கொலை செய்யப்பட்ட நபர் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு உயிருடன் வந்த அதிசயம்!!!!

Posted By:
Subscribe to Boldsky

நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு நண்பனைச் சந்தித்தால் எப்படி உணர்வீர்கள். அதுவும் இனி அந்த நபரை சந்திக்கவே முடியாது என்று நீங்கள் திட்டவட்டமாக முடிவெடுத்தப்பின்னர்...

அந்த நண்பர் இறந்தவிட்டார் அதுவும் கொலை செய்யபட்டுவிட்டார் இனி அந்த நபர் வாழ்நாளில் பார்க்க முடியாது என்று நீங்கள் நினைத்த நபராக இருந்தால். இறந்துவிட்டார் என்பது தவறான தகவலாக இருக்கலாம் என்று யூகிக்காதீர்கள் ஏனென்றால் கொலை செய்தததே நீங்கள் தான்!

நான் கொலை செய்த ஒரு நபர், பல ஆண்டுகள் கழித்து என் முன்னே வந்து நின்றால்???? உண்மையில் நடைப்பெற்ற இச்சம்பவம் பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயிற்றில் இருக்கும் குழந்தை :

வயிற்றில் இருக்கும் குழந்தை :

மெலிசாவின் தாய் கர்ப்பமாக இருந்த போது தன்னுடைய மூன்றாவது ட்ரைம்ஸ்டரில் குழந்தை வேண்டாம் என்று முடிவெடுக்கிறார். இந்த குழந்தையை கருக்கலைப்பு செய்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து மருத்துவமனைக்குச் செல்கிறார்.

அங்கே அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஐந்து நாட்கள் ட்ரிப்ஸ் ஏற்றப்படுகிறது. அதிலிருக்கும் மருந்துகளால் வயிற்றில் இருக்கும் குழந்தை இறந்துவிடும் என்று நினைத்து இருக்கிறார்.

 பக்கெட்டில் குழந்தை :

பக்கெட்டில் குழந்தை :

குழந்தை இறப்பதற்கு பதிலாக அவருக்கு பிரசவ வலி உண்டானது.அழகான பெண்குழந்தையை பெற்றெடுத்தார்.

வேண்டாம் என்று நினைத்து விஷம் கொடுக்கப்பட்ட குழந்தை எப்படியும் இறந்திருக்கும் என்று நினைத்து அந்த குழந்தையை பார்க்காமல் மருத்துவமனையில் இருந்து வெளியேறிவிட்டார்.

அந்த மருத்துவமனையில் அபார்சன் செய்யப்பட்ட குழந்தையை ஒரு பக்கெட்டில் போட்டு வைக்கும் நடைமுறை இருந்திருக்கிறது. அதே போல மெலிசாவையும் போட்டு வைத்தார்கள்.

உயிர் பிழைத்த அதிசயம் :

உயிர் பிழைத்த அதிசயம் :

அம்மா தன்னை கொல்வதற்காக உட்கொண்ட எல்லா விஷத்தையும் ஏற்றுக் கொண்டும் உயிரை விடாமல் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த மெலிசாவின் முனகல் சத்தம் அங்கிருக்கும் செவிலியர் காதுக்கு எட்டியிருக்கிறது.

உடனடியாக அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்ட மெலிசாவிற்கு நுரையீரலில் பிரச்சனை.அதனால் மூச்சு விடுவதற்கு திணறிக்கொண்டிருந்தது அந்த குழந்தை.

தீவிர சிகிச்சைக்குப் பிறகு அந்த குழந்தை உயிர் பிழைத்துக் கொண்டது.

 போதைப்பழக்கம் :

போதைப்பழக்கம் :

இரண்டு வயது குழந்தையானது போது மெலிசாவை ஒரு குடும்பம் தத்தெடுத்துக் கொண்டது. டீன் ஏஜ் பருவத்தில் தான், இந்த குடும்பம் என்னை தத்தெடுத்திருக்கிறார்கள். என்னைப் பெற்றவள் கொல்ல நினைத்த கதை அதிலிருந்து மீண்டு வந்த கதை எல்லாமே தெரிந்திருக்கிறது.

இதனை கேட்டதுமே மனதளவில் நொறுங்கிவிட்டார் மெலிசா. பயமும் கோபமும் ஒரு சேர அவரை ஆட்டுவித்தது. வாழத் தகுதியற்றவள், என்னைப் பெற்றவளே என்னைக் கொல்வதற்காக விஷம் கொடுத்திருக்கிறாள் என்று நினைத்து நினைத்து போதைப் பழக்கத்திற்கு அடிமையானார்.

தத்தெடுத்துக் கொண்ட பெற்றோருக்கு எந்த விஷயமும் தெரியக்கூடாது என்று நினைத்து தன்னுடைய அழுகையை அடக்கிக் கொண்டேயிருந்தார் மெலிசா.

மனதில் ஒரு பாரம் அழுத்த வெளியில் சந்தோசமாக இருக்க முடியவில்லை.

மன்னிப்பு :

மன்னிப்பு :

இதற்கு ஒரே வழி தன்னைப் பெற்றவளை மன்னிப்பது. சில விஷயத்தை ஆரம்பித்து விட்டு பாதியிலேயே விட்டு ஓட வேண்டும் பின் வாங்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனமானது. ஏதோ ஒரு விஷயத்திற்காக கடவுளால் உயிர் பிழைக்கப்பெற்றேன். அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

மன்னிக்க வேண்டுமே! மெலிசாவுக்கு முப்பது வயதான போது, தன்னை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர்களை தேட ஆரம்பித்தார். மருத்துவமனை கொடுத்த தகவலின் அடிப்படையில் பெற்றோரை கண்டுபிடித்தார்.

தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். அம்மா மட்டும் உயிருடன் இருப்பது தெரிந்தது.

Image Courtesy

அம்மாவிடம் சமாதானம் :

அம்மாவிடம் சமாதானம் :

போன் மூலம் தொடர்பு கொண்டு தன்னுடைய அம்மாவிடம் பல கட்ட முயற்சிக்குப் பிறகு பேசினார்.மெலிசா, அதிர்ச்சியடைந்த அவரது தாயிடம் அடிக்கடி பேச ஆரம்பித்தார்.

இருவரும் பேசிக்கொண்டாலும் நேரில் சந்திக்க இருவருக்குமே தைரியமில்லை.

பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு தாயும் மகளும் நேரில் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது பேசிய மெலிசா, நான் இதுவரை அம்மா மீது கோபமாக இருந்தேன். ஆனால் அம்மாவாக இந்த செயலை செய்யவில்லை சிலரது நிர்பந்தத்தால் தான் இப்படிச் செய்திருக்கிறார் அந்த குற்ற உணர்ச்சியை இப்போதும் அவரது கண்களில் பார்க்கிறேன்.

என் அம்மாவை நான் மனதார மன்னித்துவிட்டேன் என்று சொல்லும் மெலிசாவிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Aborted child come back after 30 years to see her biological mother

Aborted child come back after 30 years to see her biological mother
Subscribe Newsletter