வெறும் ரூ.46 கோடிக்கு விலைபோன ஒரு நாட்டை பற்றி தெரியுமா?

Subscribe to Boldsky

அலாஸ்கா அமெரிக்காவில் இருக்கும் மிகப்பெரிய மாகானங்களில் ஒன்று. 19ம் நூற்றாண்டு வரை இந்த மாகாணம் இரண்டாம் அலக்சாண்டரின் கைகளில் தான் இருந்தது. அமெரிக்காவின் இதர 19 மாகாணங்களை தனது எல்லைக்குள் அடக்கிக் கொள்ளும் அளவிற்கு மிகப்பெரிய பகுதி.

இங்குள்ள மக்களில் 80% உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். இதை எண்ணி நீங்கள் மகிழ்வீர் எனில், இன்னொன்றையும் அறிந்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவிலேயே அதிகமாக கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கும் இடமும் இது தான்.

Facts To Know About Alaska!

Image Credit: TravelAlaska

இந்திய மதிப்பில் வெறும் 46 கோடி விலைப்போன நாடு என்ற சோகமான பெருமை தாங்கி நிற்கிறது அலாஸ்கா. இனி, அலாஸ்கா பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான உண்மைகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
7.2 மில்லியன் டாலர்!

7.2 மில்லியன் டாலர்!

1867ல் வெறும் 7.2 மில்லியன் டாலர் கொடுத்து ரஷ்யாவிடம் இருந்து அலாஸ்காவை அலேக்காக வாங்கியது அமெரிக்கா. அம்பானியின் வீட்டின் மதிப்புடன் ஒப்பிடுகையில் இது மூவாயிரம் மடங்கு குறைவாகும்.

இரண்டாம் அலக்சாண்டர் தான் அலாஸ்காவை அமெரிக்காவிற்கு விற்றார் என்றும். இது அடுத்த போர் மூண்டால், பிரிட்டிஷின் கைகளுக்கு போய்விடக் கூடாது என்றும் இதை விற்றுள்ளார்.

75 மடங்கு!

75 மடங்கு!

அலாஸ்கா மிகவும் பெரிய நிலப்பரப்பு கொண்டுள்ள பகுதியாகும். நியூஜெர்ஸியுடன் ஒப்பிடுகையில் 75 மடங்கு பெரிய பகுதி இது. ஆதாவது, 75 நியூ ஜெர்ஸி பகுதிகளை இது உள்ளடங்கும் நிலப்பரப்பு கொண்டுள்ளது.

Image Credit: thinglink

பூனை!

பூனை!

அலாஸ்காவில் இருக்கும் டாகீட்னா எனும் பகுதிக்கு 15 வருடங்களுக்கு பூனை ஒன்று மேயராக இருந்துவந்தது.

ஜெர்மனி!

ஜெர்மனி!

அமெரிக்காவில் இருக்கும் பெரிய நாடு அலாஸ்காவில் தான் இருக்கிறது. நிலப்பரப்பு கொண்டு ஒப்பிட்டு பார்த்தல், இது ஜெர்மனியின் நிலப்பரப்புடன் ஒத்துப்போகும்.

பிட்சா!

பிட்சா!

அலாஸ்காவில் பிட்சா பிளேஸ் என ஒரு இடம் இருக்கிறது. இங்கே பிட்சாவை பிளேன்கள் மூலமாக டெலிவரி செய்கிறார்கள்.

பூகம்பம்!

பூகம்பம்!

அமெரிக்காவில் உண்டான பெரிய பூகம்பம் பதிவானது அலாஸ்காவில் தான். அலாஸ்காவில் 1964ல் 9.4 என்ற ரிக்டர் அளவில் அந்த பூகம்பம் பதிவாகியிருந்தது. அன்று ஏற்பட்ட மிகப்பெரிய சப்தம் மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

பாலைவனம்!

பாலைவனம்!

அலாஸ்காவில் மணல் குன்றுகள் உறைய பாலைவனம் ஒன்று இருக்கிறது. இந்த பாலைவனத்தில் இருக்கும் மனம் குண்டுகளின் உயரம் ஏறத்தாழ 150 அடிகும் (45 மீட்டர்).

ஆயில்!

ஆயில்!

அலாஸ்காவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அந்நாட்டின் எண்ணெய் வருவாய் பகிர்ந்து தரப்படுகிறது. அலாஸ்கன் ஆயில் வருவாய் மூலம் கடந்த 2008ம் ஆண்டு அந்நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் 2069 டாலர்கள் பெற்றனர் என கூறப்படுகிறது.

கஞ்சா!

கஞ்சா!

அவரவர் வீட்டில் தனிமையில் கஞ்சா பயன்படுத்த அலாஸ்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1975 முதல் இன்றுவரை கஞ்சா பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போர்!

இரண்டாம் உலகப்போர்!

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் அலாஸ்கா மீது போர் துவக்கியது. இந்த போரின் போது பேர்ல் ஹார்பர் போரில் இறந்தவர்களை விட அதிக அமெரிக்கர்கள் உயிர்பலி எண்ணிக்கை பதிவாகியிருந்தது.

எரிமலை!

எரிமலை!

ஏப்ரல் 1, 1974ல் அலாஸ்காவில் இருக்கும் எட்ஜ்கும்பே எனும் எரிமலையில் இருந்து கரும்புகை கிளம்பியது. அங்கிருந்து கோஸ்ட் விமான காவலாளி சென்று அங்கே பார்த்த போது 70க்கும் மேற்பட்ட டயர்களை எரித்துக் கொண்டிருந்தது அறியப்பட்டது. அப்போது ஸ்னோவில் ஏப்ரல் ஃபூல் என வரைந்து கேலி செய்தனர்.

சாண்டா க்ளாஸ்!

சாண்டா க்ளாஸ்!

2015 ஒரு ஆண் தனக்கு தானே லீகலாக சாண்டா க்ளாஸ் என பெயரிட்டுக் கொண்டார். இவரை நார்த் போல் நகரின் சிட்டி கவுன்சிலில் தேர்வு செய்தனர்.

சென்ட்ரல் பார்க்!

சென்ட்ரல் பார்க்!

ஒட்டுமொத்த அலாஸ்காவின் விலை, நியூயார்க்கில் இருக்கும் சென்ட்ரல் பார்க்கின் விலையைவிட குறைவானது ஆகும். நியூயார்க் சென்ட்ரல் பார்க் உலகளவில் பெரும் பிரபலமான இடமாகும்.

கற்பழிப்பு!

கற்பழிப்பு!

அமெரிக்காவில் அதிகமான கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கும் இடம் என்ற பட்டியலில் அதிக ரேட்டிங்குடன் முதல் இடத்தில் உள்ளது அலாஸ்கா.

விளம்பர பதாகைகள்!

விளம்பர பதாகைகள்!

அலாஸ்கா,ஹவாய், வெர்மான்ட், மைனே போன்ற இடங்கள் விளம்பர பதாகைகள் வைக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடலோரம்!

கடலோரம்!

அமெரிக்காவிலேயே பெரும் கடலோர பகுதி கொண்டுள்ள இடம் அலாஸ்கா தான். அலாஸ்காவில் கடலோர பகுதியின் பவுண்டரி நீளம் மட்டுமே 1,538 மைல்கள் ஆகும். ஒட்டுமொத்தமாக கணக்கிட்டு பார்த்தல் 6,640

மைல் அளவு கொண்டுள்ளது.

தட்பவெப்பம்!

தட்பவெப்பம்!

அமெரிக்காவின் இரண்டு மாகாணங்களில் மட்டும் தான் வெட்பம் நூறு ஃபாரன்ஹீட் எட்டியது இல்லை. அது அலாஸ்கா மற்றும் ஹவாய்!

மற்ற மாகாணங்கள்!

மற்ற மாகாணங்கள்!

அலாஸ்கா தான் அமெரிக்காவின் பெரிய மாகாணம். அமெரிக்காவின் 19 மாகாணங்களை தன் எல்லைக்குள் அடக்கிக் கொள்ளும் திறன் கொண்டுள்ளது அலாஸ்கா.

உடல் தானம்!

உடல் தானம்!

அலாஸ்காவில் இருக்கும் 80% வயது வந்தோர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். ஆனால், அமெரிக்காவின் முக்கிய பகுதியான நியூயார்க்கில் வெறும் 12 சதவீத பேர் தான் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்.

ஐஸ் ஹோட்டல்!

ஐஸ் ஹோட்டல்!

அலாஸ்காவில் இருக்கும் ஆரோர எனும் ஐஸ் ஹோட்டல் முற்றிலும் ஐஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சுவர்கள், சீலிங், படுக்கை, பார், பார் டூல்ஸ், கண்ணாடிகள் என அனைத்தும் ஐஸ் கொண்டு தான் வடிவமைத்துள்ளனர். இங்கே ஸ்மோக் வந்தால் நெருப்பு அலார்ம் வரும் என்பதற்காக இவர்கள் ஸ்மோக் டிடக்டர் வைத்துக் கொள்ளவே இல்லை. இங்கே ஐஸ்களில் இருந்து ஸ்மோக் வந்துக் கொண்டே தான் இருக்குமாம்.

Image Credit:pinterest

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Facts To Know About Alaska!

    DYK? The U.S. purchased Alaska from Russia for just US$7.2 million in 1867. Some More Interesting Facts To Know About Alaska.
    Story first published: Tuesday, October 17, 2017, 14:46 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more