இந்திய பணத்தாள்களின் பின்னணி படங்களில் மறைந்திருக்கும் தகவல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பணம்! இன்றைய உலகில் பலரது முகத்தில் தவழும் சந்தோசத்திற்கும், கண்களில் வடியும் கண்ணீருக்கும்... மனதில் நொறுங்கி கிடைக்கும் கனவுகளுக்கும் பெரும் காரணியாக திகழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரே கருவி!

ஒவ்வொரு மாதமும் முதல் நாள் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள், மதத்தின் கடைசி வேலை நாளில் ஊதியம் வாங்கும் ஐ.டி வாசிகள், எப்போது வரும் என்றே தெரியாமல் காத்துக்கிடக்கும் தின கூலிகள் என பலதரப்பட்ட மக்களுக்கும் அவரவர் கையில் தவழும் பணத்தாள் பின்னை அச்சிடிடப்பட்டிருக்கும் படங்களின் தகவல் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நம்மில் சிலர் அதை பற்றி அறிந்துக் கொள்ள கூட சிந்தித்திருக்க மாட்டோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1 ரூபாய் தாள்!

1 ரூபாய் தாள்!

ஒரு ரூபாய் தாளில் இருக்கும் எண்ணெய் கிணறு தொழில்துறை வளர்ச்சியை முன்னேற்றத்தை குறிக்கின்றன.

2 ரூபாய் தாள்!

2 ரூபாய் தாள்!

இரண்டு ரூபாய் தாளில் இருக்கும் செயற்கை கொள் மிக பிரபலமான ஆர்யபட்டா செயற்கை கொள் படமாகும். இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை குறிக்கிறது.

5 ரூபாய் தாள்!

5 ரூபாய் தாள்!

ஐந்து ரூபாய் தாளில் இருக்கும் டிராக்டர் மற்றும் விவசாய நிலமானது விவசாயத்தை குறிக்கிறது.

10 ரூபாய் தாள்!

10 ரூபாய் தாள்!

பத்து ரூபாய் தாளில் இருக்கும் பல விலங்கினங்கள் இந்திய நாட்டின் பல்லுயிர் வளத்தை காட்டுகிறது.

20 ரூபாய் தாள்!

20 ரூபாய் தாள்!

இருபது ரூபாய் தாளில் இருக்கும் பனை மரங்கள், மவுண்ட் ஹாரிட் லைட் ஹவுஸ், போர்ட் பிளேரிலிருந்து தெரியும் காட்சியாகும்.

50 ரூபாய் தாள்!

50 ரூபாய் தாள்!

ஐம்பது ரூபாய் தாளில் இருப்பது இந்திய பாராளுமன்ற வளாக படமாகும். இது இந்திய ஜனநாயகத்தை குறிக்கிறது.

100 ரூபாய் தாள்!

100 ரூபாய் தாள்!

நூறு ரூபாய் தாளில் இருக்கும் படம் மவுன்ட் கஞ்சன்ஜங்கா. இது இந்தியாவின் உயரிய மலை சிகரம் ஆகும்.

பழைய 500 ரூபாய் தாள்!

பழைய 500 ரூபாய் தாள்!

பழைய ஐநூறு ரூபாய் தாளில் இருக்கும் படம் காந்தி ஜி உப்பு சத்தியாகிரகம் செய்த போது சென்ற தண்டி யாத்திரை படமாகும்.

புது 500 ரூபாய் தாள்!

புது 500 ரூபாய் தாள்!

புது ஐநூறு ரூபாய் தாளில் இருப்பது ரெட் ஃபோர்ட் படமாகும்.

பழைய 1000 ரூபாய் தாள்!

பழைய 1000 ரூபாய் தாள்!

பழைய ஆயிரம் ரூபாய் தாளில் இருக்கும் படம் இந்திய பொருளாதாரத்தை முழுக்க காண்பிக்கும் குறியீடு.

2000 ரூபாய் தாள்!

2000 ரூபாய் தாள்!

புதிய இரண்டாயிரம் ரூபாய் தாளில் இருப்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் இலட்சினையாக திகழும் சந்திராயன் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What These Images On The Backside Of Indian Currency Notes Signify

What These Images On The Backside Of Indian Currency Notes Signify.
Story first published: Tuesday, June 27, 2017, 19:00 [IST]