உலக நாடுகளை அச்சுறுத்தும் இஸ்ரேல் இராணுவத்தை பற்றிய திகைக்க வைக்கும் தகவல்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

உலக நாடுகள் அமெரிக்காவை கண்டு அஞ்சி நடுங்கலாம். ஆனால், அமெரிக்காவே ஒரு நாட்டை கண்டு அஞ்சி நடுங்கும் என்றால் அந்த நாட்டின் பெயர் தான் இஸ்ரேல். இஸ்ரேலின் வளர்ச்சியை காண்பவர் பலருக்கு, அவர்கள் கண்ட வீழ்ச்சியை பற்றி தெரியாது.

இந்திய ராணுவத்தை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்!!!

அசுரத்தனமான வளர்ச்சி பெற்று இன்று உலக நாடுகளில் நான் தான் அதிநவீனத்தின் முன்னோடி என்று மார்தட்டிக் கொண்டிருக்கிறது இஸ்ரேல். இவர்களை தாக்க வேண்டும் என்று நினைத்தால் கூட அந்த எண்ணத்தையே அழிக்கும் வண்ணம் இராணுவ ஆயுதங்களில் அதிநவீன எல்லையில் கோலூன்றி நிற்கிறது இஸ்ரேல்.

உலகின் சில நாடுகளில் வழங்கப்படும் விசித்திரமான இராணுவ பயிற்சிகள் !!!

இனி இஸ்ரேல் இராணும் என்கிற இஸ்ரேல் பாதுகாப்பு படையை பற்றிய திகைக்க வைக்கும் தகவல்கள் பற்றி பார்க்கலாம்....

சீனாவை பற்றி யாராலும் நம்ப முடியாத அதிர்ச்சிகரமான தகவல்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ராணுவம் புத்தி கூர்மை

ராணுவம் புத்தி கூர்மை

இன்றைய தினத்தில் உலகின் முன்னணி அதிநவீன இராணுவ ஆயுதங்களை தயாரிப்பதில் இஸ்ரேல் பாதுகாப்பு படை தான் முதன்மையில் இருக்கிறது. வான் படை, சிறப்பு படை, புத்திக் கூர்மை, பொறியியல் அமைப்பு என இவர்களது முன்னோடியான விழிப்புணர்வு மற்றும் ஆய்வுகள் சாமர்த்தியம் வாய்ந்ததாக இருக்கிறது.

சமூக செயல்பாடு

சமூக செயல்பாடு

இஸ்ரேல் நாட்டின் முதல் பிரதமர் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் டேவிட் பென் குரியான் , "இஸ்ரேல் பாதுகாப்பு படை நாட்டை பாதுகாக்க மட்டுமின்றி, நாட்டில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தி சமூக செயல்பாட்டை வளர்க்கவும் கூட பணிபுரியும்" என கூறியுள்ளார். இஸ்ரேலில் அரசியல், பொருளாதாரம், சமூக இணைப்பு என அனைத்திலும் இராணுவ ஊடுருவல் இருக்க தான் செய்கிறது.

சமத்துவம்

சமத்துவம்

இஸ்ரேல் பாதுகாப்பு படையில் ஆண், பெண் சமத்துவம் பின்பற்றப்படுகிறது. இஸ்ரேல் பாதுகாப்பு படையில் ஆண், பெண் என்ற பேதமின்றி இருபாலரும் சேவை செய்ய வேண்டும். மற்றும் இதை தேசிய கடமையாக அவர்கள் கருதுகிறார்கள். ஆண்கள் மூன்று வருடமும், பெண்கள் இரண்டு வருடமும் பாதுகாப்பு படையில் சேவை செய்கிறார்கள்.

ரிசர்வ் படைகள்

ரிசர்வ் படைகள்

இஸ்ரேல் ஓர் சிறிய நாடு என்பதால் தொடர்து இராணுவத்திலேயே இருக்க முடியாது என்பதால். அவசர கால வேலை இல்லாத நேரங்களில் அவர்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். மற்றும் இரண்டு தலைமுறை ஒன்றாக இராணுவத்தில் இருப்பதும் இஸ்ரேலில் தான். மகன் கடமையை செய்ய சேவையில் இருக்கும் அதே சமயத்தில் தந்தை ரிசர்வ் படையில் பணியில் இருப்பார்.

ஆயுத தூய்மை / பாதுகாப்பு

ஆயுத தூய்மை / பாதுகாப்பு

இஸ்ரேல் பாதுகாப்பு படையின் விதிமுறைகளில் மக்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது. நாம் வெற்றி பெற வேண்டிய மிஷன் மட்டும் தான் நமது குறிக்கோள் என்பதை "Purity Of Arms" என்ற பெயரில் பின்பற்றி வருகிறார்கள்.

மற்ற நாட்டவர்

மற்ற நாட்டவர்

இஸ்ரேலில் குடியேறிய அல்லது பெற்றோர் இல்லாதவர் இஸ்ரேல் பாதுகாப்பு படையில் பணியாற்றும் போது "Lone Soldiers" என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார்கள். இவர்களுக்கான அத்தியாவசிய தேவைகள் மற்றும் தங்குமிடங்கள் போன்றவை இவர்களது சேவைக்காக ஏற்பாடு செய்து தரப்படுகிறது.

18 வயது வரம்பு

18 வயது வரம்பு

18 வயது நிரம்பிய அணைத்து ஆண், பெண் இருவரும் இராணுவத்தில் சேவை செய்ய வேண்டும் என்பது கட்டாய இராணுவ சேவையாக இஸ்ரேலில் கடைபிடிக்கப்படுகிறது.

மக்கள் பாதுகாப்பு

மக்கள் பாதுகாப்பு

இஸ்ரேல் எல்லையில் இருக்கும் பாதுகாப்பு படை மற்ற நாட்டின் மீது போர் தொடுக்க ஆயுத்தமாக இருப்பதில்லை. தங்கள் நாட்டின் மக்களை காக்க தான் பணிபுரிகிறார்கள். எந்த நாட்டில் இருந்து தானியங்கி ஏவுகணை மூலம் இஸ்ரேலை தாக்க நினைத்தாலும், அதை எந்த நபரின் உதவியும் இன்றி வானிலேயே தகர்த்து நாட்டை காக்கும் வண்ணத்தில் இஸ்ரேல் அதிநவீன முறைகளை கையாள்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things To Know About Israel Defense Force

Israel defense force is likely tops the list of best army force in the world. Technically they are stronger than US. Take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter