இதை அறிந்த சிவன் ஓடோடி சென்று தன் மனைவியின் எரிந்த உடலை எடுத்து செல்வார். அப்போது உடல் பாகங்கள் துண்டுதுண்டாக பல இடங்களில் விழுந்தன.

சக்தியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களை தான் சக்தி பீடங்கள் என குறிப்பிடுகிறார்கள். அப்படி சக்தியின் யோனி விழுந்த இடம் தான் இந்த காமாக்யா கோவில்.

பாண்டவர்கள்!

பாண்டவர்கள்!

பாண்டவர்கள் காமாக்யா தேவியை வழிப்பட்டதாக, மகாபாரதத்தின் விராட மற்றும் பீஷ்ம பருவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மகாபாரதத்தில் அர்ஜுனனும், யுதிஷ்டிரரும் இங்கே பிரார்த்தனை செய்ததாக கூறப்படுகிறது.

கட்டிடம்!

கட்டிடம்!

ஏறத்தாழ பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோவில் இது. காமாக்யா கோவில் 11 நூற்றாண்டில், ஓர் போரில் உண்மையான காமாக்யா கோவில் அழிக்கப்பட்டது என்றும் பிறகு 16ம் நூற்றாண்டில் பீகாரின் அரசர் நர நாராயணா என்பவர் மீண்டும் புதிப்பித்து கட்டினார் என்றும் கூறப்படுகிறது.

திருவிழாக்கள்!

திருவிழாக்கள்!

காமாக்யா கோவிலில் அம்புபச்சி மேளா, துர்க்கா பூஜா, மானஷா பூஜா போன்ற பெயர்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kamakhya Temple, Where People Worships The Private Part of Goddess!

Kamakhya Temple, Where People Worships The Private Part of Goddess!