இந்தியாவில் மட்டுமே காதலர் தினத்தன்று இந்த கூத்து நடக்கும்!

Posted By:
Subscribe to Boldsky

இந்தியா பல மொழி, கலாச்சாரம், மத, ஜாதிகளை கொண்டுள்ள நாடு. ஆனால், கிரிக்கெட், காதல் என்ற இரண்டு தான் நமது தேசத்தை ஒன்றிணைந்து வைக்கும் தண்டவாளங்கள். இன்று காதலர் தினம் என்பதால் நாம் காதலை பற்றி பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

Indian's Can't Celebrate Their Valentine day, Because of these reasons

Image Source

நமது இந்திய திருநாட்டில் இதர 364 நாட்களும் காதலர்கள் பார்க், பீச், திரையரங்கு போன்ற இடங்களில் என்ன செய்தாலும் கண்டுக்கொள்ளாத நம்மவர்கள், இன்றைய தினம் ஒருவர் ப்ரபோஸ் நிற சட்டை அணிந்து சென்றால் கூட உடனே "என்ன லவ்வா? எத்தன நாளா?" என கேள்வி கனைகளை தொடுத்து, நோண்டி நொங்கு எடுத்துவிடுவார்கள்.

மேலும், ஒருசில காரணங்களால் இந்தியாவில் காதலர் தினத்தை காதலர் சுதந்திரமாக கொண்டாட முடியாமலும் போகும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

காரணம் #1

இந்தியாவில் தவறு செய்து தப்பிக்க வேண்டும் என்றால் பெரிய தவறு செய்ய வேண்டும். சின்ன, சின்ன தவறு செய்தால் உடனே அரஸ்ட் தான். லஞ்சம் கூட கோடிகளில் வாங்கினால் தப்பித்து கொள்ளலாம். ஆனால், நூறுகளில் வாங்கினால் பல ஆண்டு சிறைத் தண்டனை அளித்து விடுவார்கள்.

இப்போ எதுக்கு இதுன்னு கேட்குறீங்களா? ஏன்னா காதலர் தினத்துல போலீஸ் காதலர்களை கைது செய்த சம்பவங்களும் இந்தியாவில் நடந்துள்ளது.

காரணம் #2

காரணம் #2

இந்தியாவில் சில அமைப்புகள் காதலர் தினத்தன்று காதலர்களை சுதந்திரமாக உலாவ விடாது. தாலி, திருமண சான்றிதழ் கேட்டு நச்சரிக்கும்.

காரணம் #3

காரணம் #3

இந்தியாவின் சில பகுதிகளில் காதலர் தினத்தன்று ஜோடியாக சாலையில், பூங்காக்களில் சுற்றுபவர்களுக்கு தடியடி தண்டனை இலவசமாக கொடுக்கப்படும். கொடுமையாக அடித்து பிரித்து விட்டு செல்வார்கள். அவங்க யாருன்னு நாம சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்ல.

காரணம் #4

காரணம் #4

நல்ல காதலை விட, கள்ளக் காதல் ஜோடிகள் அதிகம் புதர்களில் அமர்ந்திருக்கும்.

காரணம் #5

காரணம் #5

எத்தனை வருட காதலாக இருந்தாலும், இந்த ஒரு நாள் கல்லூரி, அலுவலகத்தில் எதை சொல்லி லீவ் போட்டு செல்வது என்ற குழப்பம் தீரவே தீராது.

காரணம் #6

காரணம் #6

காதலர் தினத்தன்று தெரியாத்தனமாக தவறான நிறத்தில் உடை அணிந்து சென்றுவிட்டால் உடனே அதற்கு ஒரு கதை கட்டி திரைக்கதை வசனம் எழுத ஒரு க்ரூப் நம்மை சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும். பெரும்பாலும் அந்த க்ரூப்பை நண்பர்கள் என அழைக்கிறார்கள். ஹிஹிஹி!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indian's Can't Celebrate Their Valentine day, Because of these reasons

Indian's Can't Celebrate Their Valentine day, Because of these reasons
Subscribe Newsletter