For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பிரபலங்களின் தாடி, மீசை - கிளீன் ஷேவ், மாறுபட்ட புகைப்படத் தொகுப்பு!

நீங்கள் அறிந்த பிரபலங்களின் தாடி, மீசை - கிளீன் ஷேவ் புகைப்படத் தொகுப்பு!

|

கற்காலத்தில் தாடி மீசையுடன் திரிந்த கூட்டம் தான். நாகரீகம் தான் அதை முழுக்க வழித்தெடுத்து மொழுக்கென்று ஆக்கிவிட்டது. ஆயினும், நமது தென்னிந்தியாவில் முக்கியமாக தமிழ்நாட்டில் மீசை வைத்திருந்தால் தான் ஆம்பளை என்ற ஒரு வீராப்பு, கௌரவம் என்ற வழக்கம் இருக்கிறது.

குறிப்பிட்ட வயதுக்கு பிறகு மீசை வளரவில்லை எனில், அந்த ஆண் கேலிக்கு ஆளாவதை தவிர்க்க முடியாது. இதற்காகவே வெறும் ரேசரை எடுத்து முகத்தை ராவி எடுத்துவிடுவார்கள் பதின்வயது ஆண்கள்.

மீசை ஆண்களின் வீரத்தின் அடையாளம் என்பது காலம். மீசை மற்றும் தாடி தான் மாடர்ன் கல்ச்சர். வித்தியாச, வித்தியாசமாக தாடி, மீசை வைத்திருப்பது ஒரு ஸ்டைல்.

மீசை ஆண்களுக்கு ஒரு முதிர்ச்சியான தோற்றத்தையும் தரவல்லது. நீங்க மீசையுடனே பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஆண், திடீரென கிளீன் ஷேவ் செய்து வந்தால், முதல் பார்வையில் ஏதோ வேறு நபரை காண்பது போல இருக்கும். ஐந்தாறு வயது குறைந்தது போல இருக்கும்.

இப்படி மீசையும், தாடியும், வீரம், ஆண்மை, ஸ்டைல், இளமை என ஆண்களின் வாழ்வில் பெரும் அங்கம் பெற்றிருக்கிறது. உங்களுக்கு பிடித்த பிரபலங்கள் ஒரு காலத்தில் மீசையுடன், ஒரு காலத்தில் மீசை இல்லாமலும் இருந்துள்ளனர். அவர்களது மீசை, தாடி இன்-அவுட் புகைப்படத் தொகுப்பு.., ஒருசில சுவாரஸ்யமான மீசை, தாடி தகவல்களுடன்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமீர்கான்

அமீர்கான்

பொதுவாக மீசை தனது எடையில் 20% அளவு நீரை உறிஞ்சி வைத்துக் கொள்ளும் திறன் கொண்டுள்ளதாம்.

அஜித்குமார்

அஜித்குமார்

உங்களிடம் 2.5 இலட்ச ரூபாய் இருந்தால், இந்தியாவில் மீசை டிரான்ஸ்பிளாண்ட் சிகிச்சை செய்துக் கொள்ளலாம்.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

கார்ட்ஸ் விளையாட்டில் ஹார்டின் ராஜாவுக்கு மட்டும் மீசை இருக்காது.

அமிதாப்பச்சன்

அமிதாப்பச்சன்

மீசை வைத்துள்ள ஆண் ஒருவர், சராசரியாக ஒரு நாளுக்கு 750 தடவையாவது தனது தாடி, மீசையை தொட்டுப் பார்த்துக் கொள்வாராம்.

தனுஷ்

தனுஷ்

பல ஆய்வுகளின் மூலம், பெண்கள் மீசை வைத்த ஆண்களின் மீது அதிக ஈர்ப்பு கொள்கிறார்கள் என தெரியவந்துள்ளது.

கமல்

கமல்

கருவில் வளரும் போதே சிசுவிற்கு மீசை முளைக்குமாம். அதை சிசு தின்றுவிடும் என்று கூறப்படுகிறது. (மெய்யாலுமா?!)

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர்

ஆண்களிதில் மீசையை Moustache என்பார்கள். இந்த வார்த்தை கிரேக்க வார்த்தையான Mustak என்பதில் இருந்து மருவியது. இதற்கு பொருள், மேல் உதடு என்பதாகும்.

மோடி

மோடி

மீசை குளிர் காலத்தை விட வெயில் காலத்தில் மிக வேகமாக வளர்கிறது என சில ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ரஜினி

ரஜினி

சராசரியாக ஆண்களின் முகத்தில் 10,000 - 20,000 முடிகள் இருக்குமாம். இதில் மீசையில் மட்டுமே 600 முடிகள் இருக்கின்றன.

சல்மான்

சல்மான்

அமெரிக்க கப்பல் படையில் அரை அங்குலத்திற்கு அதிகமாக மீசை வளர்க்க கூடாது என்ற நிபந்தனை இருக்கிறது.

சத்தியராஜ்

சத்தியராஜ்

சராசரியாக மீசை ஒரு நாளுக்கு 0.014 என்ற அங்குலம் உயரம் வளருமாம். இந்த கணக்கின்படி வருடத்திற்கு 5 - 6 அங்குலம் வரை மீசை வளர வாய்ப்புகள் உண்டு.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

மத்திய பிரதேசத்தில் காவலர்கள் மீசை வளர்க்க அரசாங்கம் பணம் தருகிறது என்ற தகவல் உள்ளது.

சிவாஜி

சிவாஜி

விக்டோரியன் சகாப்தத்தில் மீசை உள்ள ஆண்கள் தேநீர் பருக தனி தேநீர் குவளைகள் பயன்படுத்தி வந்துள்ளனர். அந்த குவளைகளில் பருகும் போது, மீசையில் தேநீர் வழியாது.

சிம்பு

சிம்பு

அமெரிக்காவில் இருக்கும் யூரேகா என்ற பகுதியில், மீசை வைத்திருக்கும் ஆண்கள், பெண்களை முத்தமிட கூடாது என்ற சட்டம் இருந்ததாம்.

விஜய்

விஜய்

தாடி, மீசை சரும புற்றுநோய் ஏற்படாமல் இருக்க உதவுகிறது என ஆஸ்திரேலியாவின் தெற்கு குயின்ஸ்லாந்து பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இது 90 - 95% UV கதிர் சருமத்தை தாக்காமல் பாதுகாக்கிறதாம்.

விக்ரம்

விக்ரம்

ராம் சிங் சௌஹன் என்ற இந்திய நீளமான மீசை வைத்துள்ள சாதனை படைத்துள்ளார். இவரது மீசையில் நீளம் 14 அடி ஆகும். இவர் 1982ல் இருந்து மீசை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

No Shave November Special: Indian Celebrities With And Without Mustache, Beard!

No Shave November Special: Indian Celebrities With And Without Mustache, Beard!
Desktop Bottom Promotion