இவ்வருடம் ஆன்லைனில் ஹிட்டான டாப் 6 மொக்கையான விஷயங்கள் - 2016

Posted By:
Subscribe to Boldsky

சில பழைய படங்களை பார்க்கும் போது இதெல்லாம் எப்படி அந்த காலத்துல ஓடிச்சு என்ற மைன்ட் வாய்ஸ் நிச்சயமாக பலரது மனதில் ஓடும். அந்த வகையில் இப்போது ஆன்லைனில் டிரென்ட் ஆகிக் கொண்டிருக்கும் விஷயங்களை இன்னும் கொஞ்சம் நாள் கழித்து இதை எல்லாமா இவங்க பண்ணிட்டு இருந்தாங்க என்பது போல பலரும் கூறலாம்.

அப்படி இந்த வருடம் ஹிட்டான, மக்கள் மத்தியில் அதிக ரீச்சான, அதிகம் பகிரப்பட்ட தேவையில்லாத ஆணிகளை பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போக்கி மான் - கோ!

போக்கி மான் - கோ!

வீட்டுக்குள்ளேயே ஸ்மார்ட் போன் செயலிகளில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை தெரு தெருவாக அலையவிட்ட விளையாட்டு. எந்த வீட்டில் அம்மா காய்கறி வாங்கி வர கூறினால் கூட நகராத ஆட்கள், இதுவரை சென்று வராத ஏரியாக்களுக்கு கூட போக்கிமான் பிடிக்க சென்றனர். சிலர் வங்கிகளுக்குள் எல்லாம் போக்கிமான் பிடிக்க சென்று காவலர்களால் விரட்டப்பட்ட சம்பவங்களும் நடந்தன.

ஒரு விரல் சேலஞ்!

ஒரு விரல் சேலஞ்!

கண்ணாடி முன் நிர்வாணமாக நின்றுக் கொள்ள வேண்டும். ஒரு விரல் கொண்டு தங்கள் மேல் உடல் மற்றும் கீழ் உடல் மறைத்தப்படி செலஃபீ எடுத்து அதை பகிர வேண்டும். இதற்கு பெயர் 1-Finger Challenge.

யூடியூப் விமர்சகர்கள்!

யூடியூப் விமர்சகர்கள்!

ஒரு படத்தை பார்த்து அதை பற்றிய கருத்து சொல்வது என்பது வேறு. அதை பற்றி ஆழமாக விமர்சனம் செய்வது வேறு. அது என்ன படம், என்ன பிரிவில் எடுக்கப்பட்டுள்ளது என எதுவும் தெரியாமல் எல்லாவற்றையும் குப்பைப் படம் என கூறும் கூட்டமாகவும்., ஒரு படத்திற்கு ஐந்திற்கு மூன்று மதிப்பெண்ணுக்கும் கீழ் அளிப்பதால் தான் ஒரு சிறந்த விஞ்ஞானி என்ற எண்ணம் கொண்டவர்கள் பெருமளவு யூடியூப் விமர்சகர்கள் ஆன வருடம் 2016!

ட்விட்டர் டிரென்ட்ஸ்!

ட்விட்டர் டிரென்ட்ஸ்!

முன்பெல்லாம் ட்விட்டரில் பெரும்பாலானோரால் அதிகம் பேசப்படும் விஷயம் டிரென்ட் ஆனது. ஆனால், இந்த வருடம் ஒரு விஷயத்தை டிரென்ட் செய்ய வேண்டும் என்பதற்காகவே #ஹேஷ்டாக் பயன்படுத்தினர். முக்கியமாக பாவம் நடிகர் விஜய் - அஜித் தான். இவர்களை புகழ்ந்து ஒருபுறமும், இகழ்ந்து ஒருபுறமும் வருடம் முழுக்க பல #ஹேஷ்டாக்குகள் டிரென்ட் ஆனது.

பிரபலங்களை கலாய்ப்பது!

பிரபலங்களை கலாய்ப்பது!

முன்பெல்லாம் ஒரு பிரபலத்தை பார்ப்பதே கடினம். அவருடன் பேசுவதெல்லாம் அரிதிலும் அரிது. ஆனால், ட்விட்டர், ஃபேஸ்புக் வந்த பிறகு இது மிக எளிமையாகிவிட்டது. இது அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பிடிக்காதவர்களுக்கும் கூட கைக்கு எட்டும் கனியாகிவிட்ட நிலைமை ஏற்பட்டதால் பல பிரபலங்கள் வேண்டுமென்றே கலாய்க்கப் பட்டனர். சில பிரபலங்கள் சொந்த ட்வீட்டிலே சூனியம் வைத்துக் கொண்டனர்.

பிச்சை!

பிச்சை!

ஏதேனும் ஒரு ஏழை குழந்தை, அரசு பள்ளி மாணவர் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு. அதனுடன் ஒரு பொய் செய்தியை இணைந்து, "இதற்கெல்லாம் நீங்க லைக் போடுவீங்களா? நடிகை படம்-னா லைக் போடுவீங்க.." போன்ற பதிவுகள் ஆயிரக்கணக்கான ஷேர்கள் கடந்து ஹிட் ஆகின. ஆனால், அவற்றில் 99.99% பொய் பதிவுகள் தான். தங்கள் ஃபேஸ்புக் பக்கத்திற்கு ரீச் கிடைக்க இந்த லைக் பிச்சை எடுத்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top 6 Useless Things Emerged This Year - 2016

Top 6 Useless Things Emerged This Year
Please Wait while comments are loading...
Subscribe Newsletter