For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2018-வது நடக்குமா? என ஒவ்வொரு பிரபலங்கள் நினைக்கும் விஷயங்கள் - ஒரு சிறிய கற்பனை!

2018-வது நடக்குமா? என ஒவ்வொரு பிரபலங்கள் நினைக்கும் விஷயங்கள் - ஒரு சிறிய கற்பனை!

|

ஒரு காலத்துல இந்த வருடமாவது மழை பொழியுமா சென்னை மக்கள் துக்கம்... என விவேக் காமெடி செய்யும் அளவிற்கு சென்னையில் தண்ணீர் பஞ்சம் நிலவியது. ஆனால், இன்றோ நிலை அப்படியே தலைகீழாக மாறி. வருடா வருடம் நவம்பர், டிசம்பர் என்பது மழை வெள்ளம் ஏற்படும் அபாயம் இருக்கும் இடமாக சென்னை மாறியிருக்கிறது.

இப்படி பல மாற்றங்கள் உலகம் முழுவதும் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால், இன்னமும் தங்கள் வாழ்வில் ஒரு மாற்றம் வராதா என எங்கும் பிரபலங்கள் சிலர் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்கள், இந்த வருடமாவது (2018) தாங்கள் விரும்பும் செயல் நடக்குமா என வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறார்கள்.

அப்படி ஒவ்வொரு பிரபலங்கள் என்னென்ன விஷயங்கள் இந்த வருடம் நடக்க வேண்டும் என நினைப்பார்கள் என்ற ஒரு சிறிய கற்பனை தொகுப்பு தான் இது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரஜினி

ரஜினி

1996ல ஆரம்பிச்ச.. காலத்தின் கையில் அது இருக்கு.... 2017 முடியப் போகுது... இப்பவும் காலம் தான் முடிவு செய்யும்ன்னு சொல்லிட்டு இருக்கோம். வர 2018 வருஷமாவது நாம எதிர்பாக்குற அந்த காலம் வந்து அமையனும். கட்சி துவங்கி அரசியல்ல குத்திக்கனும்.

கமல்

கமல்

2018வது நாம போடுற ட்வீட் எல்லாம் மக்களுக்கு புரியணும். புறநானூறு, அகநானூறு எழுதுற அளவுக்கு இல்லாட்டியும், நம்ம ட்வீட் புரிஞ்சுக்கிற அளவுக்காவது எல்லாருக்கும் தமிழ் இலக்கண அறிவும், பேராற்றலும் பெறனும்.

விஜய்

விஜய்

இந்த வருஷமாவது நான் நடிக்கிற படம் எல்லாம் எந்த ஒரு தங்கு தடையும் இல்லாமல், பிரச்சனையில சிக்காமா... ரிலீஸ் தேதியில, ரசிகர் ஷோ... இல்லாட்டி முதல் ஷோவாவது கரக்டா ரிலீஸ் ஆயிடனும். நான் பேசுற வசனத்துல அம்மா, சூரியன், தாமரைன்னு என்ன பேசுனாலும் அத அரசியல் பண்ணிடுறாங்க.

முக்கியமா எங்கப்பா எந்த பேட்டிக்கும் போகக்கூடாது. இல்ல யாரும் அவர பேட்டிக்கு கூப்பிடக் கூடாது.

டாக்டர் தமிழசை

டாக்டர் தமிழசை

தாமரை மலர்ந்தே தீரும்ன்னு சொன்னதுக்கு பதிலா... 1008 முறை ஸ்ரீ ராம ஜெயம் சொல்லிருந்தாவது ஏதாவது பயன் கிடைச்சிருக்கும். இப்ப என்னடான்னா நான் வீர தீரமா பேசுன வசனத்த மீம் டெம்பிளேட்டா போட்டு வறுத்தெடுக்குறானுங்க. இந்த வருஷமாவது தாமரை மலர்ந்தே தீரனும்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

வரவன்,போறவன் எல்லாம் முதல்வர் ஆயிட்டான். இந்த பதவிக்காக நான் இருபது வருஷமா படாதாபாடு பட்டுட்டேன். இன்னும் கட்சி தலைவர் போஸ்ட்டுக்கு கூட வர முடியல. இந்த வருஷமாவது எல்லாம் செம்மையா நடந்து. முதல்வர் பதவியை புடிச்சிரனும். அதுக்குள்ள, மக்களுக்கு ட்வீட் எதுவும் புரியக் கூடாது. அவர் எதிர் பாக்குற காலம் வந்திரக் கூடாது. நமக்குன்னு எங்கிருந்து தான் வராங்கன்னே தெரியலடா சாமி!

சீமான்

சீமான்

என் அருமை தமிழின மக்கள், மானமுள்ள மக்கள் இந்த வருடமாவது விழித்துக் கொள்ள வேணும்... நம்ம தமிழ் பிள்ளைகளுக்கு வாக்களித்து பெருவாரியாக வெற்றிப்பெற செய்து... என்னை அவர்கள் மகனாக கருதி முதல்வர் நாற்காலியில் அமர செய்ய வேணும். என் தாய் மண்ணுல விவசாயம் வளரனும், மும்மாரி மழை பொழியோனும். என் முப்பாட்டன் முருகன் அதற்கு அருள் தரனும்.

வைகோ

வைகோ

சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி நடந்தா கூட நல்லது நடக்குது. நான் ஒரு இடத்துல இருந்து, வேற இடத்துக்கு பெயர்ச்சி பண்ணா மட்டும் எல்லாம் வேற மாறி ஆயிடுவது. இந்த வருஷமாவது நான் பெயர்ச்சி ஆகுற என்னோட நண்பர்கள் கட்சி, இடம் எல்லாம் ஓஹோன்னு வளரனும். காலம் கனிஞ்சு வர காத்திருக்க என்னோட நண்பரோட கூட்டணி அமைச்சு ம.ந.கூ ஆட்சியப் பிடிக்கணும்.

ஓ பி எஸ் - ஈ பி எஸ்

ஓ பி எஸ் - ஈ பி எஸ்

இந்த வருஷம் மட்டுமில்ல, இன்னும் ரெண்டு வருஷத்துக்கு அதிமுகவுல இருக்க எந்த எம்.பி, எம்.எல்.ஏவும் கட்சி மாறிடக் கூடாது. ஏழுமலையான் புண்ணியத்துல முதல்வர் பதவிய தக்கவச்சுக்கிட்டு எப்படியாவது அம்மாவோட ஆசியால்ன்னு பேசி காலத்த ஓட்டிடணும்.

எல்லாத்துக்கும் மேல, முதல்லா எழுதிக் கொடுக்குற ஆட்கள மாத்தனும். நம்ம கட்சியில இருக்க யாரும் தப்பு, தப்பா பேசக் கூடாது.

சிம்பு

சிம்பு

இந்த வருஷமாவது என் படம் சொன்ன தேதியில ரிலீஸ் ஆயிடனும். பழைய லுக்குக்கு திரும்பனும். எப்படியாவது மணிரத்னம் சார் நல்லப்படியா இருக்கணும். சொந்த காசுல தயாரிக்கிறார்ன்னு நினைக்கிறேன். முப்பது வருஷமா ஃபீல்டுல இருக்க ஆளு. நம்மளால கெட்டதா யாரும் சொல்லும்படி ஆயிடக் கூடாது.

சின்னம்மா

சின்னம்மா

போரடிக்குதேன்னு ஷாப்பிங் போயிட்டு வந்தது ஒரு குத்தம்மா. பெங்களூர்ல இருந்து அப்படி என்ன தூரம் போயிட்டேன்... இந்தா இருக்கு ஓசூர்.. அங்க தான போய்ட்டு வந்தேன். அதப்போ சிசிடிவி கேமராவுல படம் புடுச்சு ஆவூன்னா போட்டுடறாங்க. இந்த வருஷமாவது எந்த கேமரா கண்ணுலயும் பட்டுடாமா ஷாப்பிங் போயிட்டு வரணும்.

கேப்டன்

கேப்டன்

இந்த வருஷமாவது தெளிவா பேசணும்... தெள்ளத்தெளிவா மக்களுக்கு புரியிற மாதிரி பேசணும். அதுக்கு, நான் முதல்ல இந்த வருஷம் முழுக்க தெளிவா இருக்கணும். அதுக்கு நல்லபடியா அருள்புரியனும் நீ ஆண்டவா.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

எப்படியோ இந்த வருசம் தலைவர் ஆயாச்சு. அப்படியே வர 2019 தேர்தல்ல பிரதமர் ஆயிடனும். அதுக்கு முக்கியமா நான் பேசுறத யாரும் காமெடியா நினைக்க கூடாது. எப்படியாவது முருகதாஸ் கிட்ட டியூஷன் கிளாஸ் போயாவது புள்ளி விவரமா எப்படி கரக்டா பேசுறதுன்னு கத்துக்கிடனும்.

டோனி

டோனி

ஹர்திக் பாண்டியாவுக்கு இணையா ஃபிட்டா இருக்கேன். டீம் மொத்தமும் சிங்கிள் டிஜிட்ல அவுட்டான போது நான் தான் ஹாப் செஞ்சுரி போட்டு இந்தியாவோட மானத்த காப்பாத்துனேன். இன்னும் மின்னல் வேகத்துல தான் ஸ்டெம்பிங் பண்றேன். ஆனாலும், இவனுங்க நான் எப்போ ரிட்டயர்ட் ஆவேன்னு கேள்வியா கேட்டு கொல்றானுங்க. இந்த வருஷமாவது என்கிட்டே யாரும் இந்த கேள்விய கேட்க கூடாது.

தமிழக மக்கள்!

தமிழக மக்கள்!

நவம்பர் டிசம்பர் மாசம் மட்டும் வந்து தொல்லை பண்ற மழை , சரிப் பங்கா எல்லா மாசமும் பொழியணும். இனிமேலாவது தமிழக மீனவர்கள் இறந்தா, இந்திய மீனவர்கள்ன்னு வடமாநில ஊடகங்கள் பேச கத்துக்கணும். நெய்வேலியில இருந்து கரண்ட்டு மட்டும் எடுத்து எல்லா மாநிலத்துக்கும் பிரிச்சு கொடுக்க தெரிஞ்ச மத்திய அரசுக்கு தண்ணியும் அப்படி தான்னு புரியணும்.

ஆகமொத்தத்துல... தமிழ் நாட நிம்மதியாவும் வளமாகவும் வாழ, வளரவிடனும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Expectations of Indian Celebrities 2018 - Imaginary Story!

Expectations of Indian Celebrities 2018 - Imaginary Story!
Story first published: Friday, December 29, 2017, 11:19 [IST]
Desktop Bottom Promotion