மகாசிவராத்திரி வழிபாடு தோன்றியது எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

இந்துக்கள் கொண்டாடும் பெரும் விழாக்களில் சிவனுக்கு உகந்த மகாசிவராத்திரியும் ஒன்று. இந்தியா முழுக்க கொண்டாப்படும் சிவ வழிபாட்டு விரதமாக மகாசிவராத்திரி திகழ்கிறது.

சிவபெருமான் அணிந்திருக்கும் ஆபரணங்களின் முக்கியத்துவம்!!!

இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை 14ம் நாள்) சதுர்த்தசி திதியில், அமாவாசைக்கு முந்தைய நாள் இரவில் மகாசிவராத்திரி கொண்டாடப்படும். மகாசிவராத்திரி நோம்பு முறைகளை பற்றி கூறும் மகாசிவராத்திரி எனும் சிறிய நூலொன்றும் இருக்கிறது.

சிவராத்திரி ஸ்பெஷல்: சிவபெருமான் ஏன் பாங் என்னும் சோமபானத்தை குடிக்கிறார்...?

இனி, மகாசிவராத்திரி வழிபாடு எப்படி தோன்றியது, எதற்காக இந்நாளில் சிவபெருமானை வழிபடுகிறோம் என்பதை கூறும் கதைகளை பற்றிப் பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பார்வதி தேவியின் விளையாட்டு

பார்வதி தேவியின் விளையாட்டு

ஒரு முறை, பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் பொத்தினாள். உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய - சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டு, உலகம் எங்கும் காரிருள் சூழ்ந்தது. உலக மக்கள் மற்றும் தேவர்கள் கலங்கி நிழையிழந்து போனார்கள்.

நெற்றிக்கண்

நெற்றிக்கண்

உடனே சிவபெருமான் தனது நெற்றியில் உள்ள அக்னிமயமான மூன்றாவது கண்ணைத் திறந்தார். இந்த நெருப்புச் சுவாலைகள் தெரிக்கும் கண்ணொளி கண்டு அனைவரும் மேலும் பயந்தனர்.

சிவபெருமானை தொழுத பார்வதி

சிவபெருமானை தொழுத பார்வதி

அப்போது உமையவள். பரமேஸ்வரனைத் தொழுது பணிந்தாள். இப்படி சக்திதேவி வழிபட்டதன் நினைவாகத் தொடர்ந்து மகாசிவராத்திரி வழிபாடு நடந்து வருகிறது, கொண்டாடப்படுகிறது என ஓர் கதை கூறப்படுகிறது.

பார்வதி வேண்டிய வரம்

பார்வதி வேண்டிய வரம்

சிவபெருமானை பார்வதி வழிபட்ட இந்நாளில் நான் எவ்வாறு தங்களை வழிபட்டேனோ... அந்த முறைப்படி தங்களை வழிபடுபவர்களுக்கு இம்மையில் செல்வமும் மறுமையில் சொர்க்கமும், இறுதியில் மோட்சமும் தரவேண்டும் என்று சிவனிடம் வேண்டிக் கொண்டாள். அப்படியே ஆகட்டும் எனச் சிவபெருமானும் அருள்பாலித்தார்.

பாவங்கள் போக்கும் மகாசிவராத்திரி

பாவங்கள் போக்கும் மகாசிவராத்திரி

இதனால் தான் மகாசிவராத்திரி அன்று உறங்காமல், கண்விழித்து விரதம் இருந்து வந்தால். பாவங்கள் கழியும், மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு மக்கள் சிவனை வழிபட்டு வருகிறார்கள்.

பாற்கடல் விஷம்

பாற்கடல் விஷம்

பாற்கடலில் தோன்றிய விஷத்தை அருந்திய பின்னர், மயங்கியது போலக் கிடந்து திருவிளையாடல் புரிந்த சிவனார், திரயோதசி நாளில் மாலை வேளையில் சந்தியா நடனம் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்த சதுர்த்தசி இரவின் நான்கு யாமங்களிலும், தேவர்கள் அவரை அர்ச்சித்துப் போற்றினர். அதுவே சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது.

சிவராத்திரி வழிபாடு

சிவராத்திரி வழிபாடு

மகா சிவராத்திரிக்கு முந்திய மாலை காலத்தில் நடராஜ மூர்த்தியையும், பிரதோஷ நாயகரையும் வழிபடவேண்டும். தொடர்ந்து, இரவின் முதல் காலத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில் தென்முகக் கடவுளையும், மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில் ரிஷபாரூட (சந்திரசேகரர்) மூர்த்தியையும் வழிபட வேண்டும்.

ஞானநூல்களைப் படிக்கும் வழக்கம்

ஞானநூல்களைப் படிக்கும் வழக்கம்

இந்தத் திருநாளில் கண் விழித்திருக்கும் பக்தர்கள் சிவபுராணம், திருவிளையாடல் கதைகள், அறுபத்து மூவர் வரலாறு முதலான சிவ மகத்துவங்களை விவரிக்கும் ஞானநூல்களைப் படிப்பது, மிகுந்த புண்ணியத்தைத் தரும்.

மனித படைப்புகளுக்கு பிறகு

மனித படைப்புகளுக்கு பிறகு

பூலோகத்தில் உயிர்களைப் படைத்து முடித்ததும், சிவனும் பார்வதியும் கயிலாயமலை திரும்பினர். அப்போது பார்வதி சிவனிடம், உங்களை வழிபடுவதற்கு உகந்த நாள் எது? என்று கேட்டாள். மாசி மாத தேய்பிறை 14ம் நாளான சதுர்த்தசியே (அமாவாசைக்கு முந்திய நாள்) எனக்கு மிகவும் பிரியமானது. அந்நாளே மகாசிவராத்திரி. அன்று உபவாசம் (பட்டினி) இருப்பது சிறப்பு.

மனித படைப்புகளுக்கு பிறகு

மனித படைப்புகளுக்கு பிறகு

அன்றிரவு ஜாமங்களில் நான்குகால பூஜை நடத்த வேண்டும். வாசனைமலர், அலங்காரம் இவற்றை விட வில்வார்ச்சனையே பூஜைக்கு ஏற்றது. நான்கு காலங்களில் முறையே பால், தயிர், வெண்ணெய், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த விரதத்தின் பெருமையை வேறு எந்த விரதத்தோடும் ஒப்பிட முடியாது, என்றார்.

மனித படைப்புகளுக்கு பிறகு

மனித படைப்புகளுக்கு பிறகு

சிவபெருமானின் விருப்பமறிந்த தேவி, தன் தோழியரிடம் இதை தெரிவித்தாள். அவர்கள் பூலோகவாசிகளிடம் எடுத்துக்கூற, எல்லா கோயில்களிலும் மகாசிவராத்திரி பூஜை நடத்தத் தொடங்கினர். விரதங்களில் முக்கியமானதாகக் கருதப்படுவது சிவராத்திரி விரதம். இவ்விரதத்தின் பெருமையைக் கேட்டு யமனும் நடுங்குவதாகவும், எல்லா யாகங்களையும் எல்லா தருமங்களையும்விட மிக உயர்ந்த விரதம் எனவும் கருதப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    The Origin Of MahaShivratri

    The Origin Of MahaShivratri
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more