Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
எப்.பி.ஐ. பற்றிய திகைப்பூட்டும் தகவல்கள்!
எப்.பி.ஐ என்பது புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் (Federal Bureau of Investigation -FBI) ஆகும். இது சட்ட அமுலாக்க மற்றும் உள்ளக புலன் விசாரணை முகவராக அமெரிக்காவின் நீதித்துறைக்குச் செயற்படும் சொந்தமான அரச முகவர்.
அமெரிக்கா வல்லரசாக இருப்பதற்கான 12 காரணங்கள்!!!
உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பம் வைத்து கொலையாளிகள், குற்ற செயல் புரிவோரை தேடிப்பிடிக்கும் அமைப்பாக இது திகழ்கிறது. மேலும், புலன் விசாரணை பிரிவில் உலகிலேயே முதன்மை இடத்தில் இருக்கிறது எப்.பி.ஐ. அமெரிக்கா மட்டுமின்றி பல உலக நாடுகளிலும் உளவு மற்றும் புலன் விசாரணை செய்து வருகிறது எப்.பி.ஐ.
சீனாவை பற்றி யாராலும் நம்ப முடியாத அதிர்ச்சிகரமான தகவல்கள்!!!
ஆனால், இவை அனைத்தும் மிக ரகசியமாக யாரும் கண்டிபிடிக்க முடியாத அளவில் இயங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது...

மார்டின் லூதர் கிங் கொலையாளி
கடந்த 1968-ம் ஆண்டு எப்.பி.ஐ தப்பியோடியவர்களில் டாப் 10 பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த 33 பேரை பிடித்தது. இவர்களில் பிடிபட்ட ஜேம்ஸ், இயர்ல் ரே என்பவன் மார்டின் லூதர் கிங் கொலை வழக்கில் தேடப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்.பி.ஐ அதிகாரிகள்
அமெரிக்காவிற்கு வெளியிலும் எப்.பி.ஐ பல நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், வெளிநாடுகளில் எப்.பி.ஐ-ன் அதிகாரிகள் யார் என்பதையும், அவர்களது நடவடிக்கைகளையும் கண்டறிவது மிகக்கடினமான காரியம்.

இரட்டை கோபுர தாக்குதல்
ஓர் எப்.பி.ஐ சிறப்பு அதிகாரி இரட்டை கோபுர தகர்ப்பு தீவிரவாத தாக்குதல் நடக்கவிருக்கிறது என 5-6 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார். ஆனால், அவரை எப்.பி.ஐ-ல் இருந்து வெளியேற்றிவிட்டனர்.

இரட்டை கோபுர தாக்குதல்
பிறகு உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரத்திலேயே அவர் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக வேலையில் அமர்ந்தார். மற்றும் தாக்குதலில் மாடியில் இருந்து விழுந்து இறந்தும் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோஸ்ட் வான்ட்டட்
எப்.பி-ஐ-யின் முதல் மோஸ்ட் வான்ட்டட் பட்டியலில் இடம்பெற்றவன் தாமஸ் ஜேம்ஸ் ஹோல்டன் என்பவன். இவன் தனது மனைவியை தனது சகோதரன் மற்றும் மாற்று தாயின் உதவியுடன் கொலை செய்ததற்காக தேடப்பட்டு வந்தான். மார்ச் 14, 1950-ல் இவனது பெயர் பட்டியலில் இடம்பெற்றது, ஜூன் 23,1951-ம் ஆண்டு இவனை எப்.பி.ஐ கைது செய்தது.

மோஸ்ட் வான்ட்டட்
எப்.பி-ஐ-யின் மோஸ்ட் வான்ட்டட் பட்டியலில் இடம்பெற்ற முதல் பெண் ருத் எயிஸ்மென் என்பவள். கடத்தல் குற்றத்திற்காக இவளது பெயர் டிசம்பர் 28, 1968-ம் ஆண்டு இடம்பெற்றது. இவளை மார்ச் 5,1969-ல் கைது செய்தனர்

பொய்
எப்.பி.ஐ மற்றும் அமெரிக்க அரசு நாட்டின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நீதிமன்றத்தில் பொய் கூற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோப்புகள்
உங்களை பற்றி எப்.பி.ஐ வைத்திருக்கும் கோப்புகளை பிரதி எடுத்து தர கூறி நீங்கள் எப்.பி.ஐ.-யிடம் கேட்கலாம்.

சூப்பர் கம்ப்யூட்டர்
எப்.பி.ஐ-யிடம் இருக்கும் சூப்பர் கம்ப்யூட்டரை வைத்து எந்த பெரிய தீங்கிழைக்கும் மென்பொருளையும் சில நிமிடங்களில் செயலிழக்க வைக்க முடியும். மேலும், இதன் செயல் திறன் மிக நவீனமானது.

கைது நடவடிக்கை
எப்.பி.ஐ-யிடம் தப்பி ஓடியவர்களில் மோஸ்ட் வான்ட்டட் என்ற பட்டியலில் 498 பேர் இருக்கிறார்கள் (1953-2014). இதில் 467 பேரை எப்.பி.ஐ பிடித்துவிட்டது (கைது செய்து, கொன்று, சரணடைந்து).

நடிப்பு
கியூப- அமெரிக்க எப்.பி.ஐ. அதிகாரி, குற்ற செயலில் ஈடுபட்ட ஒரு கேம்பினோ (இத்தாலி) குடும்பத்தை பிடிக்க மூன்று வருடம் அண்டர்கவரில் இருந்தார். இதில், இன்வெஸ்டிகேஷன் முடியும் முன்னரே அந்த குடும்பத்தில் இருந்த அனைவரயும் தான் ஒரு இத்தாலியன் என நம்ப வைத்துபிடித்தார்.



Click it and Unblock the Notifications
