Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
யாராலும் நம்ப முடியாத வியப்பூட்டும் உண்மைகள்!
கற்றது கையளவு, கல்லாதது கடலளவு என்ற கூற்று நூறு சதவீதம் உண்மையானது. ஐ.நா-வின் தலைவராக இருந்தாலும் கூட அவருக்கும் உலக நடப்புககளில் மேலோட்டமான விஷயங்கள் தான் தெரியுமே தவிர அடித்தட்டு விஷயங்கள் தெரிய வாய்ப்புகள் இல்லை.
உலகில் தீர்வில்லாமல் நீடிக்கும் நெடுங்கால மர்மங்கள்!!
உலகில் நாம் அறியாதவை பல விஷயங்கள் ஒவ்வொரு நொடியிலும் நடந்தேறிக் கொண்டு தான் இருக்கிறது. இதில் சிலவன வியப்பூட்டும் வகையிலும், நம்ப முடியாத அளவிலும் இருக்கிறது, அவற்றைப் பற்றி இனிக் காண்போம்....

உலக பொருளாதாரம்
உலகின் 85 பணக்காரர்களின் சொத்து மதிப்பு, 3.5 பில்லியன் ஏழை மக்களின் சொத்திற்கு இணையானது. அதாவது பாதி உலகின் செல்வத்திற்கு இணையான செல்வதை வெறும் 85 நபர்களிடம் பதுங்கியிருக்கிறது.

சூரியக் குடும்பம்
சூரியக் குடும்பத்தின் மொத்த எடையில் 99.96% எடை சூரியனுடையது ஆகும்.

சுறா
ஒரு வருடத்திற்கு சுறாக்களால் கொல்லப்படும் மனிதர்களின் எண்ணிக்கை 12. ஆனால், மனிதர்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 11,417 சுறாக்களை கொல்கின்றனர்.

அணில்களை கைது செய்த ஈரான்
கடந்த 2007-ம் ஆண்டு உளவு பார்க்க உதவியதற்காக 14 அணில்களை ஈரான் கைது செய்தது.

அடிமைகள்
அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி அடிமைகளை வைத்து கட்டப்பட்டது ஆகும்.

நோபல் பரிசு
காந்தி நோபல் பரிசு வென்றதில்லை. ஆனால், 1937- 1948 இடைப்பட்ட காலத்தில் ஐந்து முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

பூனையை கண்டால் பயம்
அலெக்ஸ்சாண்டர், நெப்போலியன், ஹிட்லர் போன்றவர்களுக்கு "Ailurophobia" என்ற தாக்கம் இருந்தது. ஆம், இவர்களுக்கு பூனைகளை கண்டால் பயம்.

பாம்
கடந்த 2006-ம் ஆண்டு ஒரு பெண்மணி விமானத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போதுவாயு வெளியேற்றிவிட்டார். அந்த நாற்றத்தை மறைக்க அந்த பெண்மணி வத்திக்குச்சிகளை பற்றவைத்தார். இதனால், அவசரநிலை என கருதி விமானம் பாதியில் தரையிறங்கியது.

ஜமைக்கா
ஜமைக்காவில் ஆண்களுக்குள் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் பத்து ஆண்டு சிறை தண்டனை. ஆனால், லெஸ்பியன் எனப்படும் பெண்களுக்குள் உறவு வைத்துக் கொள்வதற்கு அங்கு தடையில்லை.

இதயம் தானம்
அமெரிக்காவில் ஒரு நபருக்கு தற்கொலை செய்துக் கொண்ட நபரின் இதயம் மாற்று ஆறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதயம் தானம் பெற்றவர் தற்கொலை செய்துக் கொண்ட அந்த நபரின் மனைவியையே திருமணமும் செய்துக் கொண்டார். ஆனால், சில வருடங்களிலேயே, இதயம் தானம் பெற்ற அந்த நபர், முதல் நபர் செய்துக் கொண்டது போலவே தற்கொலை செய்துக் கொண்டார்.

வீடு
கடந்த 2013-ம் ஆண்டு ஒருவர் தனது எக்ஸ் மனைவியின் வீட்டிற்கு முன்பாக ஒரு வீடு வாங்கினார். எதற்காக தெரியுமா, அங்கு ஓர் பெரிய நடுவிரல் சிலையை நிறுவி அதை அவரது எக்ஸ் மனைவி தினமும் பார்க்கும் படி அமைத்தார்.



Click it and Unblock the Notifications
