சர்வதேச வணிக அரசியலில் வீழ்ந்த இந்தியா எனும் காட்டு யானை!

Posted By:
Subscribe to Boldsky

டூத்பேஸ்ட்-க்காக கரியும், வேப்பங்குச்சியும் இழந்தோம். பல் வலி, ஈறு வலி பெற்றோம். கடலை மாவு மறந்தோம், சரும நோய்கள் பெற்றோம், அழகு சாதனா பொருட்கள் பெண்களுக்கு மார்பக புற்று நோய் பரிசளித்தது.

மாட்டு சாணம் போய், ஃபெனாயில் வந்தது வீட்டுக்குள் கிருமிகள் பெருகின. தேங்காய் எண்ணெய் தவிர்த்து, கிரீம்கள் பயன்படுத்தினோம் முடி உதிர்வு அதிகரித்தது.

இதோ இப்படி தான் சர்வதேச வணிக அரசியலில் வீழ்ந்தது இந்தியா எனும் காட்டு யானை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
30 வருடங்களுக்கு முன்னர் இவை இல்லையே!

30 வருடங்களுக்கு முன்னர் இவை இல்லையே!

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னர் ஆண்மை குறைபாடு, கருப்பை வலுவின்மை, வாயுத்தொல்லை, கண்பார்வை குறைபாடு, ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் தனித்தனி பிரத்தியோக மருத்துவமனை இல்லையே? இப்போதே மட்டும் எப்படி? இது நேற்று பெய்த மழையில், இன்று முளைத்த காளான் அல்ல என்பது மட்டும் நிதர்சனம்.

ஆரோக்கியத்தை அழித்த உணவுகள்!

ஆரோக்கியத்தை அழித்த உணவுகள்!

பாக்கெட் பால், துரித உணவுகள், பதப்படுத்திய உணவுகள், வெள்ளை சர்க்கரை என மெல்ல, மெல்ல மரபணு தாக்கம் உண்டாக்கி, ஆரோக்கியத்தை சீரழித்த விஷயங்களை பல ஆண்டுகளாக உட்கொண்டு வந்ததன் விளைவு தான் இவை யாவும்.

பால் மார்கெட் எங்கே?

பால் மார்கெட் எங்கே?

எனக்கு விவரம் அறிந்த வயதில் எங்கள் வீட்டருகே பால் மார்கெட் என்ற இடம் இருந்தது. அங்கு பசுக்கள் வைத்திருப்பவர்கள் ஓர் பெரிய கேனில் பசும்பால் எடுத்து வந்து விற்பார்கள். நான் எனது தந்தையுடன் வீட்டில் இருந்து ஒரு பாத்திரம் எடுத்து சென்று தினமும் காலை 6 மணி வாக்கில் வாங்கி வருவோம்.

பால் காரர் மாயம்!

பால் காரர் மாயம்!

சிலர் நேரடியாக வீட்டுக்கே சைக்கிள், டி.வி.எஸ் 50 போன்ற வாகனங்களில் வந்து வாரத்திற்கு, மாதத்திற்கு ஒரு முறை என பணம் வசூலித்து பால் ஊற்றி விற்று செல்வார்கள். அதில் கால் லிட்டர், அரை லிட்டர் சரியாக இருக்காது. ஆனால், நிச்சயம் அளவுக்கு அதிகமாக சற்று கொசுறு பால் ஊற்றிவிட்டு தான் செல்வார் அந்த பால்காரர்.

திடீரென முளைத்த காளான்!

திடீரென முளைத்த காளான்!

திடீரென்று தான் முளைத்து பாக்கெட் பால் வியாபாரம். அரை லிட்டர் வாங்கினால், கால் லிட்டர் இலவசம், ஒரு லிட்டர் வாங்கினால் அரை லிட்டர் இலவசம் என வீடுகளில் உட்புக ஆரம்பித்தது. நாமும், இலவசம் கண்டு ஏமார்ந்து போனோம். நல்லதை மறந்தோம், பிறகு பாத்திரத்தில் பால் வாங்குவதே ஏதோ கவுரவ குறைச்சல் என்பது போன்ற பிம்பம் உண்டானது.

காலம் கடந்தோம்!

காலம் கடந்தோம்!

வருடங்கள் சில ஓடின, பால் மார்கெட் காலி ஆனது. வீட்டிற்கு வந்து பால் ஊற்றுபவர் எண்ணிக்கை குறைந்தது. இலவசமும் நீங்கியது, பால் விலை மெல்லே, மெல்ல உயர்ந்து கொண்டே போனது. லிட்டர் ரூ.5 - ரூ 7 க்கு வாங்கிய நிலை காணாமல் போனது.

வர்த்தக அரசியல்!

வர்த்தக அரசியல்!

முன்னர் அனைவரும் உழைத்தனர், அனைவரும் வாழ்ந்தனர். உலக வர்த்தகம் என்ற ஒன்று தலைத்தூக்கிய பிறகு, விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருப்பவர்களிடம் உலகின் 90% செல்வம் சிறைப்பட்டு கிடைக்கிறது. இது ஆய்வொன்று கூறும் தகவல்.

கண்ணாடி மாளிகைகள்!

கண்ணாடி மாளிகைகள்!

மால் எனும் கண்ணாடி பெட்டிக்குள் காய்கறி, இறைச்சி, அரிசி என எல்லாம் ஓரிடம் கிடங்கில் சேர்ந்து, சாலையோர வியாபாரிகள், உழவர் சந்தை வியாபாரிகள் போன்றவர்களின் அடுப்பை உடைத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

International Market and Fall of Indian Small Business Merchants

International Market and Fall of Indian Small Business Merchants
Story first published: Friday, January 20, 2017, 15:17 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter