பெண்களுக்கு ஆண்குறி சார்ந்த இந்த 6 சிக்கல்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை!

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாகவே ஆண்களின் உடற்கூறு பற்றி பெண்களுக்கும், பெண்களின் உடற்கூறு பற்றி ஆண்களுக்கும் முழுதாக தெரியாது. அதிலுன் அந்தரங்க உறுப்புகள் பற்றிய முழு தெளிவு இருக்காது.

உயிரியல் பாடப் புத்தகத்தில் சில பகுதிகளை பள்ளிகளில் ஆசிரியர்கள் சிலர் நடத்த தயங்கி தவிர்ப்பதும் கூட இதற்கு ஒரு காரணமாகிவிடுகிறது.

ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் ஆண்குறி சார்ந்த எதிர்க்கொள்ளும் சில சிக்கல்கள் குறித்து பெண்களுக்கு திருமணமாகும் வரை அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

அதிலும் இந்த 6 சிக்கல்களை ஆண்கள் அனுதினமும் சந்திக்கின்றனர் என்பதை கண்டு பெண்கள் வியந்தாலும் ஆச்சரியம் இல்லை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுருங்குதல்!

சுருங்குதல்!

பெண்ணுறுப்பு எப்படி எலாஸ்டிக் தன்மை கொண்டுள்ளதோ, அப்படி தான் ஆணுறுப்பு சுருங்கும் தன்மை கொடுள்ளது.

எப்படி ஆண்களுக்கு பெண்ணுறுப்பின் எலாஸ்டிக் தன்மை பற்றி பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லையோ, அப்படி தான் பெண்களுக்கும் ஆண்களின் சுருங்கும் தன்மை குறித்து அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

விறைப்புத்தன்மை!

விறைப்புத்தன்மை!

ஆண்களுக்கு பலசமயம் அதிகாலை தூங்கி எழும் போது விறைப்புத்தன்மை ஏற்படும். இதற்கு காரணம் இச்சை உணர்வோ, உடலுறவில் ஈடுப்பட்டு உறங்குவதோ இல்லை. இது ஒரு ஆண்களின் வாழ்க்கையில் ஒரு இயல்பான விஷயம்.

ஜிப்!

ஜிப்!

ஜிப்பும் ஒரு கொலைக்கார கருவி என்பது பெண்கள் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. உயிர் போகும் வலியை தரவல்லது என்பது ஆண்களுக்கு மட்டுமே தெரியும்.

பொதுவிடம்!

பொதுவிடம்!

பார்ன் அல்லது அது சார்ந்த விஷயங்கள் ஏதும் இல்லாமல் கூட திடீரென ஆண்களுக்கு விறைப்பு உண்டாக வாய்ப்புகள் உண்டு.

அதிலும் பொதுவிடத்தில் இது போன்ற நேரும் போது, அதை சமாளிப்பது எவ்வளவு கொடுமை என்பது ஆண்களுக்கு தான் தெரியும்!

சிறுநீர் கழிப்பது!

சிறுநீர் கழிப்பது!

விறைப்பு ஏற்பட்ட நிலையில் சிறுநீர் கழிப்பது எவ்வளவு கடினம் என்பதும் ஆண்களுக்கு தான் தெரியும். (தட் அழுதுக்கொண்டே சிரிக்கிறேன் மொமன்ட் அது!)

அளவு!

அளவு!

இது ஆண்களே பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பல ஆண்களும் பார்ன் பார்த்து ஆண்குறி ஆறு அங்குலத்திற்கு மேலாக இருந்தால் தான் அல்லது ஆண்குறி பெரிதாக இருந்தால் மட்டும் தான் சிறந்து விளங்க முடியும் என கருதுவதுண்டு!

ஆனால், ஒருவர் தாம்பத்திய வாழ்க்கையில் சிறந்து செயல்படுவதற்கும், ஆண்குறி அளவிற்கும் சம்மந்தம் இல்லை. நான்கு அங்குலத்திற்கும் குறைவாக ஆண்குறி இருந்தால் அதை மைக்ரோ பெனிஸ் என்று கூறுவார்கள். அதுதான் பிரச்சனை!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Women Obviously Don’t Know About These Six Penis Problems

Women Obviously Don’t Know About These Six Penis Problems
Please Wait while comments are loading...
Subscribe Newsletter