ஒருவர் உச்சக்கட்ட இன்பத்தை அடைய இத்தனை வழிகள் உள்ளதா?

Posted By:
Subscribe to Boldsky

உடலுறவு குறித்து அனைவருக்குமே அனைத்து விஷயங்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திருமணமாகி பல வருடங்கள் ஆகியிருந்தாலும், இன்னும் பலருக்கு உடலுறவு குறித்து முழுமையாக தெரியாது. உடலுறவு கொள்ளும் போது, நாம் எப்படி இன்பத்தை அனுபவிக்கிறோமோ, அதே அளவு இன்பத்தை துணையும் அனுபவிக்க உதவ வேண்டும்.

ஒருவர் உச்சக்கட்ட இன்பத்தை பல வழிகளில் அடைய முடியும். இங்கு எந்த செயல்களின் மூலம் எல்லாம் ஒருவர் புணர்ச்சி பரவச நிலையை அடைய முடியும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் துணையை எளிதில் இன்பத்தை அடையச் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திரைப்படங்கள்

திரைப்படங்கள்

ஆம், சிலருக்கு திரைப்படங்களைக் கண்டாலே, பரவச நிலையை அடைவார்கள். ஆனால் இம்மாதிரியான இன்பத்தை பெண்கள் தான் அதிகம் அடைவார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வருடல்

வருடல்

பெண்களின் சருமம் மிகவும் மென்மையானது. அந்த சருமத்தை வருடுவதன் மூலமும், பெண்கள் புணர்ச்சி பரவச நிலையை அடைவார்கள். அதுவும் இடுப்பு, கழுத்து போன்ற பகுதிகளில் முத்தமிட்டாலோ அல்லது, கைகளால் மென்மையாக வருடுவதன் மூலம் உணர்ச்சிகளைத் தூண்ட முடியும்.

வாய்வழி இன்பம்

வாய்வழி இன்பம்

மிகவும் சென்சிவ்வானவர்கள் இம்மாதிரியான வாய்வழியின் மூலும் இன்பத்தை அடைவார்கள். பாலியல் நரம்பு மண்டலத்தை எளிதில் தூண்டுவதில் வாய் முக்கிய பங்கை வகிக்கிறது.

மார்பு பகுதி

மார்பு பகுதி

மார்பகங்களில் விளையாடுவதன் மூலம் பெண்கள் புணர்ச்சி பரவச நிலையை அடைவார்களாம். ஆனால், ஆய்வுகளில் இந்நிலை அனைத்து பெண்களுக்குமே பொருந்தாது மற்றும் மார்பகங்களின் சென்சிடிவ்வைப் பொறுத்து வேறுபடும் என தெரிய வந்துள்ளது.

கிளிட்டோரல் ஆர்கஸம்

கிளிட்டோரல் ஆர்கஸம்

பெண்களின் உடலிலேயே மிகவும் உணர்ச்சிகரமான பகுதி கிளிட்டோரிஸ் தான். இந்த பகுதியை லேசாக தூண்டினாலே, பெண்கள் விரைவில் உச்சக்கட்ட இன்பத்தை அடைவார்கள். ஏனெனில் இப்பகுதியில் தான் ஏராளமான நரம்புகள் முடிவடைகின்றன.

பாத ஆர்கஸம்

பாத ஆர்கஸம்

இந்த வகை ஆர்கஸம் பாதங்களில் மசாஜ் செய்வதன் மூலம் அடையக்கூடும். அதுவும் பாதங்களில் உள்ள குறிப்பிட்ட இடம் உச்சக்கட்ட இன்பத்தை அடைய உதவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே சமயம் இம்மாதிரியான ஆர்கஸத்தை அடைபவர்கள் மிகவும் அரிது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஜி ஸ்பாட் ஆர்கஸம்

ஜி ஸ்பாட் ஆர்கஸம்

ஜி ஸ்பாட் ஆர்கஸம் என்பது பலருக்கும் தெரிந்த ஆனால் தெரியாத ஒன்று எனலாம். ஜி ஸ்பாட் என்றால் எது என்று கேட்போரும் உள்ளனர். உண்மையில் இந்த ஜி ஸ்பாட்டானது பெண்ணுறுப்பின் வாய்ப்பகுதிக்கு சற்று உள்ளே உள்ள பகுதியாகும். உடலுறவில் ஈடுபடும் போது, ஆணுறுப்பு பெண்ணின் ஜி ஸ்பாட்டை தொடும் போது, பெண்கள் எளிதில் உச்சக்கட்ட இன்பத்தை அடைவார்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Did You Know About The Different Types Of Orgasms?

Have you heard about the different types of orgasms? Check out on how many different types of orgasms are there.