Latest Updates
-
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
நீங்கள் பிறந்த தேதியின் படி, எந்த பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனத் தெரியுமா?
இங்கு பிறந்த தேதியின் படி எந்த பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ளது.
ஒருவர் பிறந்த தேதியைக் கொண்டு, அவர்களது குணநலன்கள், விருப்பு வெறுப்புகள் மற்றும் அவர்களது எதிர்காலத்தைக் கூற கணிக்க முடியும் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் ஒருவர் பிறந்த தேதியின் படி, எந்த வகையான பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனத் தெரியுமா?
இப்படி வைத்திருப்பதன் மூலம், பிறந்த தேதியின் பலனைப் பெற முடியுமாம். சரி, இப்போது பிறந்த தேதியின் படி எந்த பொருட்களை வைத்திருக்க வேண்டும் எனக் காண்போம்.

முக்கியமாக பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை, அதாவது அது ஒற்றை இலக்க எண்ணாக வரும் வரை கணக்கிட வேண்டும். உதாரணமாக, நீங்கள் பிறந்த தேதி 24 என்றால், அவர்கள் 6 ஆம் எண்ணிற்குரிய பொருட்களை வைக்க வேண்டும். அதேப் போல் 29 என்றால் 2 ஆம் எண்ணையும், 28 என்றால் 1 ஆம் எண்ணில் குறிப்பிட்டுள்ள பொருட்களையும் வைத்திருக்க வேண்டும்.

எண் 1
நீங்கள் பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 1 ஆக இருந்தால், அவர்கள் புல்லாங்குழலை வீட்டின் வடக்கு திசையில் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக அந்த புல்லாங்குழல் மரத்தால் ஆனதாக இருக்க வேண்டும்.

எண் 2
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 2 ஆக இருந்தால், வெள்ளை நிறத்திலான ஷோ பீஸை வீட்டின் வட-தென் திசையில் வைத்திருக்க வேண்டும். இதனால் அந்த ஷோ பீஸ் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் வராமல் தடுக்கும்.

எண் 3
கூட்டு எண்ணிக்கை 3 ஆக இருந்தால், வீட்டின் வடகிழக்கு திசையில் ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். அதுவும் முழு ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். ருத்ராட்ச மாலையைத் தவிர்க்க வேண்டும்.

எண் 4
கூட்டு எண்ணிக்கை 4 ஆக இருப்பின், அவர்கள் கண்ணாடியை வீட்டில் தென்மேற்கு திசையில் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக கண்ணாடியை வைத்திருக்கும் போது, அந்த கண்ணாடி முழுமையாகவும், பெரிதாகவும் இருக்க வேண்டும். உடைந்ததாக இருக்கக்கூடாது.

எண் 5
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 5 ஆக இருந்தால், அவர்கள் வீட்டின் வடக்கு திசையில் குபேரர் அல்லது லட்சுமி படத்தை வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.

எண் 6
கூட்டு எண்ணிக்கை 6 ஆக இருந்தால், வீட்டில் தென்கிழக்கு திசையில் மயில் இறகை வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் பணப் பெருக்கம் அதிகரிக்கும்.

எண் 7
கூட்டு எண்ணிக்கை 7 ஆக இருந்தால், அவர்கள் வீட்டின் தென்கிழக்கு திசையில் ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும். அதுவும் அடர் ப்ரௌன் நிற ருத்ராட்சையை வைக்க வேண்டும்.

எண் 8
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 8 ஆக இருந்தால், அவர்கள் கருப்பு நிற கிரிஸ்டலை வீட்டின் தென் திசையில் வைத்திருக்க வேண்டும். இதனால் அந்த கிரிஸ்டல் அனைத்துவிதமான கெட்ட ஆற்றலையும் ஈர்த்து, நல்ல ஆற்றலை வீட்டில் உலவச் செய்யும்.

எண் 9
பிறந்த தேதியின் கூட்டு எண்ணிக்கை 9 ஆக இருந்தால், அவர்கள் வீட்டின் தென் திசையில் பிரமீடு வைத்திருப்பது மிகவும் நல்லது.



Click it and Unblock the Notifications
