அவையில் உறங்கியதால் சுட்டுக்கொல்லப்பட்ட வடக்கொரிய அமைச்சர்!

Posted By:
Subscribe to Boldsky

"இதுக்கெல்லாமா கொல்லுவாங்க..." என்பதற்கு அந்நியன் இதுக்கெல்லாம் யாரு கொல்ல போறாங்கன்ற அலட்சியதால தான் இந்த தப்பெல்லாம் நடக்குது என்பார். ஆனால், இந்த சம்பவம் அதுக்கு மேல லெவல். உறங்கியதற்காக ஒரு அமைச்சரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

அப்படி அலுவல் நேரத்தில் உறங்கும் நபர்களை கொல்ல வேண்டும் என்றால், இந்தியாவில் வேலைக்கு செல்பவர்களில் 50% மேலானவர்களை கொல்ல தான் வேண்டும். அதிலும், நமது சட்டசபையில் உரக்க பேசுபவர்களை விட, அயர்ந்து உறங்குபவர்கள் தான் அதிகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யார் இவர்?

யார் இவர்?

கிம் யாங் ஜின் என்பவர் வடக்கொரியாவின் கல்வி துணை பிரதமர் ஆவார். இவரது தந்தை கிம் ஜாங் இல் 71 வயதில் இறந்த பிறகு இவர் இந்த பதவிக்கு வந்தார். இவரது தந்தை தான் வடக்கொரிய இராணுவத்தின் மாஸ்டர்மைண்டாக இருந்தவர்.

Image Courtesy

இவர் என்ன செய்தார்?

இவர் என்ன செய்தார்?

இவர் மீது ஏற்கனவே அதிகார துஷ்பிரயோகம் மற்றும் திமிராக நடந்துக் கொள்கிறார் என்ற குற்றசாட்டுகள் இருந்தன.

இவர் ஏன் தண்டிக்கப்பட்டார்?

இவர் ஏன் தண்டிக்கப்பட்டார்?

இவர் முக்கிய அலுவல் நேரங்களில் அரசு அரங்கத்தில் தவறான முறையில் உட்காரும் நிலையை கடைபிடித்து வந்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இவர் அவை நேரத்தின் போது உறங்கியும் இருக்கிறார்.

அடுத்து அவருக்கு நடந்தது என்ன?

அடுத்து அவருக்கு நடந்தது என்ன?

பிறகு, இவர் உறங்கிய குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். மேலும், மாநில பாதுகாப்பு அமைச்சகத்தால் தீவிரமான கேள்விகள் கேட்கப்பட்டன.

இதற்கெல்லாம் மேலாக, உறங்கியதற்காக பொதுமக்கள் முன்னிலையில் இவரை தூக்கிலிட வேண்டும் என கூறப்பட்டது. வடக்கொரியாவில் அலுவல் நேரத்தில் உறங்குவது ஜோக் அல்ல.

இறுதி தீர்ப்பு!

இறுதி தீர்ப்பு!

தண்டனை நிறைவேற்றும் குழு இவரை தூக்கிலிடவில்லை.அதற்கு மாறாக, ஆண்டி- ஏர்கிராப்ட் கன் கொண்டு துப்பாக்கி சுடும் குழுவை வைத்து இவரை சுட்டுக் கொன்றனர்.

இதனால், அடுத்தப்படியாக வேறு எந்த அமைச்சரும் அலுவல் நேரத்தில் அவையில் உறங்க மாட்டார்கள் என நம்பப்படுகிறது.

இந்தியாவில்!

இந்தியாவில்!

அப்படி பார்த்தல் இந்தியாவில் எத்தனை பேர் சட்டசபையில் மணிக் கணக்கில் உறங்கியிருக்கிறார்கள், சட்டசபைக்கே போகாமல் இருக்கிறார்கள்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

This Minister Was Executed For Sleeping

This Minister Was Executed For Sleeping! take a look on here.
Subscribe Newsletter